India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பதி பெருமாளை மிக அருகில் சென்று தரிசனம் செய்வதற்கான ஆர்ஜித சேவை டிக்கெட்களுக்கான முன்பதிவு நாளை மறுநாள் தொடங்கி அக்.21ஆம் வரை நடைபெறும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் பக்தர்களின் பெயர்கள் ஆன்லைனில் வெளியிடப்படும். அவர்கள் அக்.23ஆம் தேதி மதியம் 12 மணிக்குள் பணம் செலுத்தினால், டிக்கெட் உறுதி செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
ராஜஸ்தானில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தற்கொலை செய்து கொண்டதாக புகார் எழுந்துள்ளது. கோட்டா நகரில் ஜே.இ.இ, நீட் போன்ற தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. பல மாநிலங்களில் இருந்து மாணவர்கள் இங்கு தங்கி பயிற்சி பெறும் நிலையில், அடிக்கடி மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். இந்நிலையில், உ.பியை சேர்ந்த அசுதோஷ் சோராசியா என்ற மாணவர் தற்கொலை செய்துள்ளார். போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்தியா-கனடா விவகாரத்தில் மத்திய அரசுக்கு ஆதரவாக காங்கிரஸ் இருக்கும் என அக்கட்சியின் மூத்த தலைவர் பவன் கேரா கூறியுள்ளார். கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதி கொல்லப்பட்டதில் இந்திய தூதருக்கு சம்மந்தம் இருப்பதாக கனடா தெரிவித்திருந்த நிலையில், அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டு தூதரக அதிகாரிகளை இந்தியா வெளியேற்றியது. இந்த விவகாரத்தில் கனடா நடவடிக்கை தவறானது என காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
IND vs NZ முதல் டெஸ்ட் போட்டியில் கோலியை 3ஆவதாக களமிறக்கியதை அனில் கும்ளே விமர்சித்துள்ளார். 3ஆவது இடத்தில் விளையாட புஜாரா தான் மிகச்சரியானவர் என்றும், புஜாராவின் திறமையை இந்திய அணி பயன்படுத்த தவறவிட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். கடந்த 8 ஆண்டுகளில் முதல் முறையாக 3ஆவதாக களமிறங்கிய கோலி, டக் அவுட்டில் வெளியேறினார். இன்று நடைபெற்ற முதல் இன்னிங்சில் 46 ரன்களில் இந்திய அணி சுருண்டது.
கிரிமினல்களை நாடு கடத்தும்படி விடுத்த 26 கோரிக்கைகளை கனடா கிடப்பில் போட்டுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் குற்றம்சாட்டியுள்ளது. அந்தக் கோரிக்கைகள் மட்டுமன்றி கைது கோரிக்கைகளையும் கனடா கிடப்பில் போட்டுள்ளதாகவும் அது சாடியுள்ளது. உண்மை நிலவரம் இப்படி இருக்கையில், வன்முறையை தூண்டுவதாக இந்தியா மீது கனடா புகார் கூறுவதாக வெளியுறவு அமைச்சகம் விமர்சித்துள்ளது.
மகளிர் டி20 உலக கோப்பை இறுதிப் போட்டிக்கு தென்னாப்பிரிக்கா அணி முன்னேறியுள்ளது. துபாயில் நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியுடன் அந்த அணி மோதியது. முதலில் பேட் செய்த ஆஸி.அணி 5 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் சேர்த்தது. பிறகு ஆடிய தெ.ஆப்பிரிக்க அணி 17.2 ஓவர்களில் 2 விக்கெட் மட்டுமே இழந்து 135 ரன்களை சேர்த்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
எமர்ஜென்சி படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைத்துள்ளதாக அப்படத்தின் இயக்குநர் கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். இப்படம் செப்.6இல் வெளியாக இருந்த நிலையில், சீக்கியர் அமைப்புகளின் எதிர்ப்பு காரணமாக மத்திய தணிக்கை வாரியம் சென்சார் சான்றிதழ் அளிக்க தயங்கியது. இதை எதிர்த்து கங்கனா தொடர்ந்த வழக்கில் மும்பை நீதிமன்றம் செப்.25க்குள் சென்சார் வழங்க உத்தரவிட்ட நிலையில், தற்போது சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இரவு 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்களின் பட்டியலை IMD வெளியிட்டுள்ளது. அதில், தி.மலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் எனக் கூறியுள்ளது. அதேபோல், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.
◙மேஷம் – பெருமை
◙ரிஷபம் – இன்பம்
◙மிதுனம் – உற்சாகம்
◙கடகம் – நலம்
◙சிம்மம் – அமைதி
◙கன்னி – புகழ்
◙துலாம் – பாசம்
◙விருச்சிகம் – சுபம்
◙தனுசு – போட்டி ◙மகரம் – சாந்தம்
◙கும்பம் – விவேகம் ◙மீனம் – மேன்மை
வயநாடு இடைத்தேர்தலில் பிரியங்கா காந்திக்கு எதிராக குஷ்புவை வேட்பாளராக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வயநாடு பாஜக வேட்பாளர்களுக்கான உத்தேசப் பட்டியலில் குஷ்பு பெயர் இடம் பெற்றுள்ளதாகவும், இது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பாஜக மத்திய தேர்தல் குழு கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது. வயநாட்டில் நவ.13இல் தேர்தல் நடைபெறுகிறது.
Sorry, no posts matched your criteria.