news

News October 21, 2024

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய யூடியூபர் இர்ஃபான்

image

யூடியூபர் இர்ஃபானுக்கு ஜூலை 24ம் தேதி குழந்தை பிறந்தது. ஆபரேஷன் தியேட்டரில் இருந்து தொப்புள் கொடியை வெட்டுவது போன்ற வீடியோவை வெளியிட்டிருந்தார். விதிகளின்படி, தொப்புள் கொடியை இர்ஃபான் வெட்டியது குற்றமென டாக்டர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து புகார் அளிக்கப்பட்ட நிலையில், ஹாஸ்பிடல், இர்ஃபானிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, குழந்தை பாலினத்தை கூறி இவர் சர்ச்சையில் சிக்கினார்.

News October 21, 2024

ALERT: இந்த மாவட்டங்களில் மிக கனமழை கொட்டும்

image

தமிழகத்தில் இன்று தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யலாம் என வானிலை மையம் ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது. சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், தேனி, திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், கடலூர், அரியலூர், பெரம்பலூர், கரூர், சேலம், நாமக்கல், திருச்சி, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 21 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் எனக் கணித்துள்ளது.

News October 21, 2024

நடிப்புக்கு முடிவுரை எழுதும் சமந்தா?

image

நடிகை சமந்தா முழு நேரத் தயாரிப்பாளராக மாற இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் அவர், ‘தளபதி 69’ உள்பட பல படங்களில் நடிக்க “நோ…” சொல்லிவிட்டாராம். ஒரேயொரு ஹிந்தி வெப் சீரிஸ் மட்டும் கைவசம் வைத்திருக்கும் சமந்தா, முழு நேரத் தயாரிப்பாளராக முடிவு எடுத்திருக்கிறாராம். இதற்காக ட்ரலாலா மூவிங் பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி மும்முரமாக பணியாற்றி வருகிறார்.

News October 21, 2024

ரயிலில் இதை எடுத்துச் செல்லக்கூடாது

image

தீபாவளி நெருங்கி வருவதால் மக்கள் வெடி பொருட்களை ரயிலில் சொந்த ஊர்களுக்கு எடுத்துச் செல்வர். ஆனால் ரயில்வே பாதுகாப்பு விதிகளின் படி அது தவறு. எளிதில் தீப்பிடிக்க வாய்ப்புள்ளதால் கொண்டு செல்ல அனுமதி கிடையாது. ஒருவேளை மீறி கொண்டு சென்றால் ரூ.1000 அபராதமும், 3 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்படும். கேஸ் ஸ்டவ், சிலிண்டர்கள், அமிலங்கள் போன்றவற்றை எடுத்துச் செல்லவும் அனுமதி இல்லை.

News October 21, 2024

இவர்கள் செய்தால் சரி, இந்தியா செய்தால் தவறா?

image

ஜனநாயகம், மதச்சார்பின்மை, சட்டத்தின் ஆட்சி என எல்லாவற்றிலும் மேற்கத்திய நாடுகளுக்கு இரட்டை வேடம் தான். மற்ற நாடுகளுக்கு சொல்லும் அறிவுரையை அவர்கள் பின்பற்ற மாட்டார்கள். தீவிரவாதத்தை ஒழிக்கிறோம் என நாடுகளை அழிப்பார்கள், ஆட்சிகளை கவிழ்ப்பார்கள், மதத்தீவிரவாதத்தை ஊட்டி வளர்ப்பார்கள். ஆனால், நாட்டை பிளவுபடுத்த சதி செய்யும் தீவிரவாதிகளை அழிக்க முயற்சித்தால், இந்தியாவுக்கு தடை போடுகிறார்கள். இது சரியா?

News October 21, 2024

Apply Now: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

image

தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்தில் தொழில் பழகுநர் பயிற்சி பெற விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது. ஓராண்டு Apprentices பயிற்சி விரும்புவோர் இன்றே விண்ணப்பிக்கலாம். பயிற்சி இடங்கள்: 499. கல்வித் தகுதி: Diploma, B.A, B.Sc, B.Com, BBA, BBM, B.E. வயது வரம்பு: 18-30. தேர்வுமுறை: நேர்காணல் & சான்றிதழ் சரிபார்ப்பு. உதவித்தொகை: ₹8,000 – ₹9,000. கூடுதல் விவரங்களுக்கு இந்த <>TNSTC<<>> லிங்க்கை கிளிக் செய்யவும்.

News October 21, 2024

ரஜினிக்கு கண்டிஷன் போட்ட மருத்துவர்கள்

image

ரஜினியை வைத்து சண்டை காட்சிகளைப் படமாக்கக் கூடாது என மருத்துவர்கள் எச்சரித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ‘கூலி’ படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ளது. இதில் ரஜினி பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் ஓய்வெடுக்க வேண்டுமென மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இனி அவர் படப்பிடிப்பில் பங்கேற்றாலும், அவரை வைத்து சண்டைக் காட்சிகள் படமாக்கப்படாது எனக் கூறப்படுகிறது.

News October 21, 2024

இந்தியா கூட்டணியில் விரிசல் தொடங்குகிறதா?

image

ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக ‘இந்தியா’ கூட்டணி கட்சியான RJD அறிவித்துள்ளது. தாங்கள் 18-20 தொகுதிகளில் வலுவாக உள்ள நிலையில், 12 சீட்களுக்கு குறைவாக ஒதுக்கப்படுவதை ஏற்க முடியாது என்றும், BJP-ஐ தோற்கடிக்க 60 தொகுதிகளில் இந்தியா கூட்டணிக்கு ஆதரவளிப்போம் எனவும் அக்கட்சி தெரிவித்துள்ளது. கட்சியின் இருப்பை தக்க வைப்பது, கூட்டணி தர்மம் என இந்தியா கூட்டணிக்கு ஒரே நெருக்கடி தான்.

News October 21, 2024

உங்கள் பெயரில் போலி சிம்மா? இதை செய்யுங்கள்!

image

உங்களுக்கு தெரியாமல், உங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி, போலி சிம் கார்டுகள் வாங்கப்பட்டுள்ளதோ என்று சந்தேகம் இருக்குமானால், <>TAFCOP<<>> என்ற இந்த தளத்திற்குச் செல்லுங்கள். உங்கள் செல்ஃபோன் நம்பரை உள்ளிட்டு தேடினால், உங்கள் பெயரில் உள்ள அத்தனை சிம் கார்டு விபரங்களும் தெரியவரும். ஒருவேளை நீங்கள் பயன்படுத்தாத எண் தென்பட்டால், ‘Not My Number’ என்ற பொத்தானை தட்டி, புகாரளித்து அந்த எண்ணை தடைசெய்யலாம்.

News October 21, 2024

தீபாவளிக்கு 14,086 சிறப்பு பேருந்துகள்

image

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 14,086 சிறப்பு பேருந்துகளை இயக்கவுள்ளதாக போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. இதில், சென்னையில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு 11,176 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அக். 28 முதல் 30 வரை வழக்கமான பேருந்துகளுடன் சேர்ந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். 3 நாள்களில் சுமார் 5.83 லட்சம் பேர் பயணிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!