news

News November 21, 2024

பெண்களை பாலியல் தொழிலுக்கு தள்ளும் வறுமை

image

உலகின் செக்ஸ் தலைநகராக டோக்யோ மாறி வருவது ஜப்பானியர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பல ஆண்டு காலமாக பாலியல் தேவை கொண்டோர் தாய்லாந்து செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். தற்போது, ஜப்பான் தலைநகர் டோக்யோவில் பாலியல் தொழில் அதிகரித்திருப்பதால் செக்ஸ் விரும்பிகள் அங்கு செல்லத் தொடங்கியுள்ளனர். ஜப்பானில் அதிகரித்து வரும் ஏழ்மை, அந்நாட்டு பெண்களை இந்த அவல நிலைக்கு தள்ளியிருக்கிறது.

News November 21, 2024

இந்தியா-ஆஸி முதல் டெஸ்ட் நாளை தொடக்கம்

image

இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான முதல் போட்டி, பெர்த் மைதானத்தில் நாளை தொடங்குகிறது. கேப்டன் ரோஹித்தின் மனைவிக்கு குழந்தை பிறந்திருப்பதால், அவர் இப்போட்டியில் விளையாடவில்லை. அவருக்கு பதில் பும்ரா கேப்டனாக செயல்படவுள்ளார். பாேட்டி இந்திய நேரப்படி நாளை காலை 7.50 மணிக்கு தொடங்கும். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஆப்பில் போட்டியை நேரலையாக பார்க்கலாம்.

News November 21, 2024

இங்கெல்லாம் இரவு 10 மணி வரை மழை கொட்டும்

image

தமிழகத்தில் இரவு 10 மணி வரை 6 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது. அதன்படி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ராமநாதபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்றும் கனமழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News November 21, 2024

அதானி உடனான ஒப்பந்தத்தை ரத்து செய்தது கென்ய அரசு

image

அதானி குழுமம் உடனான ஒப்பந்தத்தை கென்ய அரசு ரத்து செய்துள்ளது. அமெரிக்க நீதிமன்றத்தின் ஊழல் குற்றச்சாட்டைத் தொடர்ந்து அதானி குழுமத்தின் உடனான மின் பரிமாற்றம் மற்றும் விமான நிலைய விரிவாக்கத்துக்கான கொள்முதல் செயல்முறை என இரு ஒப்பந்தங்களை ரத்து செய்வதாக கென்ய அதிபர் வில்லியம் ரூட்டோ அறிவித்துள்ளார். மேலும் அதானி குழுமத்தின் முன்மொழிவை பரிசீலித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

News November 21, 2024

அதிமுக தொண்டர்களிடையே அடிதடி, மோதல்.. பரபரப்பு

image

கன்னியாகுமரியில் முன்னாள் அமைச்சர்கள் தலைமையில் அதிமுக கள ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, உட்கட்சி பூசல் காரணமாக தொண்டர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக வெடித்தது. இதில், இருதரப்பினர் மாறி மாறி அடித்துக்கொண்டதால் பரபரப்பு நிலவியது. முன்னாள் அமைச்சர் வேலுமணி மேடையில் பேசிக்கொண்டிருந்த போது, அவர் எதிரிலேயே மோதல் வெடித்ததால், சலசலப்பு ஏற்பட்டது.

News November 21, 2024

SK-வுக்கு வில்லனாகும் ஜெயம் ரவி?

image

சிவகார்த்திகேயனின் ‘புறநானூறு’ படத்தில் வில்லனாக நடிக்க ஜெயம் ரவியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக நடிகர் விஷாலிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், ஆனால் அவர் அதற்கு மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தை சுதா கொங்கரா இயக்க உள்ளார். இந்த கதை சூர்யாவிற்காக எழுதப்பட்டது. ஆனால் அவர் மறுக்கவே SK-வை சுதா நாடியதாக கூறப்படுகிறது.

News November 21, 2024

யார் இந்த சாகர் அதானி?

image

சோலார் எனர்ஜி துறையில் பெரிய ஒப்பந்தங்களை பெற இந்திய அதிகாரிகளுக்கு ரூ.2000 கோடி லஞ்சம் கொடுத்ததாக அமெரிக்காவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக கவுதம் அதானியுடன் சேர்த்து சாகர் அதானி மீதும் வழக்குப் பதிந்து அரெஸ்ட் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கவுதம் அதானியின் சகோதரர் மகனான சாகர் அதானி தான், அதானி கிரீன் எனர்ஜி தொடர்பான முழு பிசினஸையும் பார்த்துக் கொள்கிறார்.

News November 21, 2024

2008இல் நடந்தது, 2024இல் நடக்குமா?

image

பெர்த் WACA மைதானத்தில் 2008ஆம் ஆண்டில் நடந்த டெஸ்டில் மட்டுமே இந்தியா வென்றுள்ளது. அப்போட்டியில் இந்திய அணி வீரர் இர்பான் பதான் ஆல்ரவுண்டராக சிறப்பாக செயல்பட்டு 5 விக்கெட் சாய்த்ததுடன் 74 ரன்கள் விளாசினார். இதுவே இந்திய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற காரணமாக அமைந்தது. இதுபோல நாளை தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெல்லுமா? உங்கள் கமெண்ட்சை கீழே பதிவிடுங்க.

News November 21, 2024

CM ஸ்டாலின்- அதானி ரகசிய சந்திப்பு ஏன்? ராமதாஸ்

image

கடந்த ஜூலை மாதம் சென்னையில் CM ஸ்டாலினை, தொழிலதிபர் அதானி ரகசியமாக சந்தித்து பேசியதற்கான நோக்கம் என்ன என ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். அதானி குழுமத்தால் கையூட்டு பெற்ற நிறுவனங்கள் பட்டியலில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெயரும் உள்ளதாக குற்றஞ்சாட்டிய அவர், இது குறித்து விசாரணைக்கு ஆணையிடவும் வலியுறுத்தியுள்ளார். ரகசிய சந்திப்பு குறித்து தமிழக அரசு விளக்கமளிக்கவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

News November 21, 2024

ஸ்ரீலீலா டான்ஸ் ஆடிய பாடல் 24ஆம் தேதி வருகிறது

image

அல்லு அர்ஜுன், ரஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியுள்ள ‘புஷ்பா -2’ படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துள்ளனர். முதல் பாகத்தில் சமந்தா ஒரு பாடலுக்கு நடனமாடியதைப் போல, இப்படத்தில் ஸ்ரீலீலா ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். ‘Kissik’ என பெயரிடப்பட்டுள்ள அந்தப் பாடல் நவ. 24ஆம் தேதி இரவு 7:02க்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் டிசம்பர் 5ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!