India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புரோ கபடி தொடரில் பெங்களூரு அணியை வீழ்த்தி டெல்லி அணி வெற்றிபெற்றுள்ளது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் அபாரமாக விளையாடிய டெல்லி அணி, போட்டியின் தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தியது. இதனால் ஆட்ட நேர முடிவில் 35-25 என்ற புள்ளிகள் கணக்கில் டெல்லி வெற்றி பெற்றது. 12 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் ஹரியானா அணி முதலிடத்தில் உள்ளது.
அம்பேத்கருக்கு காங்கிரஸ் மரியாதை கொடுத்ததில்லை என ராஜ்நாத் சிங் விமர்சித்துள்ளார். மகாராஷ்டிராவில் பேசிய அவர், காங்கிரஸ் வறுமையை ஒழிப்பதாக 50 ஆண்டுகளாக பேசி வருகிறார்களே தவிர, அவர்களால் அதை செய்ய முடியவில்லை என்றார். சாதிவாரி கணக்கெடுப்பை பற்றி பேசி ராகுல் மக்களிடம் பிரிவினையை ஏற்படுத்துவதாகவும், காங்கிரஸின் அந்த முயற்சியை மக்கள் நிச்சயம் முறியடிப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
இன்று (நவ.17) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
இன்று (நவ. 17) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
தெரியாத எண்ணில் இருந்து வரும் திருமண அழைப்பிதழ் மூலம் உங்கள் போன் ஹேக் செய்யப்படலாம் என நிபுணர்கள் எச்சரிக்கை செய்கின்றனர். மோசடிக்காரர்கள் பத்திரிக்கை போல் போலியான PDF-ஐ அனுப்புகின்றனர். இதை தெரியாத மக்கள், அதை க்ளிக் செய்வதால் APK ஃபைல் டவுன்லோடு ஆகிறது. இதனால், உங்கள் மொபைலின் அக்ஸஸ் மோசடிக்காரர்களுக்கு சென்றுவிடும். உங்களது அனைத்து சென்சிடிவ் டேட்டாக்களும் அவர்களது கை அசைவில் இருக்கும்.
விலங்குகள் மற்றும் பறவைகளை வளர்ப்பது சிலருக்கு பொழுதுபோக்காக உள்ளது. சிலர் அவற்றை வைத்திருப்பதை பெருமையாகவும், கவுரவமாகவும் கருதுகின்றனர். இதன் காரணமாக செல்லப்பிராணிகள் நினைத்துப் பார்க்க முடியாத அளவில், அதிகமான விலைக்கு விற்பனையாகிறது. திபெத்திய மாஸ்டிஃப்: ₹20 லட்சம், சவன்னா பூனை: ₹42 லட்சம், Hyacinth Macaw: ₹40 லட்சம், Palm Cockatoo: ₹17 லட்சம், Koi fish: ₹1.5 லட்சம் வரை விற்பனையாகிறது.
➤மேஷம் – வெற்றி
➤ரிஷபம் – அமைதி
➤மிதுனம் – போட்டி
➤கடகம் – களிப்பு
➤சிம்மம் – மறதி
➤கன்னி – ஈகை
➤துலாம் – தடங்கல்
➤விருச்சிகம் – பொறுமை
➤தனுசு – ஆதாயம் ➤மகரம்- தாமதம்
➤கும்பம் – எதிர்ப்பு ➤மீனம் – மகிழ்ச்சி
ஃபோனுக்கு அடிமையான மகனை கிரிக்கெட் பேட்டால் அடித்தும், தலையை சுவற்றில் முட்டியும் கொன்ற கொடூர தந்தை குமாரை பெங்களூரு போலீசார், நேற்று கைது செய்தனர். காலை முதல் மதியம் வரை வலியால் துடித்தபோதும் கண்டுகொள்ளதவர், மூச்சு பேச்சு இல்லாத பின்னரே ஹாஸ்பிடலில் சேர்த்துள்ளார். மகன் இறந்ததாக டாக்டர்கள் கூறவே, வேகவேகமாக இறுதி சடங்கு செய்ய முயன்ற குமாரை, தகவல் அறிந்து வந்த போலீசார் தட்டித் தூக்கினர்.
அலையாய் அலைந்து வரன் தேடிய அடுத்த நிமிடமே, திருமண செலவுகளுக்கு என்ன செய்யப்போகிறோம் என்பதுதான் பெரும்பாலானவர்களின் கேள்வியாக உள்ளது. அவர்களுக்காகவே WeddingLoan.com என்ற கடன் வழங்கும் தளத்தை Matrimony.com அறிமுகப்படுத்தியுள்ளது. IDFC, டாடா கேபிட்டல் உள்ளிட்ட சில நிதி நிறுவனங்களுடன் இணைந்து இந்த சேவையை Matrimony.com வழங்க உள்ளது. இதில் திருமணத்திற்கு தேவையான நிதியை மணமக்கள் பெறலாம்.
ரயிலின் AC முதல் வகுப்பு பெட்டிகளில் செல்லப் பிராணிகளை அழைத்து செல்லும் வசதியை, கடந்த மே மாதம் ரயில்வே நிர்வாகம் அறிமுகப்படுத்தியது. இந்த வசதியை இதுவரை 700க்கும் மேற்பட்டோர் பயன்படுத்தியுள்ளனர். இந்த வசதியை பயன்படுத்த விரும்புவோர், பயணத்திற்கு 3 மணி நேரத்திற்கு முன்பே செல்லப் பிராணிகளை ரயில் நிலையம் அழைத்துச் சென்று, அனைத்து தடுப்பூசிகளையும் செலுத்தியதற்கான சான்றிதழ்களை காண்பித்தல் அவசியமாகும்.
Sorry, no posts matched your criteria.