news

News October 18, 2024

தமிழகத்தில் இந்திக்கு விழா: முதல்வர் ஆவேசம்

image

சென்னை DD தொலைக்காட்சி சார்பில் இன்று நடைபெறவுள்ள இந்தி மாதக் கொண்டாட்டத்துக்கு முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “அரசமைப்புச் சட்டம் எந்த மொழிக்கும் தேசிய அந்தஸ்தை கொடுக்கவில்லை. அப்படியிருக்கையில், இந்தி மொழிக்கு மட்டும் கொண்டாட்டம் எதற்கு? இது உள்ளூர் மொழிகளை சிறுமைப்படுத்தும் முயற்சி. எனவே, இந்தக் கொண்டாட்டத்தை தவிர்க்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

News October 18, 2024

ALERT: இந்த மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்

image

தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது. அதன்படி, திருப்பத்தூர், வேலூர், தி.மலை, ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. சென்னையில் மிதமான மழை பெய்யலாம் எனவும் முன்னறிவித்துள்ளது.

News October 18, 2024

ராவணனை அவமதித்து விடுவீர்களா: சீமான் எச்சரிக்கை

image

ராவணனை அவமதிப்பதை ஏற்க முடியாது என சீமான் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் ‘ராவண வதம்’ நிகழ்ச்சி வரும் 27-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள சீமான், “என் பாட்டன் ராவணனை இழிவுப்படுத்துவது, உலகத் தமிழரை அவமதிப்பதற்கு சமம். இதை தமிழினம் வேடிக்கை பார்க்காது. எனவே, உடனடியாக அதை ரத்து செய்ய வேண்டும். ராவணனுக்கு உலகெங்கும் பெருவிழா எடுக்கப் போகிறோம்” எனக் கூறினார்.

News October 18, 2024

Tech Talk: இந்த செயலிகளை இன்ஸ்டால் செய்யாதீர்கள்!

image

சில செயலிகளை இன்ஸ்டால் செய்வதன் மூலம் உங்கள் காதலன், கணவரது செல்ஃபோனில் உள்ள தகவல்களைப் பார்க்க முடியும் என்று நிறைய ரீல்ஸ் இணையத்தில் உலவுகின்றன. அந்த செயலிகளை இன்ஸ்டால் செய்வது சட்டப்படி குற்றமாகும். அத்துடன் பாதுகாப்பற்ற அந்த செயலிகளை பயன்படுத்தும் நபரது செல்ஃபோன் அவருக்குத் தெரியாமலேயே ‘ஹேக்’ செய்யப்பட்டு தகவல்கள் திருடப்படலாம் என தொழில்நுட்ப வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

News October 18, 2024

பொது அறிவு: கேள்விகளுக்கான பதில்கள்

image

இன்று 11 மணிக்கு<<14387214>> GK<<>> வினா-விடை பகுதியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் இவையே. 1) நீபோஸ்கோப் 2) 33 ஆண்டுகள் 3) ஏழு 4) போவர் பறவை 5) No Objection Certificate 6) பன்னாடு தந்த பாண்டியன் மாறன்வழுதி 7) ஞானக்கடல். இதுபோன்ற அறிவார்ந்த தகவல்களை பெற Way2News-ஐ தொடர்ந்து படியுங்கள். இன்றைய கேள்விகளுக்கு நீங்கள் எத்தனை சரியான பதிலளித்தீர்கள் என இங்கே கமெண்ட்டில் சொல்லுங்கள்.

News October 18, 2024

ஆடைகளை கழற்றிய பெண்: ₹5 லட்சமும் போச்சு!

image

அகமதாபாத்தில் பெண் ஒருவருக்கு, டெல்லி cyber crime அதிகாரி எனக் கூறி ஒருவர் போன் செய்துள்ளார். அப்பெண்ணின் பெயரில் போதை மருந்து, லேப்டாப்கள் தாய்லாந்துக்கு சட்டவிரோதமாக அனுப்பப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். விசாரணை என்று அப்பெண்ணை மிரட்டி வெப் கேமரா முன் ஆடைகளை கழற்ற வைத்துள்ளதுடன், சிறைக்கு அனுப்பாமல் இருக்க பணம் கேட்டுள்ளார். பயத்தில் அப்பெண்ணும் அக்கவுண்ட்டில் இருந்த ₹5 லட்சத்தை அனுப்பி ஏமாந்தார்.

News October 18, 2024

‘Digital Arrest’ என்றால் என்ன?

image

Digital Arrest என்பது அதிகரித்துவரும் ஒரு மோசடியாகும். பணமோசடி, போதைப்பொருள் & ஆள்கடத்தல் போன்ற செயல்களில் நீங்களோ, உங்களது நெருங்கிய உறவினரோ ஈடுபட்டுள்ளதாக கூறி, உங்களை வீடியோ காலில் வரவழைத்து பல மணிநேரம் விசாரணை நடத்துவர். call கட் பண்ணவோ, அறையைவிட்டு வெளியேறவோ விடமாட்டார்கள். இதிலிருந்து தப்ப வேண்டுமானால் வங்கிக் கணக்குக்கு பணம் அனுப்பச் சொல்லி, உங்களின் மொத்த பணத்தையும் கறந்து விடுவார்கள்.

News October 18, 2024

செயற்கைக்கோளில் இருந்து சேவை வழங்கும் BSNL?

image

VIASAT செயற்கைக்கோளில் இருந்து நேரடியாக சேவை வழங்கும் சோதனையை BSNL வெற்றிகரமாக செய்துள்ளது. வயாசாட் நிறுவனம் BSNL உடன் இணைந்து ‘டைரக்ட் டூ டிவைஸ்’ என்ற நேரடி சேவை வழங்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மண்டல நெட்வொர்க் இணைப்பு ஏதுமின்றி, இருவழி தகவல் & அவசரகால அழைப்பான SOS ஆகியவற்றை செயற்கைக்கோளுக்கு அனுப்பி சோதனை செய்துள்ளது.

News October 18, 2024

தவறான புகார்: ரூ.4.2 லட்சம் நஷ்ட ஈடு

image

தொழிலதிபர் அளித்த தவறான புகாரில் தொழிலாளி ஒருவர் 6 மாதங்கள் சிறையில் இருந்த சம்பவம் மும்பையில் அரங்கேறியுள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு 9 பேர் கொண்ட கும்பல் தன்னை வாள், துப்பாக்கி போன்ற பயங்கர ஆயுதங்களால் தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரில் கைது செய்யப்பட்டார். விசாரணையில் தொழிலதிபர் கூறியது பொய் என தெரியவரவே, தொழிலாளிக்கு நஷ்ட ஈடாக ரூ.4.2 லட்சம் வழங்க மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News October 18, 2024

வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் எலான் மஸ்க்

image

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்புக்கு ஆதரவாக களத்தில் இறங்கியுள்ளார் நம்.1 பில்லியனர் எலான் மஸ்க். அவ்வகையில், டிரம்ப்பின் கொள்கைகளான பேச்சு சுதந்திரம், துப்பாக்கி வைத்துக்கொள்ளும் உரிமை ஆகியவற்றுக்கு ஆதரவான கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்கும் வாக்காளருக்கும், பரிந்துரைப்பவருக்கும் (சில மாகாணங்களில் மட்டும்) தலா 100 டாலர் பணம் தரப்படும் என அறிவித்துள்ளார்.

error: Content is protected !!