news

News November 20, 2024

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எங்கே: அன்புமணி

image

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எங்கே என அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். தஞ்சையில் ஆசிரியை குத்திக்கொல்லப்பட்டது, ஓசூரில் வழக்கறிஞர் வெட்டப்பட்ட நிகழ்வுகளை சுட்டிக்காட்டிய அவர், காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வருக்கு இதைப்பற்றி எல்லாம் கவலை இல்லை என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், திமுக ஆட்சியில் காவல்துறைக்கு பல எஜமானார்கள் இருப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

News November 20, 2024

‘NEEK’ படத்தின் இரண்டாவது சிங்கிள் ரிலீஸ் தேதி

image

தனுஷ் இயக்கத்தில் உருவாகிவரும் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ‘kadhal fail’ என்ற ‘Gen-z soup song’ பாடல் நவ.25 ஆம் தேதி வெளியாகும் என தனுஷ் தெரிவித்துள்ளார். முன்னதாக இப்படத்தில் இடம்பெற்றுள்ள “Golden Sparrow” பாடல் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படத்திற்கு GV பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

News November 20, 2024

சட்டம் ஒழுங்கு: பின்வாங்கிய காங்கிரஸ்

image

தஞ்சையில் அரசுப் பள்ளியில் ஆசிரியை கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், சட்டம் ஒழுங்கு குறித்து அச்சம் எழ வாய்ப்பாக அமைந்து விடும் என குறிப்பிட்டிருந்தார். இந்த அறிக்கை வெளியான அரை மணிநேரத்தில், திருத்தப்பட்ட அறிக்கையை வெளியிட்டார். அந்த, அறிக்கையில் சட்டம் ஒழுங்கு தொடர்பான வாக்கியங்கள் நீக்கப்பட்டுள்ளன.

News November 20, 2024

EXIT POLLS உண்மையாகுமா? பொய்க்குமா?

image

மகாராஷ்டிரா, ஜார்கண்டில் 2019 தேர்தல் தொடர்பான EXIT POLLS சரியாக அமைந்தன. ஆனால், அண்மையில் நடந்த ஹரியானா தேர்தல் தொடர்பான EXIT POLLS, காங்கிரஸ் வெல்லும் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதற்கு மாறாக பாஜக வென்று ஆட்சியமைத்தது. ஆதலால், தற்போது மகாராஷ்டிரா, ஜார்கண்ட் தேர்தல் தொடர்பான EXIT POLLS உண்மையாகுமா? பொய்க்குமா? என்பது வருகிற 23ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையில் தெரிந்து விடும்.

News November 20, 2024

சேலையில் மின்னும் தேவதை… ராஷ்மிகாவின் நியூ கிளிக்ஸ்

image

தெலுங்கு, தமிழ், இந்தி என பான் இந்தியா ஸ்டாராக கலக்கி வருகிறார் ராஷ்மிகா மந்தனா. ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தனித்தனி முக பாவனை, குறும்பு சேட்டை என அவர் காட்டும் நடிப்புக்கு இந்தியா முழுவதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. இளைஞர்களின் கனவு கன்னியாக திகழும் அவர், சேலை கட்டி வித விதமான போஸ்களுடன் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். அந்த படங்களை மேலே கிளிக் செய்து நீங்கள் காணலாம்.

News November 20, 2024

யாருக்கும் மெஜாரிட்டி இல்லை என்றால் என்ன ஆகும்?

image

கருத்துக்கணிப்புகள் பலமுறை பொய்த்து வருவதை நாம் பார்த்து வருகிறோம். ஒருவேளை மகாராஷ்டிராவில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை எனில் என்னாகும்? நிச்சயம் பாஜக தன் வேலையை காட்டும் என்று எதிர்பார்க்கலாம். முன்பு சிவசேனா, என்சிபி கட்சிகளை உடைத்ததை போல ஏதாவது செய்யலாம் (அ) ‘இதுக்கு மேல தாங்காதுடா சாமி’ என்று உத்தவ் தாக்கரே பாஜகவுடன் மீண்டும் இணையலாம் (அ) மகா., மாநில காங்., கூட உடையலாம். உங்க கருத்து?

News November 20, 2024

Rs.6600 கோடி பிட்காயின் மோசடி தெரியுமா (1)

image

2018இல் நடந்த பிட்காயின் மோசடியில் ரூ.6600 கோடி புரண்டது. அமித் பரத்வாஜ் என்பவர் தான் இதற்கு மூளையாக செயல்பட்டுள்ளார். துபாய்க்கு தப்பியோடிய அமித் 2022-ல் மரணமடைய, அவரது குடும்பத்தினர் அனைவரின் மேல் ED வழக்குப்பதிவு செய்தது. 2017-ம் ஆண்டில் அமித் நடத்திய வேரியபில் டெக் நிறுவனம் மல்டிலெவல் மார்க்கெட்டிங்கில் பிட்காயின் மூலம் ரூ.6600 கோடியை வசூல் செய்தது. அதன்பின் என்ன நடந்தது தெரியுமா…

News November 20, 2024

Rs.6600 கோடி பிட்காயின் மோசடி தெரியுமா (2)

image

மல்டி லெவல் மார்க்கெட்டிங் மூலம் பிட்காயின் வாலெட்டில் சேர்ந்த தொகையில், ரூ.6600 கோடி காணாமல் போனது. அதை 2 போலீஸ் அதிகாரிகளே மற்றொரு வாலெட்டுக்கு மாற்றிக் கொண்டது விசாரணையில் கண்டறியப்பட்டது. 2 அடுக்குகளாக நடந்த இந்த மோசடியில், முதல் அடுக்கில் அமித், அடுத்து கவுரவ் மேத்தா, NCP தலைவர் சுப்ரியா சுலே, நானா படோல் இருந்ததாகவும், பணம் எங்கிருக்கிறது என்பது அவர்களுக்கு தெரியும் எனவும் கூறப்படுகிறது.

News November 20, 2024

செல்வாக்கு இழக்கிறதா JMM?

image

ஜார்கண்ட் தனி மாநிலமாக உதயமானது முதல் அந்த மாநில அரசியலில் தனி செல்வாக்குடன் JMM திகழ்கிறது. கடந்த 2019 தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்ற JMM, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சியமைத்தது. ஆனால் இந்த முறை நடந்தத் தேர்தலில் எடுக்கப்பட்ட கருத்து கணிப்புகளில் பெரும்பாலானவை பாஜகவுக்கு ஆதரவாக உள்ளன. இதனால் ஜார்கண்டில் JMM தனது செல்வாக்கை இழக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

News November 20, 2024

மகாராஷ்டிராவில் வலுவிழக்கும் தாக்கரே குடும்பம்

image

2014, 2019 தேர்தலில் ஆட்சியமைக்கும் கூட்டணியில் அங்கம் வகித்த உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, இந்தத் தேர்தலில் வலுவிழக்கும் என கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. சிவசேனாவை ஏக்நாத் ஷிண்டே பிரித்துச் சென்றது தாக்கரே குடும்பத்திற்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. உத்தவ் தாக்கரே மீண்டும் சிவ சேனாவை மீட்டெடுப்பாரா? தாக்கரே குடும்பத்தின் கை ஓங்குமா? காலம் பதில் சொல்லும்.

error: Content is protected !!