news

News April 14, 2025

தங்கம் விலை சவரனுக்கு ₹120 குறைந்தது

image

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப்.14) சவரனுக்கு ₹120 குறைந்துள்ளது. இதனால் 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ₹8,755-க்கும், சவரன் ₹70,040-க்கும் விற்பனையாகிறது. கடந்த வாரத்தில் சவரனுக்கு ₹4,360 அதிகரித்த நிலையில், தமிழ்ப் புத்தாண்டு தினமான இன்று சற்று சரிந்துள்ளது.

News April 14, 2025

Health Tips: பழைய சாதத்தில் இருக்கும் நன்மைகள்!

image

காலையில் வெறும் வயிற்றில் பழைய சாதம் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது என டாக்டர்கள் கூறுகிறார்கள். அதிலுள்ள நல்ல பாக்டீரியாக்கள் குடல் ஆரோக்கியத்திற்கும், செரிமானத்திற்கும் உதவுகின்றன. அரிசியை 12 மணிநேரம் புளிக்க வைப்பதால் இரும்புச் சத்து 2,073% அதிகரிக்குமாம். பழைய சாதத்தில் அதிகமுள்ள வைட்டமின் பி12 சோர்வைக் குறைக்க உதவும். உங்களுக்கும் பழைய சாதம் பிடித்தால் ஷேர் பண்ணுங்க!

News April 14, 2025

சிங்கப்பூர் தேர்தலில் இந்திய வம்சாவளியினர் போட்டியா?

image

சிங்கப்பூர் பொதுத் தேர்தலில் ஆளும்கட்சி சார்பில் இந்திய வம்சாவளியினரை வேட்பாளர்களாக நிறுத்தப் போவதாக பிரதமர் வாங் அறிவித்துள்ளார். சிங்கப்பூரின் வளர்ச்சிக்காக பாடுபட்ட இந்தியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இம்முடிவை எடுத்ததாக அவர் கூறினார். 2020 தேர்தலில் ஒரு இந்திய வம்சாவளியினருக்கு கூட அவர் வாய்ப்பு வழங்காதது சர்ச்சையை ஏற்படுத்தியது நினைவுக்கூரத்தக்கது.

News April 14, 2025

₹1000 மகளிர் உரிமைத்தொகை: வெளியான இனிப்பான தகவல்

image

மகளிர் உரிமைத்தொகை திட்டம் இன்னும் 2 மாதங்களில் விரிவாக்கம் செய்யப்படவுள்ள நிலையில், இனிப்பான தகவல் ஒன்று கசிந்துள்ளது. குடும்பத் தலைவி அல்லாதவர்களுக்கும் இனி ₹1,000 கிடைக்கும். குடும்பத் தலைவியான தாயார் இல்லாத வீட்டில் 21 வயதை நிரம்பிய திருமணமாகாத மூத்த மகளை குடும்பத் தலைவியாக கருதி அவர்களையும் இத்திட்டத்தில் சேர்க்க அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் பல லட்சம் குடும்பங்கள் பயனடையும்.

News April 14, 2025

பிரதமர் மோடி தமிழ் மொழியில் புத்தாண்டு வாழ்த்து

image

தமிழக மக்களுக்கு இந்த புத்தாண்டு வளத்தையும், நல்ல ஆரோக்கியத்தையும் கொண்டுவரட்டும் எனப் பிரதமர் மோடி வாழ்த்துக் கூறியுள்ளார். தனது X பக்கத்தில் தமிழ் மொழியில் வாழ்த்துக் கூறியுள்ள அவர், அனைவரும் நல்ல ஆரோக்கியத்துடன் ஆசீர்வதிக்கப்படட்டும் என்றும் பதிவிட்டுள்ளார்.

News April 14, 2025

ஸ்ரீ-க்கு இதுதான் நடந்துச்சு: உறவினர்

image

நடிகர் ஸ்ரீ உடல் மெலிந்து, அடையாளமே தெரியாதபடி
மாறியது குறித்து அவரது உறவினர் ஒருவர் விளக்கம் அளித்துள்ளார். ஸ்ரீ நடித்த படங்களுக்கான சம்பளத்தை தராமல் பலரும் ஏமாற்றிவிட்டதாகவும், இந்த சூழலில் குடும்ப பிரச்னையும் ஏற்பட்டதால் அவர் அதீத மன அழுத்தத்திற்கு ஆளானதாகவும் உறவினர் தெரிவித்துள்ளார். மேலும், அவர் தனியாக வாழ்ந்து வருவதாகவும், குடும்பத்தினர் அழைத்தும் வர மறுத்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.

News April 14, 2025

மோசடி மன்னன் மெகுல் சோக்சி அதிரடி கைது!

image

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ₹17,219 கோடி மோசடி செய்த தொழிலதிபர் மெகுல் சோக்சியை பெல்ஜியம் போலீசார் கைது செய்துள்ளனர். அவரை நாடு கடத்துவதற்கான பணிகளை இந்திய அரசு தொடங்கியுள்ளது. மோசடி செய்துவிட்டு நாடு நாடாக சுற்றித் திரிந்த வைர வியாபாரி மெகுல் சோக்சி, கடந்த 2023 முதல் பெல்ஜியத்தில் வசித்து வருகிறார். இந்திய அரசின் பல கட்ட முயற்சிகளின் விளைவாக அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

News April 14, 2025

மீண்டும் ஐசிசி பொறுப்பில் சவுரவ் கங்குலி..!

image

ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் கமிட்டியின் தலைவராக சவுரவ் கங்குலி மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தலைமையிலான கமிட்டியில், VVS லக்‌ஷ்மன், ஹமித் ஹசன், தேஷ்மண்ட் ஹெய்ன்ஸ், பவுமா, டிராட் ஆகியோர் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த கமிட்டி, சர்வதேச போட்டிகளில் விதிகள் மாற்றம், நீண்ட கால முன்னேற்றம் குறித்த தனது பரிந்துரைகளை ஐசிசிக்கு வழங்கும்.

News April 14, 2025

பிரபல கன்னட காமெடி நடிகர் மரணம்!

image

பிரபல கன்னட காமெடி நடிகர் பேங்க் ஜனார்தன் (75) காலமானார். உடல்நலக்குறைவால் பெங்களூரு மணிபால் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. 1948-ல் பிறந்த ஜனார்தன், பேங்க்கில் பணியாற்றி, பின்னர் திரைத்துறைக்கு வந்ததால், அந்தப் பெயர் அவருக்கு வந்தது. தர்லே நன் மகா, கணேஷ் சுப்ரமணியா என 500–க்கும் மேற்பட்ட படங்களிலும், சின்னத்திரையிலும் நடித்துள்ளார். #RIP

News April 14, 2025

நாட்டில் தீவிரவாதிகள் சதி.. உளவுத்துறை எச்சரிக்கை

image

வக்ஃப் சட்டத்திற்கு எதிராக மே.வங்கத்தில் நடைபெற்ற போராட்டம் கலவரமாக வெடித்தது. எல்லை பாதுகாப்பு படையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். இந்த கலவரத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவில் பல பிரச்னைகளை உருவாக்க வங்கதேசத்தின் தீவிரவாத அமைப்பான JMB தயாராகி வருவதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள JMB, CAA எதிர்ப்பு போராட்டத்தில் முக்கிய பங்காற்றியது.

error: Content is protected !!