India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
போலி ரேஷன் அட்டைதாரர்களின் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக, உண்மையான ரேஷன் அட்டைதாரர்களுக்கு போதிய அளவு உணவுப்பொருட்கள் வழங்க முடியாத சூழல் ஏற்பட்டது. இந்நிலையில், பொது விநியோகம் அண்மையில் டிஜிட்டல் மயமாக்கப்பட்டதால், நாடு முழுவதும் 5.80 கோடி போலி ரேஷன் அட்டைகள் கண்டறியப்பட்டு ரத்து செய்யப்பட்டன. எனவே, இனி ரேஷன் அட்டைதாரர்களுக்கு சீராக உணவுப்பொருட்கள் கிடைக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவின் பொது ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதி(DD), “Waves” என்ற புதிய OTT தளத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. IFFI திரைப்பட விழாவில், கோவா முதல்வர் இதனை துவங்கி வைத்தார். Waves 65 சேனல்களை தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட மொழிகளில் வழங்குகிறது. Infotainment, கேமிங், கல்வி, ONDC உடன் இணைந்து ஆன்லைன் ஷாப்பிங் போன்ற சேவைகளையும் வழங்குகிறது. இந்த OTT தளம் Android – iOS இல் கிடைக்கிறது.
சென்னை பல்லாவரத்தில் உள்ள ராணுவ முகாம் பகுதியில் ‘தளபதி 69’ படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. ஹெச்.வினோத் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது. இந்நிலையில், படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. முன்னதாக, ராணுவ அதிகாரிகளின் குடும்பத்தாரை விஜய் சந்தித்து பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் ஓய்வுபெறும் நிலையில் உள்ள பேராசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அவர்களை 2025 மே மாதம் வரை மறு நியமனம் செய்து உயர்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. ஆண்டின் பாதியிலேயே பேராசிரியர்கள் ஓய்வுபெற்று சென்றால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நான்கு நாட்களில் சவரனுக்கு ₹1,680 உயர்ந்துள்ளது. 17ஆம் தேதி ₹6,935ஆக இருந்த ஒரு கிராம் தங்கத்தின் விலை, இன்று ₹7,145க்கு விற்கப்படுகிறது. இதனால், நகை வாங்குவோர் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ₹57,160ஆக உள்ளது. வெள்ளியின் விலை கிராம் ₹101ஆக உள்ளது.
சென்னையிலிருந்து 70 பயணிகளுடன் தூத்துக்குடி சென்ற விமானம் அவசரமாக மதுரையில் தரையிறக்கப்பட்டது. தூத்துக்குடியில் மோசமான வானிலை நிலவுவதால் பாதுகாப்பு கருதி மதுரையில் விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்ட இந்த விமானத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்ட 70 பேர் பயணம் செய்தனர். பின்னர், மதுரையிலிருந்து தூத்துக்குடிக்கு அமைச்சர் எ.வ.வேலு சாலை மார்க்கமாகத் புறப்பட்டுச் சென்றார்.
இந்திய மதிப்பீட்டில் ₹1,021 கோடிக்கு ஓவியம் ஒன்று விற்பனையாகி உள்ளது. நியூயார்க்கில் நடைபெற்ற ஏலத்தில் René Magritte 1954-ல் வரைந்த ‘Empire of Light’ இந்த சாதனை விலைக்கு விற்பனையாகியுள்ளது. இந்த ஓவியம் இரவும் பகலும் ஒன்று சேரும் நேரத்தை பிரதிபலிக்கும் வகையில் வரையப்பட்டுள்ளது. இதனை அமெரிக்க கலை உலகில் மிகவும் செல்வாக்கு பெற்ற Mica Ertegun சேகரிப்பில் வைத்திருந்தார்.
அமெரிக்காவில் கவுதம் அதானி உள்ளிட்ட அதானி குடும்பத்தினருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தியாவில் அதானி பங்குகளின் விலை கடும் சரிவை கண்டுள்ளன. இன்றைய வர்த்தக நேர தொடக்கத்திலேயே பங்குகளின் விலை 10 முதல் 20 சதவீத சரிவைக் கண்டன. அதானி எண்டர்பிரைசஸ், அதானி க்ரீன், அதானி எனர்ஜி ஆகிய பங்குகளின் விலை வீழ்ச்சியால் அந்நிறுவனங்களின் சந்தை மதிப்பு கடுமையாகச் சரிந்துள்ளது.
10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வினா-வங்கி புத்தகங்கள் தமிழகம் முழுவதும் மாவட்ட விற்பனை மையங்களில் (பள்ளிகள்) விற்கப்படுகிறது. 10ம் வகுப்பு வினாத்தாள் தொகுப்பு ₹120, கணித தீர்வுப் புத்தகம் ₹175க்கும், 12-ம் வகுப்பு மாதிரி வினாத்தாள் தொகுப்பு (அறிவியல் பாடப்பிரிவு) ₹140, கணித தீர்வுப் புத்தகம், கணித COME புத்தகம் ₹160, இயற்பியல் தீர்வு புத்தகம் ₹70க்கும் விற்கப்படுகிறது.
இந்திய அணியில் தோனிக்கு முன், தோனிக்கு பின் எனப் பிரிக்கும் வகையில் தனது பங்களிப்பை அவர் கொடுத்து விட்டார். அவரின் இடத்தை யார் நிரப்புவார் என்ற கேள்வி தொடர்ந்து எழுகிறது. இது குறித்து பேசிய டிராவிட், பண்ட் 38 டெஸ்ட்டில் 6 சதம், 14 அரைசதம் விளாசி இருக்கிறார். அவர் தோனியின் இடத்தை நிரப்பிவிட்டார் எனக் கூறவில்லை. ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் பண்ட் ஆட்டம் அமர்க்களமாக உள்ளது எனப் பாராட்டினார்.
Sorry, no posts matched your criteria.