news

News October 21, 2024

கணவரை பற்றி சிலாகித்த வரலட்சுமி

image

தனது கணவர் பார்க்கத்தான் முரட்டுத்தனமாக இருப்பார், ஆனால் நிஜத்தில் குழந்தை மனது படைத்தவர் என வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார். நிக்கோலாய்க்கு தமிழ் பேசவராவிட்டாலும் புரிந்து கொள்ள முடியும் எனவும், அவருக்கு தற்போது தான் தமிழ் கற்றுக் கொடுத்துக் வருவதாகவும் கூறியுள்ளார். மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவுக்கும், வரலட்சுமி சரத்குமாருக்கும் கடந்த ஜூலையில் திருமணமானது.

News October 21, 2024

90 நாள்கள் கெடாத பாலுக்கு தேவை அதிகரிப்பு

image

தற்போதைய பருவமழை காலத்தில், 90 நாள்கள் கெடாத ஆவின் பால் பாக்கெட் உற்பத்தி மீண்டும் தொடங்கப்படுமா என நுகர்வோர் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கடந்த 2020 நவம்பரில் இந்த பால் உற்பத்தி தொடங்கப்பட்டது. மிக்ஜாம் புயல் உள்ளிட்ட பேரிடர் காலங்களில் இந்த பால் பாக்கெட்கள் சென்னை மக்களுக்கு மிகவும் பயன்பட்டன. ஆனால், ஆவினுக்கு நஷ்டம் ஏற்பட்ட காரணத்தால் இதன் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

News October 21, 2024

அணு ஆயுதங்களுக்கு Expiry Date இருக்கா..?

image

ஒவ்வொரு பொருளுக்கும் இருப்பது போன்று அணு ஆயுதங்களுக்கும் Expiry Date இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதிகபட்ச ஆயுட்காலம் 24,000 ஆண்டுகள் வரை இருக்கும் எனவும், இந்த எக்ஸ்பைரி டேட் குறைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். அணு ஆயுதங்களை பாதுகாப்பதில் அதிக சவால்கள் இருக்கும் நிலையில், அணு கழிவுகளும் இயற்கைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

News October 21, 2024

அயோத்தி வழக்கில் இப்படிதான் தீர்ப்பு வழங்கப்பட்டது!

image

அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்குவதற்கு முன்னதாக கடவுளிடம் வேண்டியதாக சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார். முடிவுக்கு வர முடியாத வழக்குகள் அடிக்கடி வருவதுண்டு எனவும், தன் முன் 3 மாதங்களாக இருந்த அயோத்தி வழக்கிற்கு தீர்வு வேண்டும் என தெய்வத்தின் முன் அமர்ந்து கேட்டதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், நம்பிக்கை இருந்தால் கடவுள் நல்ல வழியை காட்டுவார் எனவும் தெரிவித்துள்ளார்.

News October 21, 2024

13 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்

image

தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதால் சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், கடலூர், பெரம்பலூர், திருச்சி, மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் ஒரு சில இடங்களில் லேசான/ மிதமான மழை பெய்யக்கூடும்.

News October 21, 2024

தமிழகத்தில் வெறுப்பு அரசியல் நடக்கிறது: பாஜக

image

தமிழகத்தில் தனிநபர் துதிபாடும் அரசியலும், வெறுப்பு அரசியலும் நடந்து வருவதாக பாஜக விமர்சித்துள்ளது. இளைய சமுதாயத்தை தவறான முறையில் வழி நடத்துவது தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும் செய்யும் துரோகம் என்பதை அனைத்து அரசியல் கட்சிகளும் உணர வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. மேலும், துணை முதல்வர் உதயநிதிக்கு நேர்மறை அரசியலை முதல்வர் ஸ்டாலின் கற்றுக் கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.

News October 21, 2024

Health Tips: கேரட்டில் இருக்கும் நன்மைகள்

image

கேன்சரை தடுப்பதிலும், கண்களை ஆரோக்யமாக வைத்திருப்பதிலும் கேரட் முக்கிய பங்கு வகிப்பதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். கேரட்டில் இருக்கும் ஆன்டிஆக்சிடென்ட்ஸ் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. ஈறுகள், பற்கள், சரும ஆரோக்யத்திற்கு இதில் இருக்கும் வைட்டமின் சி உதவுகிறது. கேரட்டில் இயற்கை சர்க்கரை அதிகமாக இருந்தாலும், அவை நீரிழிவு எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

News October 21, 2024

இந்த வாரம் OTT ரிலீசாகும் படங்கள்

image

வருகிற 25ஆம் தேதி 2 தமிழ் படங்களும், 1 வெப் தொடரும் OTT-யில் வெளியாக உள்ளன. பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி, அரவிந்த்சாமி நடித்த ‘மெய்யழகன்’ திரைப்படம் நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் ரிலீசாக உள்ளது. ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி இயக்கி, நடித்த ‘கடைசி உலகப் போர்’ அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது. ‘மர்மதேசம்’ இயக்குநர் நாகா இயக்கியுள்ள ‘ஐந்தாம் வேதம்’ வெப் தொடர் ZEE5 தளத்தில் ரிலீசாக உள்ளது.

News October 21, 2024

மர்ம நோயால் 17 குழந்தைகள் உயிரிழப்பு

image

ராஜஸ்தானில் மர்ம நோய் தாக்கி கடந்த 30 நாள்களில் 17 குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று 2 வயது ஆண்குழந்தை பலியாகியுள்ளது. காய்ச்சல், இருமல் என நோய்வாய்ப்பட்ட 3 நாள்களுக்குள் குழந்தை உயிரிழந்துள்ளது. பருவகால நோய்கள் காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், இதுகுறித்து தீவிரமாக ஆராய்ந்து வருவதாகவும் கூறியுள்ளது.

News October 21, 2024

சீமான் போலி அரசியல்வாதி: சிவசங்கர்

image

NTK ஆட்சியில் புதிய தமிழ்த்தாய் வாழ்த்து கொண்டுவரப்படும் என சீமான் பேசியதற்கு அமைச்சர் சிவசங்கர் எதிர்வினையாற்றியுள்ளார். சீமான் வெறும் போலி அரசியல்வாதி, அவரை மக்கள் புறம் தள்ளுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்த்தாய் வாழ்த்து பற்றி பண்பாடு தெரிந்தவர்களுக்குத்தான் புரியும் எனவும், சீமான் போன்றவர்கள் எதையாவது ஒன்றை பரபரப்பு செய்திகளுக்காக பேசுவார்கள் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

error: Content is protected !!