news

News October 18, 2024

யாரு சாமி இவங்க.. தாத்தாக்கள் தான் டார்கெட்டாம்..!

image

அமெரிக்காவைச் சேர்ந்த டிஃப்பனி என்ற பெண் (35), முதியவர்களுடன் சேர்ந்து Adult Content உருவாக்கி லட்சங்களில் சம்பாதித்து வருகிறார். பராமரிப்பு இல்லத்தில் வாழும் முதியவர்களை டின்னருக்கு அழைத்து, அவர்களது சம்மதத்துடன் Adult Content படங்களை உருவாக்குகிறார். தனிமையில் அவதிப்படும் தாத்தாக்களை தன்னால் இளமையாக உணர வைக்க முடிவதாகவும், அவர்களது வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் கூறுகிறார்.

News October 18, 2024

வெறுப்பை கக்கினால் தமிழ் நெருப்பை கக்கும்: கமல்

image

தமிழ்த்தாய் வாழ்த்து குளறுபடி விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு, கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ் மீது வெறுப்பை கக்கினாலும், பதிலுக்கு தமிழ் நெருப்பை கக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அரசியல் செய்வதாக நினைத்து திராவிட நல்திருநாடு வார்த்தையை தவிர்த்தது தமிழக மக்களையும், தமிழக அரசின் சட்டத்தையும், இந்தியாவின் பெருமையையும் விளக்கும் தமிழை அவமதிக்கும் செயல் என்றும் அவர் சாடியுள்ளார்.

News October 18, 2024

மகாராஷ்டிரா தேர்தலில் விசிக போட்டி

image

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் என அக்கட்சித் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் உள்ள 288 சட்டமன்ற தொகுதிகளுக்கு நவம்பர் 20 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் விசிக போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் குறித்து நாளை (அக்.19) காலை அவுரங்காபாத்தில் அறிவிப்பதாகவும் திருமாவளவன் கூறியுள்ளார்.

News October 18, 2024

பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி!

image

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் காலிறுதி போட்டியில் பி.வி.சிந்து தோல்வி அடைந்தார். இவர், இந்தோனேசியாவின் கிரிகோரியா மரீஸ்கா துன்ஜங் உடன் மோதிய நிலையில், முதல் சுற்றை மரீஸ்கா துன்ஜங்கும் (21-13), இரண்டாவது சுற்றை சிந்துவும் (21-16) கைப்பற்றினர். இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்கும் 3ஆவது சுற்றில் இருவரும் அதிரடியாக விளையாடிய நிலையில், மரீஸ்கா துன்ஜங் 21-9 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றினார்.

News October 18, 2024

பிகினி உடையில் நடிகையின் Deepfake

image

பிரபல நடிகை மிருணாள் தாகூர் பாத் டப்பில் பிகினி உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால், அந்த புகைப்படம் Deepfake என்பது தெரியவந்துள்ளது. ரிதுபர்ணா பசக் என்ற மாடல் ஒருவரின் புகைப்படத்தில், AI மூலம் மிருணாள் தாகூரின் முகத்தை பொருத்தி எடிட் செய்யப்பட்டுள்ளது. Deepfake மூலம் பகிரப்படும் இது போன்ற புகைப்படங்கள் சினிமா பிரபலங்களை கவலையடைய செய்துள்ளது.

News October 18, 2024

டெல்லிக்கு எதிராக தமிழக அணி ரன் குவிப்பு

image

டெல்லி அணிக்கு எதிரான ரஞ்சி போட்டியில் முதல் நாளில் தமிழக அணி 379/1 ரன்கள் குவித்துள்ளது. முதலில் களமிறங்கிய தமிழக அணியின் ஜெகதீசன் 65 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், வாஷிங்டன் சுந்தர்- சாய் சுதர்சன் ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. சிறப்பாக ஆடிய சாய் சுதர்சன் (202*) இரட்டை சதமடித்தார். வாஷிங்டன் சுந்தர் 96 ரன்னுடன் களத்தில் உள்ளார். டெல்லி அணியின் நவ்தீப் சைனி 1 விக்கெட் வீழ்த்தினார்.

News October 18, 2024

வெஸ்ட் இண்டீசுக்கு 129 ரன்கள் இலக்கு

image

மகளிர் T20 உலகக் கோப்பை 2வது அரையிறுதியில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 128/9 ரன்கள் எடுத்துள்ளது. நியூசி., அணியில் அதிகபட்சமாக Suzie Bates 26, Georgia Plimmer 33 ரன்கள் எடுத்தனர். இதையடுத்து வெஸ்ட் இண்டீசுக்கு 129 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. WI சார்பில் சிறப்பாக பந்து வீசிய Deandra Dottin 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இன்று எந்த அணி வெற்றிபெறும்?

News October 18, 2024

உங்கள் பொன்னான பாதத்திற்கான டிப்ஸ்…

image

*விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சம அளவு எடுத்து பாதத்தில் தடவி வர பாதம் மிருதுவாகும்.
*லேசாக சூடு செய்த வேப்பெண்ணெயை விரல்களின் இடுக்கில் தடவினால் சேற்றுப் புண்கள் சரியாகும்.
*வாழைப்பூவை பருப்பு சேர்த்து சமைத்து சாப்பிட்டு வர, கை, கால்களில் எரிச்சல் நீங்கும்.
2 கால் விரல்களையும் தினமும் 5 நிமிடம் நீட்டி , மடக்கும் பயிற்சி செய்துவர ரத்த ஓட்டம் சீராகும்.

News October 18, 2024

மூலிகை கொசு விரட்டி லோஷன்!

image

டெங்கு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும் கொசுக்களிடம் இருந்து தப்பிக்க கெமிக்கல் கிரீம்களை நம்மில் பலர் பயன்படுத்துகிறோம். சருமத்தில் பக்க விளைவுகளை ஏற்படுத்தும் அவற்றுக்கு பதிலாக, இயற்கையான லோஷனை வீட்டிலேயே நாம் தயாரித்து பயன்படுத்தலாம். தேங்காய் எண்ணெய்யை ஒரு கரண்டியில் ஊற்றி, சூடாக்கி, அதில் கற்பூரம் சேர்த்தால் கரைந்துவிடும். சூடு குறைந்ததும் அதை உடலில் தேய்த்தால் கொசுக்கள் நம்மை நெருங்காது.

News October 18, 2024

தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு: வைரமுத்து எச்சரிக்கை

image

“திராவிட” என்ற சொல்லை நீக்கிவிட்டு தேசிய கீதத்தைப் பாட முடியுமா? என கவிஞர் வைரமுத்து கேள்வி எழுப்பியுள்ளார். திராவிடம் என்பது நாடல்ல; இந்தியாவின் ஆதி நாகரிகத்தின் குறியீடு என்றும் குறிப்பிட்டுள்ளார். தாய்மொழி காக்கத் தங்கள் உடலுக்கும் உயிருக்குமே தீவைத்துக் கொண்டவர்கள் தமிழர்கள், அந்த நெருப்பின் மிச்சம் இன்னும் தங்களிடம் இருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!