India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெர்த்தில் இன்று நடைபெற்ற IND-AUS முதல் டெஸ்ட் போட்டியில் இரு அணி பவுலர்களும் சாதனை ஒன்றை படைத்துள்ளனர். மொத்தமாக 17 விக்கெட்டுகள் வீழ்ந்த நிலையில், AUS மண்ணில் 1952க்கு பிறகு முதல் நாளில் எடுக்கப்பட்ட அதிகபட்ச விக்கெட் என்ற சாதனையை இரு அணிகளும் படைத்துள்ளன. மேலும் 1902 ஆண்டு ஆஸி.யில் ENG – AUS மோதிய போட்டியில் ஒரே நாளில் அதிகபட்சமாக 25 விக்கெட்டுகள் எடுக்கப்பட்டதே இதுவரை சாதனையாக உள்ளது.
இன்றிரவு (நவ.11) 10 மணி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்ற தகவலை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. அதில், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, ராமநாதபுரத்தில் இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. ஏற்கெனவே ராமநாதபுரம், நெல்லை, தென்காசியில் தொடர்ந்து மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசின் காேல் இந்தியா நிறுவனத்தில் 640 காலியிடங்களுக்கு விண்ணப்பம் வரவேற்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மைனிங் பிரிவில் 263 இடங்கள், எலெக்ட்ரீக் பிரிவில் 104 இடங்கள் உள்ளன. இந்த வேலைக்கு பிஇ, பிடெக் பாடப்பிரிவில் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வேலைக்கு www.coalindia.com இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு இம்மாதம் 28ஆம் தேதி கடைசி நாளாகும். இந்தத் தகவலை பகிருங்க.
பெண் கவுன்சிலர்கள் அதிகமுள்ள முதல் 10 மாநிலங்களில் தமிழ்நாடும் இடம்பிடித்து கெத்து காட்டியுள்ளது. நாடு முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் மாெத்தமுள்ள கவுன்சிலர்களில் 46% பேர் பெண்கள். இவர்களை கணக்கிட்டு அதிக பெண் கவுன்சிலர்கள் காெண்ட முதல் 10 மாநிலங்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் இமாச்சல் முதலிடத்திலும், TN 10ஆவது இடத்திலும் உள்ளன. TN-ல் 51% பெண் கவுன்சிலர்கள் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
GOOGLE குரோம் பயனாளர்களுக்கு மத்திய கணினி எமர்ஜென்சி குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், கணினிகளில் Windows மற்றும் Mac க்கான 131.0.6778.69/70க்கு முந்தைய டெஸ்க்டாப் வெர்ஷனிலும், Linuxக்கு 131.0.6778.69க்கு முந்தைய டெஸ்க்டாப் வெர்ஷனிலும் கூகுள் குரோம் இயங்குவதாகவும், இதனால் தகவல்களை திருடும் அபாயம் இருப்பதால், உடனே அப்டேட் செய்யுமாறும் கேட்டுக் கொண்டுள்ளது. இந்த தகவலை பகிருங்க.
Jio உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களை காட்டிலும் BSNL கடந்த செப்., மாதத்தில் அதிக வாடிக்கையாளர்களை பெற்றிருப்பது, TRAI அறிக்கையில் தெரியவந்துள்ளது. கடந்த செப்., மாதத்தில் 8.49 லட்சம் புதிய கஸ்டமர்களை பெற்று, BSNL-ன் மொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 9.18 கோடியாக உயர்ந்துள்ளது. ஆனால் அதே மாதத்தில் Jio- 79.69 லட்சம், Airtel- 14.34, Vodafone Idea- 15.53 லட்சம் கஸ்டமர்களை இழந்துள்ளது தெரியவந்துள்ளது.
இந்திய அரசியலமைப்பு முகவுரையில் உள்ள “சோசலிசம், மதச்சார்பின்மை” வார்த்தைகளை நீக்க கோரும் வழக்கில், வரும் 25ம் தேதி சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளிக்கிறது. சுப்ரமணியன் சுவாமி உள்ளிட்டோர் தொடர்ந்த இவ்வழக்கை, பெரிய அமர்வுக்கு மாற்றவும் SC மறுத்துவிட்டது. 1976 எமர்ஜென்சியின்போது 42வது சட்டத்திருத்தம் மூலம் இந்திரா காந்தி அரசால் முறையாக பார்லிமெண்ட் இன்றி, இந்த வார்த்தைகள் சேர்க்கப்பட்டது என்பதுதான் புகார்.
மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகவுள்ள நிலையில், அனைவரது கவனமும் ஏக்நாத் ஷிண்டேவின் பக்கம் திரும்பியுள்ளது. சிவசேனாவை தன்வசம் வைத்துள்ள ஏக்நாத் ஷிண்டே தற்போது 38 எம்.எல்.ஏக்களுடன் முதல்வராக உள்ளார். 102 எம்.எல்.ஏக்களை கொண்ட பாஜக DCM பதவியைத் தான் வைத்துள்ளது. Exit Polls கணிப்புகள் படி நாளை தேர்தல் முடிவுகள் வந்தால் மீண்டும் ஏக்நாத் ஷிண்டே கிங்(CM), கிங் மேக்கராக உருவெடுப்பார்.
அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ் உள்ளிட்ட ஓடிடி தளங்கள் கட்டணத்தை வசூலித்து கொண்டே அனைத்து சேவைகளையும் அளிக்கின்றன. இந்நிலையில், மத்திய அரசின் பிரசார் பாரதி நிறுவனம் WAVES என்ற புதிய ஓடிடி தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த தளத்தில் நமது செல்போன் எண்ணை உள்ளிட்டு நுழைந்தால் தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் படம், வெப் சீரீஸ், டிவி நேரலை இலவசமாக காணலாம். SHOPPING சேவையையும் இத்தளம் அளிக்கிறது.
ஜம்மு & காஷ்மீரின் கிஷ்த்வார் பகுதியில் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையின் போது, ராஷ்டிரிய ரைஃபிள்ஸ் பிரிவைச் சேர்ந்த வீரர்கள் பொதுமக்களை தாக்கியதாக புகார் எழுந்தது. இந்நிலையில், அது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக ராணுவம் தெரிவித்துள்ளது. இதனிடையே, மனித உரிமை மீறலில் ஈடுபட்ட வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்க அம்மாநில முன்னாள் முதல்வர் மெகபூபா முஃப்தியும் கோரிக்கை விடுத்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.