news

News November 16, 2024

ஆதார் வைத்திருப்பவர்களுக்கு Alert

image

ஆதார் தவறாக பயன்படுத்தப்பட்டதா? என்பதை அறிய… * uidai.gov.in சைட்டில் ஆதார் எண், Captcha, OTP’யை பதிவிட்டு உள்நுழையவும் * Authentication History’யை கிளிக் செய்யவும் * அதில் ‘All’ என்பதை தேர்ந்தெடுத்து, ‘Fetch Authentication History’ஐ கிளிக் செய்தால், ஆதார் எங்கு பயன்படுத்தப்பட்டது என்ற தகவல் கிடைக்கும். உங்களின் ஆதார் தவறாகப் பயன்படுத்தப்பட்டு இருந்தால், 1947 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம்.

News November 16, 2024

கடவுள் பார்த்துக் கொள்வார் தனுஷ்: நயன் காட்டம்

image

நடிகர் தனுஷின் செயல்பாடுகள் நீதிமன்றத்தில் செல்லுபடியானாலும் கடவுளின் நீதிமன்றத்தில் நிலைக்காது என்று நடிகை நயன்தாரா கடுமையாக சாடியுள்ளார். நயன் – விக்னேஷ் சிவன் திருமண வீடியோவில் ‘நானும் ரவுடிதான்’ பட பாடல்களை பயன்படுத்த தயாரிப்பாளர் தனுஷ் தடை விதிப்பதாக நயன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். தனுஷின் செயல்பாடுகளை கடவுள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார் என்றும் அவர் சாடியுள்ளார்.

News November 16, 2024

Breaking: தனுஷ் மீது நயன்தாரா பரபரப்பு குற்றச்சாட்டு

image

தனுஷ் மீது நயன்தாரா பரபரப்பு குற்றச்சாட்டை கூறி, சினிமா துறையை அதிர வைத்துள்ளார். தனுஷின் பழிவாங்கும் நடவடிக்கையால் தானும், தனது கணவரும் கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும் நயன் குறை கூறியுள்ளார். நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ள தனது ஆவணப்படம் தொடர்பாக “நானும் ரவுடி தான்” படக்காட்சிகளை பயன்படுத்த 2 ஆண்டுகளாக காத்திருந்தேன். ஆனால், அதற்கான அனுமதியை இறுதிவரை தனுஷ் தரவில்லை என சாடியுள்ளார்.

News November 16, 2024

பாரதம் வேறு.. இந்தியா வேறு.. ஆளுநரின் புது விளக்கம்

image

பாரதம் என்பது இந்தியா அல்ல; பாரதம் என்பது தார்மீக நாடு, இது மதத்தால் உருவாகவில்லை என்று ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார். பாரத் என்பது இந்தியாவைவிட வேறுபட்டது; ஐரோப்பியர்களே இந்தியா என அழைத்தனர். இந்தியாவின் எல்லா மொழி இலக்கியங்களும் ஒற்றுமையை வலியுறுத்துகின்றன எனக் கூறிய அவர், செப்பு மொழி பதினெட்டு உடையாள் என நாட்டின் ஒற்றுமையை பாரதி எடுத்துரைப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

News November 16, 2024

ரெய்னா – திலக் வர்மாவிற்கும் இவ்வளவு ஒற்றுமையா…

image

இருவரும் நவம்பரில் பிறந்தவர்கள். இடக்கை பேட்ஸ்மேன்கள். ஐபிஎல்லில் 2-வது போட்டியில் முதல் அரைசதம். முதல் ஐபிஎல் சீசனில் 350+ ரன்கள், 10 கேட்ச்கள். 20 வயதில் சர்வதேச T20’யில் அறிமுகம். முதல் அரைசதம் அடித்த போட்டியில், இந்திய அணி தோல்வி – எதிரணி சரியாக 18.5 ஓவர்களில் வெற்றி பெற்றது. முதல் போட்டியிலேயே முதல் விக்கெட் வீழ்த்தினர். 3-வது வரிசையில் இறங்கி SA அணிக்கு எதிராக முதல் சதம் விளாசினார்கள்.

News November 16, 2024

நடிகை கஸ்தூரி ஐதராபாத்தில் பதுங்கல்?

image

நடிகை கஸ்தூரி டெல்லியில் தலைமறைவாக இருப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது ஐதராபாத்தில் இருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு மொழி பேசும் மக்கள் பற்றி அவதூறாக பேசிய விவகாரத்தில், பிரபல திரைப்பட தயாரிப்பாளரின் உதவியுடன் அவர் பாதுகாப்பாக இருக்கிறாராம். இதையறிந்த தமிழக தனிப்படை போலீசார், அவரை கைது செய்ய ஐதராபாத்தில் முகாமிட்டுள்ளனர். இதனால், அவர் விரைவில் கைதாகலாம் என தெரிகிறது.

News November 16, 2024

இன்று தேசிய பத்திரிகை தினம்

image

இந்தியா போன்ற மிகப் பெரிய ஜனநாயக நாட்டில் யார் தவறு செய்தாலும் அவர்களை தட்டிக்கேட்கும் உரிமை பத்திரிகைத்துறைக்கு உண்டு. Fourth Pillar of Democracy என அழைக்கப்படும் பத்திரிகைத்துறையின் சேவைகளை கௌரவிக்கவும், இந்தியாவில் சுதந்திரமான மற்றும் பொறுப்பான பத்திரிகைகளின் இருப்பைக் குறிக்கவும் ‘தேசிய பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா’ தொடங்கப்பட்ட நவ.16ம் தேதி தேசிய பத்திரிகை தினமாக கொண்டாடப்படுகிறது.

News November 16, 2024

குழந்தைகள் பலி: நிதியுதவி அறிவித்த மோடி

image

உ.பி. தீ விபத்தில் 10 குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்திற்கு, பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். “ஜான்சியில் லட்சுமிபாய் அரசு மருத்துவமனையில் நேரிட்ட தீ விபத்து நெஞ்சை உலுக்குகிறது. அப்பாவி குழந்தைகளை இழந்தவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். இந்த துயரத்தை தாங்கும் சக்தியை தர இறைவனை பிரார்த்திக்கிறேன். குழந்தைகளை பறிகொடுத்த குடும்பத்தினருக்கு தலா ₹2 லட்சம் நிதி வழங்கப்படும்” என்றும் அறிவித்துள்ளார்.

News November 16, 2024

இது அதுல feeling கொடுத்த ரஜினி, விஜய், சூர்யா

image

2014ல் வெளிவந்த ரஜினி, விஜய், சூர்யா படங்களுக்கும் இந்த ஆண்டு வெளியான இவர்களின் படங்களுக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது. 2014’ல் ரஜினி 2 படங்களில் நடித்தார். ஒன்று அவரின் மகள் இயக்கியது. மற்றொரு முன்னணி இயக்குநரின் படம். 2 படங்களும் சுமார் ரகமே. விஜய் Dual Roleல் நடிக்க ஒரு கதாபாத்திரத்தின் பெயர் ஜீவா. பெரிய ஹைப்பை கொடுத்த சூர்யாவின் படம் Mixed reviews பெற்றது. எந்தெந்த படங்கள் என தெரிகிறதா?

News November 16, 2024

பகல் 1 மணிக்குள் இங்கெல்லாம் மழை கொட்டும்

image

தமிழகத்தில் பகல் 1 மணிக்குள் 19 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது. அதன்படி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திண்டுக்கல், கரூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

error: Content is protected !!