news

News November 17, 2024

தனுஷ்- நயன் மோதல்: வெளியான புது தகவல்!

image

‘நானும் ரவுடி தான்’ பட காட்சிகள், பாடலை நயனின் ஆவணப்படத்தில் பயன்படுத்திவிட்டு அதன் பிறகு அனுமதி கேட்டதால், தனுஷ் அனுமதி மறுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், போனில் எடுத்த பட காட்சிகளை நயன் தரப்பு பயன்படுத்தியதால், தனுஷ் மேலும் கோபமடைந்துள்ளார். அத்துடன், பிரபலங்கள் பலரிடம் இருந்து அழுத்தம் தரப்பட்டதால் வெறுப்படைந்த தனுஷ், சட்டரீதியாக நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

News November 17, 2024

இன்று வெளியாகிறது ‘புஷ்பா 2’ ட்ரெயிலர்

image

சுகுமார், அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் ‘புஷ்பா 2 தி ரூல்’ படத்தின் ட்ரெயிலர் இன்று மாலை 6.03 மணிக்கு வெளியாக உள்ளது. சமீபத்தில் படத்தின் டீசரும், அதனைத் தொடர்ந்து படத்தின் பாடல்களின் லிரிக் வீடியோவும் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றது. இப்படம் அடுத்த மாதம் 5-ம் தேதி உலகளவில் வெளியாகவுள்ளது. புஷ்பா முதல் பாகம் போல் 2ஆம் பாகம் இருக்குமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

News November 17, 2024

Finance Tips: கடன் பத்திரங்களில் முதலீடு செய்யலாமா?

image

பங்குச்சந்தையில் கடன் பத்திரங்களில் செய்யப்படும் முதலீடு பெருமளவு நஷ்டமின்றி, வருமானத்தை அளிப்பதாக நிதி ஆலோசகர்கள் கூறுகின்றனர். இந்த கடன் பத்திரங்களில் தனிநபர்கள் நேரடியாகவோ (அ) MF மூலமாகவோ முதலீடு செய்யலாம். புதிய முதலீட்டாளர்கள் முதலில் குறைந்த தொகையுடன் முதலீடு செய்து அனுபவத்தைப் பெறலாம். அவற்றின் வட்டி விகிதம், கால அளவு, விலகல் & செயல்பாட்டு விதிகளை அறிய வேண்டியது முக்கியம் என்கின்றனர்.

News November 17, 2024

பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் வராதா?

image

TN அரசு தகவல் தொகுப்பு மையம், ஓய்வூதிய இயக்குனரகம், சிறு சேமிப்பு இயக்குனரகம் ஆகியவை கருவூலங்கள் கணக்கு துறையுடன் இணைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசில் ஓய்வூதியர்களுக்கு தனித்துறை இருக்கும்போது, TNல் பல ஆண்டுகளாக இயங்கி வந்த ஓய்வூதிய இயக்குனரகம் மூடப்பட்டுள்ளது. இதன் மூலம் TN அரசு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தாது என்பது வெளிச்சமாகியுள்ளதாக தலைமை செயலக சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

News November 17, 2024

3-வது வாரத்தில் லியோ, கோட் படங்களை முந்திய அமரன்

image

SK நடிப்பில் வெளியாகியுள்ள அமரன் பிளாக்பஸ்டர் ஹிட் படமாகியுள்ளது. இதுவரை சுமார் ரூ.280 கோடி வசூலை படம் நெருங்கி விட்டதாக தெரிவிக்கப்படும் சூழலில், தற்போது விஜய் படங்களின் சாதனையை அமரன் முறியடித்துள்ளது. 3-வார வெள்ளிக்கிழமையில் லியோ – 61.4K டிக்கெட்டுகளும், கோட் – 54.95K டிக்கெட்டுகளும் விற்றது. இதனை முறியடித்து அமரனுக்கு 115.05K டிக்கெட்டுகள் விற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

News November 17, 2024

சைனஸை விரட்டி அடிக்கும் சித்தரத்தை தேநீர்

image

மழை & பனிக்காலத்தில் காய்ச்சல், இருமல், மூக்கடைப்பு, சைனஸ், தலைவலி, மூச்சிரைப்பு, உடல்சோர்வு போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்படுவோர் சித்தரத்தை டீயைப் பருகலாம் என சித்த மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். சித்தரத்தைப் பொடி, சுக்கு, மிளகு, தனியா, ஏலக்காய் சேர்த்து நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, தேன் சேர்த்தால் மணமிக்க சுவையான சித்தரத்தை தேநீர் ரெடி. இந்த டீயை எப்போது வேண்டுமானாலும் பருகலாம்.

News November 17, 2024

30 நொடிகளில் உலகைச் சுற்றி…

image

➤உக்ரைனுக்கு உதவியை தொடர்ந்து செய்ய உறுதி பூண்டு இருப்பதாக G7 நாடுகள் கூட்டாக மீண்டும் அறிவித்துள்ளன. ➤அமெரிக்க புதிய அரசின் வெள்ளை மாளிகை தலைமை செய்தித் தொடர்பாளராக கரோலின் லேவிட் நியமிக்கப்பட்டுள்ளார். ➤காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் இதுவரை 43,799 பேர் கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ➤40% மக்கள் பாகிஸ்தானை விட்டு வெளியேற விரும்புவதாக IOM ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.

News November 17, 2024

விளையாட்டு துளிகள்

image

➤புரோ கபடி தொடர்: 57வது லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ் 46-31 என்ற புள்ளி கணக்கில் பெங்கால் வாரியர்ஸை வீழ்த்தியது. ➤ஹாக்கி ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை: இந்திய மகளிர் அணி அரையிறுதிக்கு முன்னேறியது. ➤பிளிட்ஸ் செஸ்: ஓபன் பிரிவில் 9ஆவது சுற்று முடிவில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா (6 புள்ளி) 2வது இடத்தை பிடித்துள்ளார். ➤ரஞ்சி கிரிக்கெட்: ரோட்டாக்கில் நடந்த ஹரியானா-கேரளா இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது.

News November 17, 2024

அதிமுகவுடன் கூட்டணி சேர 80 சீட் கேட்கும் விஜய்?

image

அதிமுகவுக்கு 154, தவெகவுக்கு 80 என தொகுதி பங்கீடு செய்து, 2026 தேர்தலை கூட்டாக சந்திக்க இரு கட்சிகளும் பேசி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்லை என நிர்வாகிகள் கூறுகின்றனர். இதன் மூலம், விஜய் முன்மொழிந்த இலக்கை இபிஎஸ் வழி மொழிவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அப்படி நடந்து வெற்றியும் வசமானால், இபிஎஸ் முதல்வர், விஜய் துணை முதல்வராகலாம் எனக் கூறப்படுகிறது.

News November 17, 2024

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை..

image

தமிழகத்தில் காலை 10 மணிக்குள் 11 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது. அதன்படி, கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், ராமநாதபுரம், விழுப்புரம், தஞ்சை, பெரம்பலூர், அரியலூர், குமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்கிறதா?

error: Content is protected !!