news

News November 17, 2024

சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: இந்தியா வெற்றி

image

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டியில் சீனாவை (3-0) வீழ்த்தி இந்திய பெண்கள் அணி அரையிறுதிக்கு முன்னேறியது. ஆட்டத்தின் 32-வது நிமிடத்தில் சங்கீதா குமாரும், 37-வது நிமிடத்தில் கேப்டன் சலிமா டேடேவும் கோல் அடித்தனர். கடைசி நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி தீபிகா கோல் அடித்தார். ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற சீனாவை இந்திய அணி வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

News November 17, 2024

யாருக்காகவும் காத்திருக்க மாட்டோம்: பிரேமலதா

image

யார் வரவுக்காகவும் இன்னொரு கட்சி வேலை செய்ய வேண்டிய அவசியம் இல்லை என TVK-வை பிரேமலதா மறைமுகமாக விமர்சித்துள்ளார். திருவள்ளூரில் பேசிய அவர், சட்டம் ஒழுங்கு முற்றிலுமாக சீரழிந்து, தமிழ்நாட்டின் பாதுகாப்பே கேள்விக்குறியாக இருப்பதாக குறை கூறினார். எதிர்வரப்போகும் மழை வெள்ளத்திற்கு எந்த முன்னெச்சரிக்கையும் தமிழக அரசு எடுக்கவில்லை என்று கூறிய அவர், இதுதான் திராவிட மாடலா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

News November 17, 2024

மின்தடை: கிண்டி ஹாஸ்பிட்டலில் மா.சு ஆய்வு

image

கிண்டி கவர்மெண்ட் ஹாஸ்பிட்டலில் ஏற்பட்ட திடீர் மின்தடை தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். நேற்றிரவு திடீரென ஏற்பட்ட மின்தடையால், சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இதுதொடர்பாக ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் மா.சு, மின்தடை விரைந்து சரிசெய்யப்பட்டு வருவதாகவும், நோயாளிகள் யாருக்கும் எவ்வித பாதிப்பு ஏற்படவில்லை எனவும் தெரிவித்தார்.

News November 17, 2024

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால்
▶அதிகாரம்: செய்ந்நன்றி அறிதல்
▶குறள் எண்: 101
▶குறள்:
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.
▶பொருள்: தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறன் தனக்கு செய்த உதவிக்கு மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கைமாறாகக் கொடுத்தாலும் ஈடாகாது.

News November 17, 2024

பன்னீர் ரோஜாவில் மறைந்திருக்கும் மகத்துவங்கள்

image

பன்னீர் ரோஜா சித்த மருத்துவத்தில் ஒரு சிறப்பு வாய்ந்த மூலிகையாக பயன்படுகிறது. அஜீரணத்தைச் சரி செய்யும் தன்மை இதில் அதிகம் உள்ளது. இதன் சாறு அல்லது கசாயம் குடிப்பதன் மூலம் பித்தம் மற்றும் உடலில் சூட்டை குறைக்க முடியும். இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் சருமத்துக்கு நல்ல பொலிவு மற்றும் மென்மை அளிக்கிறது. இதன் பூக்களை எடுத்து அதைப் பசும்பாலில் கலந்து முகத்தில் பூசினால் சருமம் பளபளப்பாக மாறும்.

News November 17, 2024

ஸ்டெர்லைட் தடையை மறுஆய்வு செய்ய கோரிய மனு தள்ளுபடி

image

ஸ்டெர்லைட் தடையை மறுஆய்வு செய்ய கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மறு ஆய்வு மனு மீது உச்சநீதிமன்றம் விசாரணை நடந்த நிலையில், இந்த தீர்ப்பு வெளியாகி உள்ளது. ஏற்கெனவே அளிக்கப்பட்ட தீர்ப்பில் எந்த பிழையும் இல்லை எனவும், மறு ஆய்வுக்கான காரணம் குறித்து மனுவில் எதுவும் சொல்லப்படவில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

News November 17, 2024

இன்றைய நல்ல நேரம்

image

▶நவம்பர் – 17 ▶கார்த்திகை – 02
▶கிழமை: ஞாயிறு
▶நல்ல நேரம்: 07:45AM – 08:45AM & 03:15PM – 04:15PM
▶கெளரி நேரம்: 10:45AM – 11:45AM & 01:30PM – 02:30PM
▶ராகு காலம்: 04:30 PM – 06:00 PM
▶எமகண்டம்: 12:00PM – 01:30 PM
▶குளிகை: 03:00 AM – 04:30 AM
▶திதி: துவிதியை ▶சூலம்: மேற்கு
▶பரிகாரம்: வெல்லம்

News November 17, 2024

ஒற்றுமையை குலைக்க பாஜக முயற்சி: ஹேமந்த் சோரன்

image

மக்களின் ஒற்றுமையை குலைக்க பாஜக தொடர்ந்து முயற்சி செய்து வருவதாக ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் குற்றஞ்சாட்டியுள்ளார். அம்மாநில தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், பாஜகவின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு வாக்காளர்கள் மயங்கிவிடக் கூடாது என வேண்டுகோள் விடுத்தார். பாஜகவின் சந்தர்ப்பவாத அரசியலை மக்கள் முறியடித்து, மீண்டும் வெற்றியை தர வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

News November 17, 2024

கிண்டி ஹாஸ்பிட்டலில் மின்தடை: நோயாளிகள் அவதி

image

கிண்டி கவர்மெண்ட் ஹாஸ்பிட்டலில் திடீர் மின்தடையால் நோயாளிகள் கடும் அவதியுற்றனர். மின்சாரம் செல்லக்கூடிய கேபிள்களில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் மின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. உடனடியாக பாதிப்பு சரி செய்யப்பட்டதாகவும், யாருக்கும், எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் சுகாதாரத் துறை செயலாளர் சுப்ரியா சுலே கூறியுள்ளார். இது தொடர்பாக விசாரணை நடைபெறுவதாகவும் அவர் தெரிவித்தார்.

News November 17, 2024

புரோ கபடி: டெல்லி அணி வெற்றி

image

புரோ கபடி தொடரில் பெங்களூரு அணியை வீழ்த்தி டெல்லி அணி வெற்றிபெற்றுள்ளது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் அபாரமாக விளையாடிய டெல்லி அணி, போட்டியின் தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தியது. இதனால் ஆட்ட நேர முடிவில் 35-25 என்ற புள்ளிகள் கணக்கில் டெல்லி வெற்றி பெற்றது. 12 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் ஹரியானா அணி முதலிடத்தில் உள்ளது.

error: Content is protected !!