news

News October 19, 2024

Pant-க்கு கட்டம் சரியில்ல..!

image

2018ல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமானது முதல், 90 ரன்களுக்கு பிறகு ரிஷப் பண்ட் இதுவரை 7 முறை சதத்தை தவறவிட்டுள்ளார். 2018ல் WI எதிரான 2 போட்டிகளில் 92 ரன்களில் அவுட் ஆனார். 2021ல் AUS உடன் 97 ரன்களிலும், ENG உடன் 91 ரன்களிலும் வெளியேறினார். அதேபோல், 2022ல் SL உடன் 96, BAN உடன் 93 ரன்களில் அவுட் ஆனார். மேலும், NZ-க்கு எதிரான இன்றைய 4ஆவது நாள் ஆட்டத்திலும் 99 ரன்களில் வெளியேறினார்.

News October 19, 2024

தனுஷ் – ஐஸ்வர்யா வழக்கு ஒத்திவைப்பு

image

நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக சில ஆண்டுகளாகவே பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், இருவரும் பரஸ்பரம் விவாகரத்து கோரி குடும்பநல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், இருவருமே ஆஜராகாததால், வழக்கு விசாரணை நவ.2 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த 7ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோதும் இருவரும் ஆஜராகவில்லை.

News October 19, 2024

புது சர்ச்சையில் சிக்கியுள்ள தவெக மாநாடு

image

TVK விக்கிரவாண்டி மாநாட்டுக்காக, மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியின்றி பனங்கன்றுகள் வெட்டப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. மாநாடு நடக்கும் திடலுக்கு அருகில் இருந்த 8 பனங்கன்றுகள் வெட்டப்பட்டதாக தெரிகிறது. இந்த விவகாரம் தற்போது புகைப்படத்துடன் வெளிவந்துள்ளதால், தவெக நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில், அரசு அனுமதியின்றி பனை மரங்களை வெட்டக்கூடாது என்ற உத்தரவு அமலில் உள்ளது.

News October 19, 2024

தீபாவளிக்கு முன் ஓய்வூதியம் .. கோரிக்கை

image

தீபாவளிக்கு முன், ஓய்வூதியம் வழங்கக்கோரி, CM ஸ்டாலினுக்கு போக்குவரத்து ஓய்வூதியதாரர்கள் கடிதம் எழுதியுள்ளனர். ஓய்வூதிய உயர்வு ,அகவிலைப்படி உயர்வு தொடர்பாக பல்வேறு போராட்டங்களை நடத்தியபோதும் அரசு கண்டு கொள்ளவில்லை. இத்தகைய சூழலில் நலிவடைந்து தவிக்கும் ஓய்வூதியர்களுக்கு வழக்கமாக 5ஆம் தேதி வழங்கப்படும் ஓய்வூதியத்தை தீபாவளிக்கு முன்பாகவே வழங்க அக்கடிதத்தில் வலியுறுத்தி உள்ளனர்.

News October 19, 2024

உச்சநீதிமன்றம் எதிர்க்கட்சி அல்ல: D.Y.சந்திரசூட்

image

உச்சநீதிமன்றம் என்பது எதிர்க்கட்சி இல்லை என CJ D.Y.சந்திரசூட் தெரிவித்துள்ளார். சாதகமாகத் தீர்ப்பளித்தால் SCஐ அற்புதமாக நினைப்பவர்கள், எதிராகத் தீர்ப்பளித்தால் கேவலமாக பார்ப்பதாகவும், இது ஒரு ஆபத்தான கருத்து எனவும் கூறியுள்ளார். மேலும், மக்கள் நீதிமன்றமாக SC இருப்பதால், பார்லிமென்டில் எதிர்க்கட்சி ஆற்றும் பங்கை நாங்கள் இங்கு நிறைவேற்றுகிறோம் எனக் கூற முடியாது எனவும் விளக்கமளித்தார்.

News October 19, 2024

‘தளபதி 69’ படப்பிடிப்பு தள்ளிவைப்பு

image

‘தளபதி 69’ படத்தின் 2ஆம் கட்ட படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் இப்படத்தில் பிரியாமணி, கவுதம் மேனன், பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். சில நாட்களுக்கு முன்னர் படப்பிடிப்பு துவங்கிய நிலையில், பாடல் காட்சி படமாக்கப்பட்டது. இந்நிலையில், இந்த மாத இறுதியில் நடைபெற இருந்த 2ஆம் கட்ட படப்பிடிப்பு, TVK மாநாடு (அக்.27) காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

News October 19, 2024

நியூசிலாந்துக்கு 107 ரன்கள் இலக்கு

image

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டின் 2வது இன்னிங்சில் இந்தியா 462 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சிறப்பாக ஆடிய சர்ஃபராஸ் 150, பண்ட் 99, கோலி 70, ரோஹித் 52 ரன்கள் எடுத்தனர். முதல் இன்னிங்சில் இந்தியா 46, நியூசி., 402 ரன்கள் எடுத்தது. 2வது இன்னிங்சில் இந்தியா அதிரடி காட்ட, நியூசி.,க்கு 107 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாளை ஒரு நாள் மீதம் உள்ள நிலையில், எந்த அணி வெற்றிபெறும்?

News October 19, 2024

ரச்சின், சர்ஃபராஸுக்கு சச்சின் வாழ்த்து

image

பெங்களூரு டெஸ்டில் சதம் அடித்த நியூசி., வீரர் ரச்சின், இந்திய வீரர் சர்ஃபராஸ் கான் ஆகியோருக்கு சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார். “கிரிக்கெட் எங்கள் வேர்களை இணைக்கிறது. ரச்சினின் குடும்பத்துக்கு தொடர்புடைய பெங்களூருவில் அவர் சதம் அடித்துள்ளார். சொற்ப ரன்களில் இருந்த தனது அணிக்கு துணையாக நின்று சதம் அடித்துள்ளார் சர்ஃபராஸ். இவர்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது” என வாழ்த்தியுள்ளார்.

News October 19, 2024

அக்.23ல் பிரியங்கா வேட்புமனு

image

வயநாடு இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி வரும் 23ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்ய உள்ளார். அந்த தொகுதியில் முதல்முறையாக போட்டியிடும் பிரியங்கா, ராகுல்காந்தியுடன் சேர்ந்து ரோடு ஷோவும் நடத்த உள்ளார். அங்கு நவ.13 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. வயநாடு, ரேபரேலி என 2 தொகுதிகளிலும் ராகுல் வென்றதால், வயநாடு MP பதவியை அவர் ராஜினாமா செய்தார். அதன் காரணமாக இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

News October 19, 2024

2 மாவட்டங்களுக்கு அலர்ட்

image

திருப்பத்தூர், தி.மலை ஆகிய 2 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வரும் 24ஆம் தேதி வரை கனமழை பெய்யக்கூடும் என்றும், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.

error: Content is protected !!