India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
CM ஸ்டாலின், Dy CM உதயநிதி, சபரீசன் ஆகியோர் வீடுகளில் ED ரெய்டு உறுதியாக நடக்கும் என அதிமுகவின் தம்பிதுரை தெரிவித்துள்ளார். சிறை சென்ற கெஜ்ரிவால் நிலை, அமைச்சர் செந்தில்பாலாஜி, CM ஸ்டாலினுக்கும் ஏற்படுமோ என்று தோன்றுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் முழு பூசணிக்காயை ஸ்டாலின் மறைக்கப் பார்ப்பதாகவும் தம்பிதுரை விமர்சித்துள்ளார்.
இந்திய போர் விமானத்தின் மீது GPS தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மியான்மரில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருள்களை எடுத்து செல்லும் போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. உடனே சுதாரித்த விமானிகள், விமானத்தை INS-க்கு (Internal Navigation System) சுவிட்ச் செய்து சரியான பாதையில் சென்றனர். GPS சைபர் தாக்குதல் மூலம், பொய்யான சிக்னல்களை கொடுத்து விமானத்தை தவறாக வழி நடத்த முடியும்.
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் இன்று தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுகிறது. அதிகாலை 5 மணியளவில் நடைதிறக்கப்பட்டு சிறப்பு, அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து வெள்ளி மூஷிக வாகனத்தில் மூலவர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். காலை 9 மணிக்கு தீர்த்தவாரி நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து மாலை 6 மணிக்கு மேல் புத்தாண்டையொட்டி பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்கும் வகையில், இன்று நள்ளிரவு முதல் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்துள்ளது. இன்று முதல் ஜூன் 14ஆம் தேதி வரை மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மீன்பிடி தடைக்காலத்தின் போது மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதைக் கருத்தில் கொண்டு, மீனவர் குடும்பங்களுக்கு தலா ₹8 ஆயிரம் வீதம் மீன்பிடித் தடைக்கால நிவாரணம் தமிழக அரசால் வழங்கப்படுகிறது.
பெண்களை மிக மோசமாக பேசிய அமைச்சர் பொன்முடியை கைது செய்ய வேண்டும் என்று இந்து மக்கள் கட்சித் தலைவர் அா்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார். அண்ணாமலையை தலைவர் பதவியில் இருந்து நீக்கியது கட்சியின் முடிவு. ஆனால், அவர் பாஜகவின் அடையாளம் எனக் கூறிய அவர், புதிய மாநிலத் தலைவராக தேர்வாகியுள்ள நயினார் நாகேந்திரன், அண்ணாமலையுடன் இணைந்து செயல்பட்டு, திராவிட மாடல் ஆட்சியை அகற்ற வேண்டும் எனத் தெரிவித்தார்.
தமிழ் புத்தாண்டு தினத்தையொட்டி தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது. புத்தாடை உடுத்தி, தேங்காய், பூ, பழத்துடன் அதிகாலையிலேயே பொதுமக்கள் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்தினர். பிறந்திருக்கும் விசுவாவசு ஆண்டில் அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியும், நிம்மதியும் நிலைத்திருக்க Way2news சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
பணம், பட்டம் பதவிகளுக்காக நாம் போராடவில்லை, நம் வாழ்வின் அடிப்படை உரிமைகளுக்காகவும் மனிதர்களாக வாழ்வதற்காகவுமே போராடுகிறோம் என்று ஒடுக்கப்பட்ட மக்களுக்காக முழங்கியவர் அம்பேத்கர். தான் வாழ்நாள் முழுவதும் சாதி ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக போராடிய அவர், தலித் மக்களுக்கு மட்டுமல்ல, பிற்படுத்தப்பட்ட மக்களுக்காகவும் போராடியவர். பெண்கள் உரிமை, தொழிலாளர் நலன் ஆகியவற்றிலும் அவரது பங்களிப்பு மகத்தானது.
பாஜக உடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிமுகவில் இருந்து அக்கட்சியினர் அடுத்தடுத்து விலகி வருகின்றனர். இந்நிலையில், கரூர் அதிமுக தெற்கு நகர மீனவரணி செயலாளர், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை தெற்கு நகர துணைச் செயலாளர் உள்ளிட்ட பலர் அதிமுகவில் இருந்து விலகி, செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளனர். ஏற்கெனவே, நேற்று அதிமுக EX MLA கேஏயு.அசனா விலகியது குறிப்பிடத்தக்கது
ரேஷன் அட்டைகளில் கைவிரல் ரேகை பதிவு கட்டாயமாக்கப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெறுகிறது. முன்பு பயோமெட்ரிக் பதிவு 40% உறுதியானால் போதும் எனக் கூறப்பட்ட நிலையில், தற்போது 90% ஆக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் முதியோர் பலர் கைவிரல் ரேகை தேய்ந்த நிலையில், பயோமெட்ரிக் பதிவாகாமல் அல்லாடுகின்றனர். பலர் 30 நிமிட நேரம் வரை காத்திருப்பதாகக் கூறப்படுகிறது. கவனிக்குமா அரசு?
கடந்த நிதியாண்டில் 54 லட்சத்துக்கும் மேற்பட்ட பைக், ஸ்கூட்டர்களை விற்று நாட்டின் நம்பர் 1 டூ வீலர் நிறுவனம் என்ற பெயரை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தக்க வைத்துக் கொண்டுள்ளது. இதையடுத்து ஹோண்டா இந்தியா நிறுவனம் 47,89,283 பைக்குகள், ஸ்கூட்டர்களை விற்று 2-வது இடத்தை பிடித்துள்ளது. டிவிஎஸ் நிறுவனம் 33,01,781 பைக், ஸ்கூட்டர்கள் விற்று 3-வது இடத்தில் உள்ளது. நீங்க எந்த பைக் வச்சிருக்கீங்க?
Sorry, no posts matched your criteria.