India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தயிருடன் மிளகாய் தூள், மிளகு தூள், கறி மசாலா தூள், உப்பு, சோளம் மாவு கரைசல், எலுமிச்சை பழச்சாறு, உப்பு, துருவிய இஞ்சி & பூண்டு சேர்த்து கிளறவும். இந்த மசாலா கலவையை நறுக்கிய பேபிகான்களில் போட்டு 30 நிமிடங்கள் மாரினேட் செய்யவும். பின்பு அடுப்பில் வாணலியில் எண்ணெய் ஊற்றி, அதில் சூடானவுடன் பேபிகானை அதில் போட்டு பொன்னிறமாக மாறும் வரை நன்கு பொறித்து எடுத்தால் சுவையான பேபிகான் தந்தூரி ரெடி.
மீண்டும் டிவி சீரியலில் நடிக்கவுள்ளதாக வெளியான தகவலை பாஜக முன்னாள் MP ஸ்மிருதி இரானி மறுத்துள்ளார். 2019 லோக்சபா தேர்தலில் அமேதி தொகுதியில் ராகுலை எதிர்த்து போட்டியிட்டு வென்ற அவர், 2024 தேர்தல் தோல்விக்கு பிறகு தீவிர அரசியலில் இருந்து விலகினார். இந்நிலையில், மீண்டும் சின்னத்திரையில் ஸ்மிருதி நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆனால் தற்போதைக்கு அதற்கான வாய்ப்பு இல்லை என அவர் மறுத்துள்ளார்.
சென்னையை அடுத்த கவரப்பேட்டையில் சில தினங்களுக்கு முன்பு சரக்கு ரயில் மீது மைசூர் – தர்பங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இதுகுறித்து என்ஐஏ அதிகாரிகள் விசாரித்து வந்த நிலையில், தற்போது அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, தண்டவாளத்தின் நட்டு, போல்ட்டுகளை மர்ம நபர்கள் கழற்றியதே ரயில் விபத்துக்கு காரணம் என உறுதியாகியுள்ளதாக என்ஐஏ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ரயிலில் குழந்தைக்கு நேர்ந்த சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை – நாகர்கோவில் இடையே இயக்கப்பட்ட விரைவு ரயிலில், S7 பெட்டியில் ஒரு குடும்பம் பயணித்தது. அப்போது, கீழ் படுக்கையில் (Lower Berth) தங்களின் 4 வயது குழந்தையை பெற்றோர் படுக்க வைத்தனர். இரவு அனைவரும் தூங்கிய நிலையில், அக்குழந்தை மீது UPPER BERTH சீட் அறுந்து விழுந்தது. இதில் படுகாயமடைந்த குழந்தை, ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
UGC NET தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் என NTA அறிவித்துள்ளது. ugcnet.nta.ac.in. என்ற இணையதளத்தில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். கல்லூரி மற்றும் பல்கலை.யில் உதவி பேராசிரியராக விரும்புவோர் இந்த தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம். வினாத்தாள் கசிவால் கடந்த ஜூன் மாதம் நடந்த தேர்வு ரத்து செய்யப்பட்டு, ஆக.21 முதல் செப்.5 வரை மறுதேர்வு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணாவை தற்போதைய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட் பரிந்துரைத்துள்ளார். 2019ம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்ற இவர், தற்போது தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் செயல் தலைவராகவும் உள்ளார். மரபுப்படி சஞ்சீவ் கண்ணாவே தலைமை நீதிபதிக்கு அடுத்த நிலையிலுள்ள மூத்த நீதிபதி ஆவார். நவ.10ம் தேதியுடன் சந்திரசூட் ஓய்வு பெறுவது குறிப்பிடத்தக்கது.
60ஆவது Femina Miss India நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது. அதில், 2024ஆம் ஆண்டின் இந்திய அழகியாக, மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த நிகிதா போர்வால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். விரைவில் நடைபெற உள்ள உலக அழகி போட்டியில் இந்தியா சார்பில் அவர் பங்கேற்க உள்ளார். டிவியில் தொகுப்பாளராக தனது பயணத்தை தொடங்கிய நிகிதா, மேடை நாடகங்கள் மற்றும் சினிமாவில் நடித்துள்ளார்.
முட்டையின் முழு சத்துகளைப் பெற அதன் மஞ்சள் கருவை தவறாமல் சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைகின்றனர். மஞ்சள் கருவில் HD லிப்போ புரதம் எனும் நல்ல கொழுப்பு உள்ளது. இது இதய நோய்களில் இருந்தும், பக்கவாதத்தில் இருந்தும் பாதுகாக்கிறது. மேலும் அதில் உள்ள 9 அமினோ அமிலங்கள், வைட்டமின் A, B2, B5, B12, ஒமேகா 3 உள்ளிட்ட சத்துகள் கண், மூளை, இதயம், தசைகள் என உடல் நலனுக்குத் தேவையானது.
சங்க காலப் பாடல்களில் ‘வைப்புழி’ எனக் குறிப்பிடப்பட்ட சொல்லுக்கு உங்களுக்கு பொருள் தெரியுமா?. வைப்பு (சேமித்தல்) + உழி (இடம்) = வைப்புழி. வைப்புழி என்பது பொன், பொருள், செல்வம், விதையை சேமித்து வைக்கும் இடத்தைக் குறிக்கும். நவீன பொருளாதார உலகில் வங்கிகளில் லாக்கர்களை (பெட்டகம்) வைத்திருப்பது போல, அந்த காலத்தில் நிறுவப்பட்ட அரசின் வைப்பகங்களில், வைப்புழி என்பது பயன்பாட்டில் இருந்துள்ளது.
NZ அணிக்கு எதிரான போட்டியில் 46 ரன்களில் ஆல்அவுட் ஆன IND அணி பல மோசமான சாதனைகளைப் படைத்துள்ளது. அதன்படி டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் IND பதிவு செய்த 3வது குறைந்தபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன் 2020-ல் AUS அணியிடம் 36 ரன்களிலும், 1974-ல் ENG அணியிடம் 42 ரன்களிலும் ஆல் அவுட் ஆனது. மேலும், இதுவே உள்ளூரில் IND அணி பதிவு செய்த மோசமான ஸ்கோர் ஆகும். 1987-ல் WI அணியிடம் 75 ரன்களில் சுருண்டது.
Sorry, no posts matched your criteria.