news

News November 16, 2024

ரேஷன் அட்டைதாரர்கள் இதை இலவசமாக பெறலாம்..

image

தமிழக அரசின் அழுத்தத்தை அடுத்து, கோதுமை ஒதுக்கீட்டை 8,500 டன்னில் இருந்து 17,000 டன்னாக மத்திய அரசு அதிகரித்துள்ளது. இதனால் ரேஷன் கடைகளில் இதுவரை கோதுமைக்கு நிலவிய தட்டுப்பாடு நீங்கியுள்ளது. இதையடுத்து, ரேஷன் அட்டைதாரர்கள் அரிசிக்கு பதில் கோதுமையை இலவசமாக பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் மாவட்ட தலைநகரங்களில் 5 கிலோவும், மற்ற இடங்களில் 2 கிலோவும் கோதுமை வழங்கப்படுகிறது. SHARE IT.

News November 16, 2024

தனுஷ் vs நயன்: யார் செய்வது சரி?

image

நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வணிக நோக்கில் வெளியாகியிருக்கும் நயன்தாராவின் வாழ்க்கை வரலாறு ஆவணப்படத்திற்காக நயன்தாரா ‘நானும் ரவுடிதான்’ பாடல் உரிமத்தை கேட்கிறார். அப்படத்தின் தயாரிப்பாளரான தனுஷ், அதற்கு ராயல்ட்டி தொகை கேட்கிறார். இதில், இருவருக்கு ஆதரவாக குரல்கள் எழுகின்றன. நீங்கள் யாருக்கு ஆதரவு என்று கமெண்ட்டில் காரணத்துடன் சொல்லுங்கள்.

News November 16, 2024

இளையராஜாவாகவே மாறிய தனுஷ்!

image

இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். இந்நிலையில், ’நானும் ரவுடிதான்’ படப்பாடலை பயன்படுத்த நயன்தாராவிடம் தனுஷ் ராயல்ட்டி தொகை கேட்டிருக்கும் சம்பவம் அவரை இளையராஜாவுடன் ஒப்பிட வைத்துள்ளது. இளையராஜா அவ்வப்போது தன்னுடைய பாடல்களுக்கு ராயல்ட்டி கேட்பதால், இருவரையும் வைத்து மீம் போட்டு கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

News November 16, 2024

தனுஷ் விவகாரம்: நயனுக்கு ஆதரவாக திரளும் நடிகைகள்!!

image

தனுஷ் மீது நயன்தாரா, அவரது கணவர் விக்னேஷ் சிவன் வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் சலசலப்பை உண்டாக்கியுள்ளது. நயன்தாரா வெளியிட்ட பதிவினை லைக் செய்து, நடிகைகள் பலர் ஆதரவு அளித்துள்ளார்கள். நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், நஸ்ரியா, பார்வதி, ஸ்ருதிஹாசன், மஞ்சிமா மோகன், அஞ்சு குரியன், அனுபமா ஆகியோர் லைக் செய்துள்ளார்கள். இவ்விவகாரத்தில் தனுஷ் பதிலளிப்பார் என அவரின் வழக்கறிஞர் அருண் தெரிவித்திருக்கிறார்.

News November 16, 2024

திமுகவை அதிமுக வீழ்த்தும்: தங்கமணி

image

வரும் தேர்தலில் திமுகவை வீழ்த்தி அதிமுக 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்று முன்னாள் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு 6% வாக்கு குறைந்தது; அதேபோல், வரும் தேர்தலிலும் 6% குறையும் எனக் கூறிய அவர், பிரிந்து கிடக்கும் அதிமுகவினரில் யாரை மீண்டும் சேர்ப்பது என்பதை இபிஎஸ் தான் முடிவு செய்வார் எனவும் கூறியுள்ளார்.

News November 16, 2024

‘வாழ்க்கையில் பல தோல்விகளை சந்தித்துள்ளேன்’

image

SAக்கு எதிரான 4வது டி20 போட்டியில் சதமடித்து சஞ்சு சாம்சன் அசத்தியுள்ளார். இந்நிலையில் இன்னிங்ஸ் இடைவேளையின் போது உணர்ச்சிப்பொங்க பேசிய அவர், வாழ்க்கையில் பல தோல்விகளை சந்தித்தாலும். கடும் உழைப்புக்குப் பிறகு இவ்வளவு தூரம் வந்திருக்கிறேன். இந்த தொடரில் முதல் போட்டி சதத்திற்கு பிறகு தொடர்ச்சியாக இரண்டு முறை டக் அவுட் ஆனதால், என் மனதில் பல விஷயங்கள் தோன்றின’ என கூறியுள்ளார்.

News November 16, 2024

11 மாவட்டங்களில் இன்று கனமழை

image

தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. அதன்படி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், அரியலுார், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் கனமழையும், சென்னையில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழையும் பெய்யக்கூடும் என கணித்துள்ளது.

News November 16, 2024

‘ED ரெய்டு’ நடந்தது என்ன? ஆதவ் அர்ஜுனா விளக்கம்!

image

ED சோதனை என்பது தனக்கானது அல்ல என VCK துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா விளக்கமளித்துள்ளார். அரசியல் பொதுவாழ்வில் ஈடுபட முடிவெடுத்ததுமே தனது தொழில் நிறுவனங்களின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகிவிட்டதாகவும், வருவாய் ஈட்டக்கூடிய எந்த தொழிலிலும் அது சார்ந்த பொறுப்பிலும் தான் இல்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளார். EDயின் SEARCH ORDER தனது பெயரில் இல்லை என்றும் கூறியுள்ளார்.

News November 16, 2024

தனுஷ் செய்வது கீழ்த்தரமான செயல்: நயன்

image

’நானும் ரவுடிதான்’ படப்பாடல்களை பயன்படுத்த அனுமதிக்காத விவகாரத்தில் தனுஷ் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார் நயன்தாரா. ‘கீழ்த்தரமான இந்த செயல், ஒரு மனிதராக நீங்கள் எப்படிப்பட்டவர் என்று காட்டுகிறது’, ‘உங்களது இழிவான செயல்களை மறைக்க போலி முகமூடி அணிகிறீர்கள்’, ‘உங்களது அநாகரீக செயல்களை தமிழ்நாட்டினர் ஏற்க மாட்டார்கள்’ என்ற கடுமையான வரிகளை நயன் அறிக்கையில் பயன்படுத்தியிருக்கிறார்.

News November 16, 2024

3 செகண்ட் வீடியோவிற்கு ₹10 கோடி: நயன் ஷாக்

image

3 விநாடி ’நானும் ரவுடிதான்’ படப்பாடல்களை பயன்படுத்த தயாரிப்பாளர் தனுஷ் ₹10 கோடி கேட்பதாக நயன்தாரா குற்றம்சாட்டியுள்ளார். நயன் – விக்னேஷ் சிவன் திருமண ஆவணப்பட முன்னோட்டம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளது. அதற்கு தனுஷ் கட்டணம் கேட்பதாக குற்றம்சாட்டியுள்ள நயன்தாரா, அதனை மீண்டும் எடிட் செய்ய முடிவு செய்திருப்பதாகவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!