news

News October 17, 2024

வெறும் மழைக்கே அரசு அலறுகிறது: இபிஎஸ்

image

சென்னையில் வெள்ளப் பாதிப்புகளை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என இபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார். வெள்ளை அறிக்கை கேட்டால் முதிர்ச்சியில்லாமல் துணை முதல்வர் உதயநிதி பதிலளிப்பதாகக் குற்றஞ்சாட்டிய அவர், எதிர்க்கட்சி வெள்ளை அறிக்கை கேட்டால் அதை தருவது அரசின் கடமை என்றும் சாடினார். மேலும், வெறும் மழைக்கே திமுக அரசு அலறுவதாகவும், அதிமுக அரசு பல புயல்களை சந்தித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

News October 17, 2024

ரோஹித் retention புதிய அப்டேட்

image

இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மாவை மும்பை இந்தியன்ஸ் அணி தக்கவைக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பிசிசிஐ விதிமுறைப்படி ஒரு அணி, ஒரு uncapped வீரர் உள்பட 6 வீரர்களை தக்கவைத்துக் கொள்ள முடியும். அதன்படி மும்பை அணி ரோஹித், ஹர்திக், பும்ரா, சூர்யகுமார் யாதவை தக்கவைக்க முடிவு செய்துள்ளது. உங்களுக்கு ஐபிஎல்லில் ரோஹித்தை வேறு எந்த அணியில் பார்க்க ஆசை என்பதை கமெண்ட்டில் கூறவும்

News October 17, 2024

நவீனமயமாகும் ஹூண்டாய் தொழிற்சாலை!

image

இருங்காட்டுக்கோட்டையில் உள்ள ஹூண்டாய் தொழிற்சாலையை ₹1,500 கோடி செலவில் நவீனமயமாக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தற்போது 5.40 லட்சம் சதுர அடியில் ஆலை செயல்பட்டு வரும் நிலையில், கூடுதலாக 1.81 லட்சம் சதுர அடியில் ஆலையை விரிவாக்கம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கூடுதலாக 155 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. தற்போது அங்கு 19,706 பேர் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

News October 17, 2024

குடியுரிமை சட்டத்தின் 6A பிரிவு செல்லும்

image

வங்கதேசத்தில் இருந்து குடியேறியவர்களுக்கு வழங்கப்பட்ட அசாம் குடியுரிமை செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 1966 – 1971ம் ஆண்டுக்கு இடையே அசாமில் குடியேறிய வங்கதேசத்தவர்களுக்கு 6A சட்டப்பிரிவு மூலம் குடியுரிமை வழங்கப்பட்டது. அசாமில் மட்டும் இச்சட்டப்பிரிவை அமல்படுத்துவதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இதில், 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில், 4 நீதிபதிகள் ஒரே தீர்ப்பை வழங்கினர்.

News October 17, 2024

பிரபல பாடகர் லியாம் பைன் உயிரிழந்தார்

image

பிரபல பாப் பாடகர் லியாம் பைன் (31) உயிரிழந்தார். இசை நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க அர்ஜென்டினா சென்ற அவர், அங்கு Buenos Aires நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றின் பால்கனியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 2010-ல் லண்டனில் பிரபலமான ONE DIRECTION குழுவில் இணைந்து முன்னணி பாடகராக திகழ்ந்தார். பின் 2016ல் இசைக்குழு கலைக்கப்பட்ட பின் தனிப் பாடகராக வலம் வந்தார்.

News October 17, 2024

மதுவிலக்கு மாநிலத்தில் ஓயாத மரண ஓலம்

image

பிஹாரில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது. ஷிவான், சரண் ஆகிய மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்தவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஏற்கெனவே 7 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் 13 பேர் உயிரிழந்துள்ளனர். 2016 முதல் மதுவிலக்கு அமலில் இருக்கும் மாநிலத்தில் கள்ளச்சாராய மரணங்கள் ஆண்டுதோறும் பதிவாவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News October 17, 2024

பொது அறிவு வினா – விடை

image

1) யாரும் மதவழிபாடு செய்யக்கூடாது என்ற சட்டம் நடைமுறையில் உள்ள நாடு எது? 2) சுறா மீன்களுக்கு மொத்தம் எத்தனை கருப்பைகள் உள்ளன? 3) கால்கள் மூலம் உணவின் ருசியை உணரும் பூச்சி எது? 4) உலகின் மிக நீளமான கடற்கரை எது? 5) சுவாசிக்காமல் வாழும் நுண் உயிரி எது? 6) LoC என்பதன் விரிவாக்கம் என்ன? 7) 2 துறைகளில் நோபல் பரிசு பெற்ற ஒரே விஞ்ஞானி யார்? விடைகளை கமெண்ட்டில் சொல்லுங்க. சரியான விடையை 2 மணிக்கு பாருங்க.

News October 17, 2024

ஆங்கிலம் அறிவோம்: Confident Vs Confidant

image

Confident, Confidant ஆகிய இரு சொற்களும் நம்பிக்கையை குறிக்கும் சொற்கள். இருந்தாலும் இவை இரண்டும் ஒன்றல்ல. இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தை இங்கே விரிவாகக் காணலாம். Confidence என்றால் நம்பிக்கை. இது ஒரு வினைச்சொல். Confidant என்றால் நம்பிக்கையைப் பெற்ற ஒருவர் என்ற பொருளைக் குறிக்கும். இந்த இரு சொற்களும் பிரெஞ்ச் (மூலமொழி லத்தின்) கிளைத்த Con + Fidere (Force+Trust) உருவானதாக சொல் அகராதி கூறுகிறது.

News October 17, 2024

தயவுசெய்து இதை மட்டும் குடிக்காதீங்க!

image

பொடுகு, தோல் தடித்து, சிவந்து, அரிப்பது, வறட்சி, அழற்சி போன்ற தோல் பிரச்னைகளுக்கு தவறான உணவுப் பழக்கமே காரணம் என ஆயுஷ் மருத்துவம் கூறுகிறது. இது தொடர்பாக பேசிய ஆயுஷ் மருத்துவர் ஹரி, “ஒவ்வாமை போன்ற உடல் நல பாதிப்புகளில் இருந்து தப்பிக்க முரண்பட்ட இரு சுவைகளான புளிப்பு, இனிப்பு தன்மை கொண்ட உணவுப் பொருள்களை பாலில் சேர்த்து ‘மில்க் ஷேக்’ என்ற பெயரில் திரவ உணவாக எடுத்துக்கொள்ள கூடாது” என்றார்.

News October 17, 2024

விக்கெட்களை இழந்து தடுமாறும் இந்திய அணி

image

நியூசி.,க்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி தடுமாறி வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த ரோகித் தலைமையிலான இந்திய அணிக்கு பெரும் அதிர்ச்சி கிடைத்தது. ரோகித் சர்மா (2), விராட் கோலி (0), சர்பராஸ் கான் (0) என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். நியூசி. வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் முக்கிய விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது. தற்போது ஜெய்ஸ்வால் (8*) கிரீஸில் உள்ளார். ஸ்கோர் 12/3.

error: Content is protected !!