news

News October 18, 2024

IPL: டெல்லி அணி கேப்டன் பதவியிலிருந்து பண்ட் நீக்கம்?

image

டெல்லி கேபிடல்ஸ் அணி கேப்டன் பதவியிலிருந்து ரிஷப் பண்டை அணி நிர்வாகம் நீக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. அதிரடி பேட்ஸ்மேனான பண்ட், கேப்டன் பொறுப்பு இல்லாமல் இருந்தால் சிறப்பாக விளையாட முடியும் என நிர்வாகம் கருதுகிறது. எனவே கேப்டன் பதவியிலிருந்து அவரை நீக்க முடிவு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. பண்ட் நீக்கப்பட்டால் அக்சர் படேல் கேப்டனாக நியமிக்கப்படலாம் எனவும் சொல்லப்படுகிறது.

News October 18, 2024

நேதாஜியின் பொன்மொழிகள்

image

*சுதந்திரம் கொடுக்கப்படுவதில்லை. எடுக்கப்படுகிறது.
*கலங்காத உள்ளம் படைத்தவர்களே இறுதி வெற்றிக்கு உரியவர்கள்!
*போராட்டம் இல்லாத வாழ்க்கை வெறுப்பு அடித்து விடும்
*ஒரு சிந்தனைக்காக மனிதன் இறக்கலாம். ஆனால் அவனது சிந்தனைகள் அதன் பின் 1000 பேரிடம் செல்லும்
* முயற்சிகளும் தியாகங்களும் நம்மை நமது சொந்த திறனால் சுதந்திரம் பெற உதவும்.

News October 18, 2024

ஏடிஎம்-மில் கிழிந்த ரூபாய் வந்ததா? கவலை வேண்டாம்

image

ஏடிஎம்மில் பணம் எடுக்கையில் சிலருக்கு கிழிந்த நோட்டு வருவதுண்டு. அதைக்கண்டு கவலைப்பட தேவையில்லை. அருகிலுள்ள அந்த ஏடிஎம் வங்கிக்கு சென்று, எடுக்கப்பட்ட தொகை, நேரம் உள்ளிட்டவற்றுடன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அளிக்க வேண்டும். இதுபோல 20 நோட்டுகளை வரை கொடுக்கலாம். ஆனால் அத்தொகை 1 நாளில் ரூ.5,000க்கு மிகக் கூடாது. அப்படி அளித்தால் மாற்று ரூபாய் நோட்டுக்களை வங்கிகள் தரும்.

News October 18, 2024

யார் இந்த சின்வார்? (3/3)

image

2017இல் <<14385887>>ஹமாசின் <<>>அரசியல் பிரிவு தலைவராக ஹனியே தேர்வு செய்யப்பட, சின்வாரா காசாவிலுள்ள ஹமாஸ் தலைவரானார். சின்வார் தலைவரான பிறகு ஹமாஸ் அமைதி காத்தது. ஆனால் இந்த அமைதிக்கான அர்த்தம் 2023 அக்.7இல்தான் இஸ்ரேலுக்கு தெரிந்தது. ஆம், ஹமாஸ் நடத்திய திடீர் ராக்கெட் தாக்குதலால் இஸ்ரேலே நிலை குலைந்தது. இதையடுத்து ஓராண்டு காலம் தேடுதல் வேட்டை நடத்தி சின்வாரின் கதையை இஸ்ரேல் நேற்று முடித்து கட்டியுள்ளது.

News October 18, 2024

யார் இந்த சின்வார்? (2/3)

image

1987இல் <<14385887>>ஹமாஸ் <<>>உருவானபோது, அதற்குள்ளேயே அல் மஜித் என்ற படையை உருவாக்கினார். இஸ்ரேலுக்கு உதவிய பாலஸ்தீனர்களை தேடிப்பிடித்து அந்தப் படை வேட்டையாடியது. 1988இல் 12 பாலஸ்தீனர்களை கொன்றதாக சின்வாரை இஸ்ரேல் கைது செய்து, 4 ஆயுள் தண்டனை விதித்தது. எனினும் 2011 கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் மூலம் சின்வார் விடுவிக்கப்பட்டார். காசாவில் ஹமாஸ் ஆட்சியிலிருக்க சின்வாரின் செல்வாக்கு அதிகரித்தது.

News October 18, 2024

யார் இந்த சின்வார்? (1/3)

image

இஸ்ரேலால் கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவர் சின்வாரின் பின்னணி குறித்து தெரிந்து கொள்வோம். மத்திய கிழக்கில் இஸ்ரேல் எனும் நாடு புதிதாக உருவாக்கப்பட்டு, 14 ஆண்டுக்கு பிறகு, காசாவின் கான்யூனிஸ் அகதிகள் முகாமில் 1962இல் பிறந்தவர் சின்வார். முதலில் எகிப்திலும், பிறகு இஸ்ரேலிலும் வளர்ந்தார். முஸ்லிம் பிரதர்வுட் அமைப்பில் தீவிர உறுப்பினரான அவர், 19 வயதில் முதன்முதலில் இஸ்ரேலால் கைது செய்யப்பட்டார்.

News October 18, 2024

லிப்டுக்குள் கண்ணாடி.. ஏன் தெரியுமா?

image

லிப்டுக்குள் கண்ணாடி பொருத்தப்பட்டு இருப்பதை பார்த்திருப்போம். இதற்கான காரணங்களை தெரிந்து கொள்வோம். 1) மனரீதியில் லிப்டில் பயணிப்போருக்கு பாதுகாப்பை தர 2) சுற்றியிருப்போரை கண்ணாடி மூலம் பார்த்து சுற்றுப்புற சூழலை உணர்ந்து கொள்ள 3) பொறுமையில்லாத நபர்களின் கவனத்தை திசை திருப்ப 4) மாற்றுத் திறனாளிகள் லிப்டை எளிதில் பயன்படுத்த. இந்தத் தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.

News October 18, 2024

WTC பைனல்: முதல் டெஸ்டில் இந்தியா தோல்வியடைந்தால்?

image

நியூசி.க்கு எதிரான முதல் டெஸ்டில் தோல்வியடைந்தால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா செல்வது பாதிக்கப்படுமா என பலருக்கும் சந்தேகம் உண்டு. ஆனால் அந்த சந்தேகம் தேவையில்லாத ஒன்றாகும். முதல் டெஸ்டில் தோற்றாலும், WTC இறுதிக்கு இந்திய அணி செல்லும். ஏனெனில், WTC பட்டியலில் இந்தியா 98 புள்ளிகளுடன் முதலில் உள்ளது. மேலும், இனிவரும் 8 டெஸ்டுகளில் இந்தியா 5இல் வென்றாலே போதும்.

News October 18, 2024

போர் தொடருகிறது… இஸ்ரேல் அறிவிப்பு

image

ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டாலும் ராணுவ நடவடிக்கையை நிறுத்த மாட்டோம் என்று இஸ்ரேல் பாதுகாப்புப் படை அறிவித்துள்ளது. ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டதோடு தங்களது பணி முடிந்து விடவில்லை என்றும், ஹமாஸ் கட்டுப்பாட்டில் இன்னும் 101 பேர் இருப்பதாகவும் இஸ்ரேல் பாதுகாப்புப் படை கூறியுள்ளது. எந்த வகையிலாவது பிணைக் கைதிகள் அனைவரையும் மீட்போம் என்றும், அதுவரை ஓய மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளது.

News October 18, 2024

2.75 லட்சம் URLs மீதான தடை நீங்கியது

image

மொபைல் மூலம் மோசடி நடைபெறுவதை தடுக்க பதிவு செய்யாத நிறுவன லிங்க், URLsக்களை முடக்க தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு டிராய் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவு அக்.1 முதல் அமலுக்கு வந்தது. இதையடுத்து சுமார் 10,000 நிறுவனங்கள் தங்களின் URLsக்களை பதிவு செய்து தடையை நீக்கியுள்ளன. இதனால் அவற்றின் லிங்க், URLsக்கள் மக்களுக்கு செல்வதில் இருந்த தடை நீங்கியுள்ளது. உங்களுக்கு லிங்க், URLs வருகிறதா?

error: Content is protected !!