news

News October 18, 2024

என்னது ₹100 கோடி ஊழலா… பாஜகவுக்கு அமைச்சர் பதிலடி

image

<<14385855>>₹100 கோடி ஊழல் <<>>நடந்துள்ளதாக தமிழக பாஜக தெரிவித்த குற்றச்சாட்டுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி காெடுத்துள்ளார். வெளிச்சந்தையில் பருப்பின் விலை கூட தெரியாமல் வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டை பாஜக செய்தித் தொடர்பாளர் பிரசாத் தெரிவித்திருப்பதாக அவர் கூறியுள்ளார். ₹100 கோடி ஊழல் என்பது உண்மைக்கு புறம்பானது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

News October 18, 2024

2025 மார்ச்சிற்குள் 5ஜி- VI உறுதி

image

2025 மார்ச்சிற்குள் 17 தாெலைத் தொடர்பு வட்டங்களிலும் 5ஜி சேவையை தொடங்கி விடுவோம் என VI தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய அந்நிறுவன சிடிஓ ஜக்பீர் சிங், முதலில் டெல்லி, மும்பையிலும் பிறகு மற்ற பகுதியிலும் 5ஜி சேவை ஆரம்பிக்கப்படும் என்றார். 2022 அக்டோபரில் ஜியோ, ஏர்டெல் 5ஜி சேவையை தாெடங்கின. ஆனால் நிதிப் பிரச்னை காரணமாக VI இன்னும் 5ஜி சேவையை தொடங்காமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

News October 18, 2024

அக்.18: வரலாற்றில் இன்று

image

1922: பிபிசி நிறுவனம் ஏற்படுத்தப்பட்டது
1931: பிரபல விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன் மறைந்தார்
1956: முன்னாள் டென்னிஸ் வீராங்கனை மார்டினா நவரத்திலோவா பிறந்தார்
1960: ஹாலிவுட் நடிகர் ஜீன் கிளாட் வான் டேம் பிறந்தார்
1965: முன்னாள் கிரிக்கெட் வீரர் நரேந்திர ஹிர்வானி பிறந்தார்
1978: நடிகை ஜாேதிகா பிறந்தார்
2004: சந்தனக் கடத்தல் வீரப்பன் மறைந்தார்

News October 18, 2024

நியூசி. 134 ரன்கள் முன்னிலை

image

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசி. 134 ரன்கள் முன்னிலை வகிக்கிறது. முதலில் பேட் செய்த இந்திய அணி 46 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து நியூசிலாந்து களமிறங்கியது. ஆரம்பம் முதல் அதிரடியாக விளையாடிய கான்வே 91 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். லாதம் 15, யங் 33 ரன்களில் அவுட்டாகினர். நேற்றைய ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 180 ரன்களை அந்த அணி எடுத்திருந்தது.

News October 18, 2024

இஸ்ரேலுக்கும், உலகிற்கும் நல்ல நாள்.. பைடன் மகிழ்ச்சி

image

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்ட நாள், இஸ்ரேலுக்கும், உலகிற்கும் நல்ல நாள் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். டிஎன்ஏ பரிசோதனை மூலம் சின்வார் கொல்லப்பட்டது உறுதியாகியிருப்பதாக தெரிவித்த பைடன், ஹமாஸ் தலைவர்களை வேட்டையாட இஸ்ரேலுக்கு அமெரிக்கா உதவியதாகவும் கூறினார். சின்வார் கொல்லப்பட்டதை அறிந்து நெதன்யாகுவை தாெடர்பு கொண்டு வாழ்த்தியதாக தெரிவித்தார்.

News October 18, 2024

ஹமாஸ் தலைவர் கொலை: உறுதி செய்தது இஸ்ரேல்

image

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டதை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உறுதி செய்துள்ளார். 2023 அக்டோபரில் இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தி 1,000க்கும் மேற்பட்டோரை கொன்றனர். இதையடுத்து காசாவுக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினரை இஸ்ரேல் வேட்டையாடி வருகிறது. நேற்று நடந்த அதிரடி தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். இதில் சின்வாரும் ஒருவர் என்பதை இஸ்ரேல் உறுதி செய்துள்ளது.

News October 18, 2024

துவரம் பருப்பு காெள்முதலில் ₹100 கோடி ஊழல்: பாஜக பகீர்

image

தமிழகத்தில் தீபாவளிக்கு வழங்கப்படும் துவரம் பருப்பை கொள்முதல் செய்ததில் ₹100 கோடி ஊழல் நடந்துள்ளதாக பாஜக பகீர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது. தமிழக பாஜக செய்தித் தாெடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், இக்குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. இந்த ஊழலில், துறை அமைச்சர், நிர்வாக இயக்குனர், இடைத்தரகரின் பங்கு குறித்து முதல்வர் விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

News October 18, 2024

JOB ALERTS: முன்னாள் ராணுவத்தினருக்கு வேலை

image

தமிழ்நாடு காவல்துறை வெடிகுண்டு கண்டறிதல், செயலிழக்கம் செய்த பிரிவில் ஒப்பந்த அடிப்படையில் ஓராண்டுக்கு பணியாற்ற EX ராணுவத்தினர், துணை ராணுவத்தினரிடம் இருந்து விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. ஆய்வாளர், உதவி ஆய்வாளர், ஏட்டு ஆகிய பதவிகளில் காலியாக உள்ள 63 இடங்களுக்கு நவ.14க்குள் விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மாத ஊதியம் ரூ.20,600- ரூ.1,19 லட்சம் வரை வழங்கப்படும். SHARE IT.

News October 18, 2024

HAPPY BIRTHDAY❤️: பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (அக். 18) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News October 18, 2024

வயநாடு தேர்தல்: பிரியங்கா Vs சத்யன் மோகேரி மோதல்

image

வயநாடு தொகுதி இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக சத்யன் மோகேரி அறிவிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் நவம்பர் 13இல் அங்கு தேர்தல் நடைபெற உள்ளது. மக்களவைத் தேர்தலில் ரேபரேலி மற்றும் வயநாடு தொகுதிகளில் வென்ற ராகுல் காந்தி, வயநாடு தொகுதியின் எம்.பி பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!