India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புரோ கபடி லீக் தொடரில் யு மும்பா அணியை வீழ்த்தி தெலுங்கு டைட்டன்ஸ் வெற்றி பெற்றுள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 31-29 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி வென்றது. 12 ஆட்டங்களில் ஆடியுள்ள யு மும்பா அணி 7 வெற்றி, 4 தோல்வி, 1 டிராவுடன் புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. தெலுங்கு டைட்டஸ் அணி புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடத்தில் உள்ளது.
ஓய்வை அறிவித்த டென்னிஸ் ஜாம்பவான் ரஃபேல் நடாலுக்கு, நடிகர் தனுஷ் புகழாரம் சூட்டியுள்ளார். “நீங்கள் இல்லாமல் டென்னிஸ் அதே மாதிரியாக இருக்க வாய்ப்பில்லை, நன்றி நாடால்” எனத் தனது X பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். 20 ஆண்டுகளாக டென்னிஸ் விளையாடி வரும் நாடால், 14 முறை பிரெஞ்சு ஓப்பனை வென்று சாதனை படைத்துள்ளார். ஓய்வு முடிவை எடுத்துள்ள நடாலுக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
‘டி-20’ போட்டிக்கான ‘ஆல்-ரவுண்டர்’ தரவரிசையில் ஹர்திக் பாண்ட்யா, மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறினார். 244 புள்ளிகளுடன் 3வது இடத்தில் இருந்து மீண்டும் ‘நம்பர்-1’ இடத்துக்கு வந்துள்ளார். இதற்கு முன், ‘டி-20’ உலக கோப்பை தொடருக்கு பின் வெளியான தரவரிசையில் முதன்முறையாக ‘நம்பர்-1’ இடம் பிடித்திருந்தார். ‘ஆல்-ரவுண்டர்’ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் வேறு IND வீரர்கள் இடம் பெறவில்லை.
தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் திருவள்ளுவன் (59) சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். டிச.12ஆம் தேதியோடு பதவி காலம் முடியும் நிலையில், அவரை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சஸ்பெண்ட் செய்துள்ளார். தமிழ் பல்கலை கழக துணைவேந்தர் எதற்காக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்ற விவரம் வெளியாகவில்லை. தமிழ்ப் பல்கலைக்கழக வரலாற்றில் துணைவேந்தர் யாரும் இப்படி பணியிடை நீக்கம் செய்யப்பட்டதில்லை.
போர் களத்தில் டப் கொடுத்து வரும் உக்ரைனிடம் இல்லாத ஒரே ஆயுதமான அணுகுண்டு ரஷ்யாவிடம் உள்ளது. இது அந்நாட்டின் வலிமையை ஒருபடி மேலே நிற்க வைத்துள்ளது. இதை மனதில் வைத்து, தன்னிடம் இருக்கும் 7 டன் புளுடோனியம் ராடுகளை வைத்து அணுகுண்டை உக்ரைன் தயாரிப்பதாகவும், 1945இல் நாகசாகியில் வீசப்பட்டது போன்ற அணுகுண்டை சில மாதங்களில் அந்நாட்டால் உருவாக்கி விட முடியும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
1963 – இந்தியாவின் முதலாவது ஈரடுக்கு உளவு ஏவுகணை நைக்-அப்பாச்சி ஏவப்பட்டது.
1980 – தமிழீழத் தேசியக்கொடி உருவாக்கப்பட்டது.
2009 – சீனாவில் சுரங்க வெடி விபத்தில் சிக்கி 108 பேர் உயிரிழந்தனர்.
1991 – சுதந்திர போராட்ட வீரர் தி. சு.அவிநாசிலிங்கம் மறைந்தார்.
2022 – தமிழறிஞர் ஔவை நடராசன் மறைவு.
ஜார்க்கண்டில் நடந்த 2-வது கட்ட தேர்தலில் 68.01% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 43 தொகுதிகளுக்கு ஏற்கெனவே தேர்தல் நடந்த நிலையில், 38 தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. அதே போல மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் 62.05% வாக்குகள் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு ஒரே கட்டமாக 288 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
புரோ கபடி லீக் தொடரில் டெல்லி – குஜராத் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் ‘டிரா’ ஆனது. 11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக். 18ஆம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் முதற்கட்ட லீக் ஆட்டங்கள் நிறைவடைந்த நிலையில், 2ஆம் கட்ட லீக் ஆட்டங்கள் நொய்டாவில் நடந்து வருகிறது. நேற்று இரவு நடைபெற்ற டெல்லி – குஜராத் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் 39-39 என்ற புள்ளிகள் கணக்கில் டிராவில் முடிந்தது.
▶குறள் பால்: அறத்துப்பால்
▶அதிகாரம்: செய்ந்நன்றி அறிதல்
▶குறள் எண்: 105
▶குறள்:
உதவி வரைத்தன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து.
▶பொருள்: கைமாறாகச் செய்யும் உதவி முன் செய்த உதவியின் அளவை உடையது அன்று, உதவி செய்யப்பட்டவற்றின் பண்புக்கு ஏற்ற அளவை உடையதாகும்.
அரசு முறை பயணமாக கயானா சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபருடன் சேர்ந்து மரக்கன்று நட்டார். ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர், அங்கிருந்து கயானா சென்றார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கயானா அதிபர் முகமது இர்பான் அலியை பிரதமர் மோடி சந்தித்தார். இந்த சந்திப்பில் இரு நாட்டு தலைவர்களும் பல்வேறு விவகாரங்கள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினர்.
Sorry, no posts matched your criteria.