news

News October 17, 2024

சாதி காய்களை கச்சிதமாக நகர்த்திய முதல்வர்!

image

ஹரியானாவில் 3-வது முறையாக பாஜக வெற்றி வாகை சூடிய நிலையில், முதல்வராக நயப் சிங் சைனி இன்று பதவியேற்றார். அவருடன் 14 அமைச்சர்களும் பதவியேற்றனர். இந்நிலையில், பாஜகவின் வாக்கு வங்கிகளாக உள்ள சாதிகளுக்கு தனது அமைச்சரவையில் சம வாய்ப்பு அளித்துள்ளார் முதல்வர். 2 தலித், 2 பிராமணர்கள், 2 ஜாட் சமூகத்தினர், 4 ஓபிசி, தலா ஒரு ராஜ்புட், ஒரு பனியா, ஒரு சீக்கியர் ஆகியோர் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர்.

News October 17, 2024

”என் பிள்ளைகளுக்கு வழங்கும் அறிவுரை”

image

சினிமா பின்னணி இல்லாத ஒருவர் சாதிப்பதற்கு முன் பல கஷ்டங்களை அனுபவித்து இருப்பார். சிலர் வந்த பாதை மறைந்து விடுவர். ஒரு சிலரே கடந்து வந்த பாதையை மறவாது இருப்பர். அந்தவகையில் தான் சினிமாவில் சாதிப்பதற்கு முன் பட்ட கஷ்டத்தை தனது பிள்ளைகளுக்கு எப்போதும் நினைவூட்டுவேன் என்கிறார் நடிகர் சூரி. நான் மேல.. நீங்க கிழனு எனு நினைப்பு வந்தா உங்க அப்பாவும் கிழ இருந்து தான் வந்தார்னு நினைச்சுக்கோங்க என்கிறார்.

News October 17, 2024

ஜாமின் நிபந்தனை: ‘பாரத் மாதா கி ஜெய்..!’

image

ம.பியில் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும், இந்தியாவிற்கு எதிராகவும் கோஷம் எழுப்பிய ஃபைசல் என்ற நபருக்கு, அம்மாநில உயர்நீதிமன்றம் சில நிபந்தனைகளுடன் ஜாமின் வழங்கியுள்ளது. வழக்கு முடியும் வரை, மாதம் இருமுறை போலீஸ் ஸ்டேஷன் சென்று, தேசிய கொடிக்கு 21 முறை சல்யூட் செய்ய வேண்டும். சல்யூட் அடிக்கும் ஒவ்வொரு முறையும் ‘பாரத் மாதா கி ஜெய்’ சொல்ல வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

News October 17, 2024

காய்ச்சல் அறிகுறி இருந்தால்!

image

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மழை பெய்துள்ளதால், பலருக்கு காய்ச்சல் போன்ற உடல் உபாதைகள் ஏற்படும். அதுபோன்ற அறிகுறி இருப்பவர்கள், இஞ்சி கசாயம் குடித்தால் நிவாரணம் கிடைக்கும். இஞ்சியை சிறுதுண்டுகளாக நறுக்கி, உலர்ந்த திராட்சை, மிளகு, ஏலக்காய் சேர்த்து நன்கு அரைத்து நீர் சேர்த்து, சுண்ட காய்ச்சி வடிகட்டி நாட்டு சர்க்கரை சேர்த்து பருகலாம். மேலும், மருத்துவர்களை அணுகியும் உரிய நிவாரணம் பெறலாம்.

News October 17, 2024

சட்டம் அறிவோம்: BNS பிரிவு 78 என்ன சொல்கிறது?

image

பெண்ணின் விருப்பமின்றி, அவரை தனிப்பட்ட முறையில் நேரடியாகவோ (அ) இணையம், மின்னஞ்சல், செல்ஃபோன் போன்ற மின்னணு சாதனங்களின் ஊடாகவோ ஒரு ஆண் தொடர்புகொள்ள முயற்சிப்பது (அ) பின்தொடர்வது (Stalking) BNS சட்டப் பிரிவு 78இன் படி குற்றமாகும். பெண்களுக்கு எதிரான இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோருக்கு 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படக் கூடிய சிறை & அபராதம் (அ) இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.

News October 17, 2024

ரயில் டிக்கெட் முன்பதிவிற்கான காலம் குறைப்பு!

image

ரயில்களில் டிக்கெட்டை முன்பதிவு செய்வதற்கான காலம் 120 நாட்களில் இருந்து 60 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ரயில்வே வாரியம் இன்று வெளியிட்டுள்ளது. இந்த புதிய அறிவிப்பு நவ. 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அதே நேரத்தில் வெளிநாட்டு பயணிகளுக்கான 365 நாட்கள் என்ற முன்பதிவு கால அளவில் எந்தவொரு மாற்றமும் செய்யப்படவில்லை.

News October 17, 2024

கல்லூரி மாணவர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு!

image

நாடு முழுவதுமுள்ள RBI வங்கி கிளைகளில் 125 கல்லூரி மாணவர்களுக்கு கோடை இன்டர்ன்ஷிப் வாய்ப்பை வழங்கும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித் தகுதி: PG Degree, சட்டம் இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள். இன்டர்ன்ஷிப் காலம்: 3 மாதங்கள். ஊக்கத் தொகை: ₹20,000. தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல் (RBI கிளைகள்). விண்ணப்பிக்க கடைசி நாள்: டிச.15. கூடுதல் விவரங்களுக்கு இந்த <>RBI<<>> லிங்க்கை கிளிக் செய்யவும்.

News October 17, 2024

1 கோடி வாடிக்கையாளர்களை இழந்த ஜியோ

image

கடந்த 4 மாதங்களில் ஜியோ 1.09 கோடி 4ஜி வாடிக்கையாளர்களை இழந்துள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. 48.97 கோடியாக இருந்த 4ஜி வாடிக்கையாளர் எண்ணிக்கை கட்டண உயர்வுக்கு பிறகு 47.88 கோடியாக குறைந்து விட்டதாகக் கூறப்படுகிறது. அதேநேரத்தில், 5ஜி சேவையில் புதிதாக 1.7 கோடி பேர் ஜியோவில் இணைந்துள்ளனர். இதனால் 5ஜி வாடிக்கையாளர் எண்ணிக்கை 13 கோடியிலிருந்து 14.7 கோடியாக உயர்ந்துள்ளது.

News October 17, 2024

பொது அறிவு: கேள்விகளுக்கான பதில்கள்

image

இன்று 11 மணிக்கு <<14378800>>GK <<>>வினா-விடை பகுதியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் இவையே. 1) அல்பேனியா 2) இரு கருப்பைகள் 3) ஈ 4) பிரயா டோ கேசினோ – Brazil 5) ஈஸ்டு (Yeast) நுண்ணுயிரி 6) Line of Control 7) மேரி கியூரி (இயற்பியல் & வேதியியல்). இதுபோன்ற அறிவார்ந்த தகவல்களை பெற Way2News-ஐ தொடர்ந்து படியுங்கள். இன்றைய கேள்விகளுக்கு நீங்கள் எத்தனை சரியான பதிலளித்தீர்கள் என இங்கே கமெண்ட்டில் சொல்லுங்கள்.

News October 17, 2024

திமுகவை சீண்டும் பவர் ஸ்டார்

image

ஆந்திர Dy CM பவன் கல்யாணின் செயல்பாடு திமுகவை சீண்டுவதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். லட்டு விவகாரத்தில், சநாதனம் பற்றி பேசியபோது, உதயநிதியை மறைமுகமாக விமர்சித்தார் பவன். அதற்கு உதயநிதியும் ‘Let’s wait and see’ என்று பதிலளித்தார். பின்னர் ADMK-வுக்கு வாழ்த்து சொன்ன பவன், இன்று ADMK-வின் 53ஆம் ஆண்டு விழாவுக்கு வாழ்த்துச் சொல்லி இருக்கிறார். இது அதிமுகவின் மீதான பாசமா? திமுகவை சீண்டும் நோக்கமா?

error: Content is protected !!