India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மீண்டும் ஆண்கள் vs பெண்கள் விவாதம் இணையத்தில் எழுந்துள்ளது. கிருமிநாசினியான LIZOL-ன் விளம்பரங்களில், பெண்கள் மட்டுமே வீட்டை சுத்தம் செய்வதாக காட்டப்படுவது ஏன் என X தள பயனர் ஒருவர் கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு, LIC-யின் விளம்பரங்களில் ஆண்கள் மட்டுமே மரணமடைவதாக காட்டுவது ஏன் என இன்னொரு பயனர் ஒருவர் எதிர் கேள்வி எழுப்பியுள்ளார். இதை பற்றி உங்களுடைய கருத்து என்ன? கமெண்ட்ஸ் ப்ளீஸ்..!
நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஸ்மார்ட் போனில் PUBLIC TOILET சீட்டை விட அதிக அளவிலான அழுக்கும், பாக்டீரியாக்களும் இருப்பது அரிசோனா பல்கலைக்கழக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதை தொட்டுவிட்டு கையை கழுவாமல் வாயில் கை வைத்தோலோ, சாப்பிட்டாலோ மோசமான உடல்நலப் பிரச்னைகள் வரும் எனக் கூறப்படுகிறது. எனவே, நாளொன்றுக்கு 3 முறை செல்போனை துடைக்கும் ஸ்பிரே மூலம் சுத்தப்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தெற்கு காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் இயக்கத்தினர் சிலர் கொல்லப்பட்டதாகவும், அதில் சின்வாரும் இருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது. ஆனால், இதை அந்நாட்டு ராணுவம் இன்னும் உறுதிச் செய்யவில்லை. ஹமாஸ் தலைவராக இருந்த ஹனியே கொல்லப்பட்டபின் தலைவராக பொறுப்பேற்றவர் சின்வார்.
இதை நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் போதே, வானில் ஓர் அதிசயம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஆம்.. நிலவு இதுவரை இல்லாத அளவுக்கு பூமிக்கு மிக நெருக்கமாக வந்துள்ளது. இது HUNTER MOON எனப்படுகிறது. பூமியில் இருந்து 4.05 லட்சம் கி.மீ. தொலைவில் இருக்கும் நிலவு, இன்று 3.65 கி.மீ. தூரம் வந்துள்ளது. அதனால், நிலவு வழக்கத்தை விட 14% பெரிதாகவும், 30% கூடுதல் ஒளியுடனும் இருக்கும். உடனே பாருங்க. Share It.
இங்கிலாந்து Ex கேப்டன் மைக்கேல் வாகனை, இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் வறுத்தெடுக்கின்றனர். NZக்கு எதிரான டெஸ்ட்டில் முதல் இன்னிங்ஸில் IND 46 ரன்களில் ஆல்அவுட்டானது. இதனை அவர் விமர்சித்திருந்தார். இதனால் கொந்தளித்த நெட்டிசன்கள், “கருத்து பதிவிடும்முன் வெட்கப்படுங்கள். 2019 முதல் தற்போதுவரை IND அணியுடனான டெஸ்ட் தொடரை உங்களால் வெல்ல முடியவில்லை” என இந்திய அணிக்கு ஆதரவாக கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.
உத்தமதாளியில் தயாரிக்கப்படும் மருந்து வாதம் தொடர்பான நோய்களைக் கட்டுப்படுத்துவதாக Alternative Medicine எனும் ஆய்விதழில் வெளியான கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. டானின்ஸ், டெர்பினாய்டுஸ் போன்ற வேதிப்பொருட்கள் நிறைந்த இதன் இலைச்சாற்றுடன் சுக்கு, வல்லீகம் சேர்த்து கொதிக்க வைத்து, பசை போலாக்கி குளிர் காலத்தில் ஏற்படும் வீக்கங்களில் பற்றுப் போட்டால், வலி குறையும் என சித்த மருத்துவம் பரிந்துரைக்கிறது.
அதிமுகவின் 53ஆவது ஆண்டு தொடக்க விழாவுக்கு வாழ்த்து தெரிவித்த ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு OPS நன்றி தெரிவித்துள்ளார். முன்னதாக, EPS மற்றும் OPS இருவருக்கும் தனது ஒரே அறிக்கையில் பவன் கல்யாண் வாழ்த்து தெரிவித்திருந்தார். இருவரும் இரு அணிகளாக பிரிந்து நிற்கும் சூழலில், பவனின் அறிக்கை அதிமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
டிஎன்பிஎஸ்சி குருப் 5-ஏ தேர்வுக்கு இன்று (அக்.17) முதல் நவ.15 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குரூப் 5-ஏ (தலைமைச் செயலக பணி), உதவிப் பிரிவு அலுவலர்/ உதவியாளர் பதவிகளுக்கான காலிப்பணியிடங்களை பணி மாறுதல் மூலமாக நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம். TNPSC அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
மழையை வைத்து எதிர்க்கட்சிகள் விமர்சிக்க முடியாத அளவுக்கு தமிழக அரசின் செயல்பாடுகள் இருந்ததாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். அரசின் புயல் வேக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் சென்னை மக்கள் நிம்மதியடையும் வகையில் இயல்பு நிலை திரும்பியுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், இதுபோன்ற சீரிய முயற்சிகளை திட்டமிட்டு செயல்படுத்திய CM ஸ்டாலின் உள்ளிட்டோரை பாராட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.
லண்டனில் நடைபெற்றுவரும் WR செஸ் மாஸ்டர்ஸ் போட்டியின் இறுதிச் சுற்றில் அர்ஜூன் எரிகைசி விளையாடவுள்ளார். பிரான்ஸ் வீரர் எம்.வி.லாக்ரேவ் உடன் சதுரங்க வேட்டையில் மோதும் அவர், இந்தப் போட்டியில் வென்றால் 2,800 புள்ளிகளை கடப்பார். இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்துக்குப் பிறகு இந்த சாதனையை படைக்கும் வாய்ப்பு அர்ஜுனுக்கு மட்டுமே கிடைத்துள்ளது. இதுவரை உலகளவில் 14 பேர் மட்டுமே இந்தப் புள்ளிகளை கடந்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.