India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பிஜி தீவுகளில் நள்ளிரவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 1:32 மணிக்கு நிகழ்ந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.5ஆக பதிவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால் வீடுகள் மற்றும் கட்டடங்கள் குலுங்கின. அந்த நேரத்தில் மியான்மரிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. அங்கு ரிக்டர் அளவில் 4.5ஆக பதிவாகியுள்ளது. ஏற்கனவே அங்குக் கடந்த மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சுமார் 3,000 பேர் உயிரிழந்தது கவனிக்கத்தக்கது.
சீனாவில் வீசி வரும் பலத்த சூறாவளி காற்றால் வினோதமான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தலைநகர் பீஜிங்கில் மணிக்கு 150 கி.மீ வேகத்தில் வீசி வரும் சூறைக்காற்றால் 50 கிலோவுக்கும் எடை குறைவான நபர்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒல்லியானவர்களை தூக்கி வீசும் அளவுக்கு பலத்த காற்று வீசுவதால் இந்த எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.
தமிழ் மொழிக்காக நினைவுச் சின்னத்தை உருவாக்கும் முயற்சியில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ஈடுபட்டுள்ளார். தமிழ் மீது தீரா பற்றுக் கொண்ட அவர், பல்வேறு தருணங்களில் அதை வெளிப்படுத்தியுள்ளார். தமிழணங்கு படத்தை பதிவிட்டு கவனத்தையும் பெற்றிருந்தார். அந்த வரிசையில் தமிழ் மொழிக்காக நினைவுச் சின்னத்தை உருவாக்கவுள்ளார். டிஜிட்டல் வடிவிலான அந்தச் சின்னம் விரைவில் கட்டடமாக எழும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு (IT Wing) நிர்வாகி செந்தில்குமாரன் சாலை விபத்தில் உயிரிழந்தார். சேலம் கொண்டலாம்பட்டியை சேர்ந்த இவரது மறைவுக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் இபிஎஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், வாகன ஓட்டிகள், குறிப்பாக இளைஞர்கள், சாலை விதிகளை முறையாகப் பின்பற்றி, மிகுந்த பாதுகாப்புடன் பயணங்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் இபிஎஸ் அறிவுறுத்தியுள்ளார்.
அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸின் காதலி லாரென், பாடகி கேட்டி பெர்ரி உள்ளிட்ட 6 பெண்கள் அடங்கிய குழு இன்று விண்வெளிக்கு பறக்க உள்ளது. ஜெஃப் பெசோஸின் Blue Origin நிறுவனத்தின் NS-31 திட்டத்தின் படி இப்பயணம் மேற்கொள்ளப்பட உள்ளது. 60 ஆண்டுகளுக்கு பிறகு, பெண்கள் மட்டுமே மேற்கொள்ளும் விண்வெளி பயணமாக இது அமைய உள்ளது. இந்த பயணம் பல பெண்களுக்கு உத்வேகமாக அமையும் என அப்பெண்கள் குழு தெரிவித்துள்ளது.
தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம்(MET) கணித்துள்ளது. மேலும், நாமக்கல், கரூர், திருச்சி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதேநேரம் நாளை வரை ஒரு சில இடங்களில் வெப்ப அலை வீசும் எனவும் அதிக வெப்பம் மற்றும் ஈரப்பதமும் இருக்கும் நிலையில் அசெளகரியம் ஏற்படலாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்ப்புத்தாண்டு நாளான இன்று ரிஷபம், மிதுனம், கன்னி, தனுசு, மகரம் ஆகிய ராசிகளுக்கு ஜாக்பாட் தான். தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைக்கு இடையே சமநிலையை ஏற்படுத்த உதவும். மேம்பட்ட ஆரோக்கியம் மற்றும் புதிய உறவுகளின் தோற்றம் முக்கிய பங்கு வகிக்கும். காதல் மற்றும் திருமணம் கைகூடும். பண வரவு இருக்கும். மகிழ்ச்சியான வாழ்க்கையை தொடங்கும் வகையில் இந்தப் புத்தாண்டு இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
ஆஃப்கானிஸ்தான் மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு உதவ ICC முன்வந்துள்ளது. ஆஸ்திரேலியாவில் தஞ்சம் அடைந்துள்ள 21 வீராங்கனைகளுக்கு உதவ சிறப்பு நிதி ஒதுக்கப்படும் எனவும், உலகத்தரத்திலான கோச்சிங் வழங்கப்படும் எனவும் ICC தலைவர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். ஆஃப்கானிஸ்தானில் 2021-ல் தாலிபான்கள் ஆட்சியை பிடித்ததும், அந்நாட்டு கிரிக்கெட் வீராங்கனைகள் ஆஸ்திரேலியாவில் தஞ்சம் அடைந்தனர்.
தமிழகத்தை போலவே கேரளாவிலும் இன்று புத்தாண்டு பிறந்தது. பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் விஷு கனி தரிசனம் நடைபெற்றது. அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. விஷு கனி தரிசனத்திற்கு பின் கோயில் தந்திரியும், மேல்சாந்தியும் கை நீட்டமாக நாணயங்களை வழங்கினர். இதற்காக சபரிமலையில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். ஏப்.18 ஆம் தேதி வரை சித்திரை மாத பூஜைக்காக நடை திறந்திருக்கும்.
தமிழகத்தின் வடகிழக்கு மாவட்டங்களில் வெப்ப அலை வீச வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. வெப்பநிலை இயல்பை விட 2 -4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பம் மற்றும் ஈரப்பதமும் இருக்கும் நிலையில் அசௌகரியம் ஏற்படலாம். எனவே, மக்கள் பகல் 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். அதிக அளவு தண்ணீர், மோர் போன்றவறை குடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.