news

News October 21, 2024

அதிமுகவில் நடிகை கவுதமிக்கு முக்கிய பதவி

image

அதிமுகவில் மிகப்பெரிய பதவியாக கருதப்படும் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவி நடிகை கவுதமிக்கு வழங்கப்பட்டுள்ளது. அண்ணாமலை உள்ளிட்டோர் மீது அடுக்கடுக்கான புகாரை கூறி, பாஜகவில் இருந்து விலகிய கவுதமி, அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இந்நிலையில், அதிமுகவில் நீண்ட கால அனுபவம் வாய்ந்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் ‘கொள்கை பரப்பு துணைச் செயலாளர்’ பதவியை அவருக்கு இபிஎஸ் வழங்கியுள்ளார்.

News October 21, 2024

சோகத்தில் முடிந்த காதல் கதை SO SAD!

image

டெல்லியில், வேலைக்கு போகாமல், சும்மா பார்ட்டி செய்து கொண்டிருந்த காதலனை மாற்றமுடியாத வேதனையில், மணிக்கட்டை அறுத்துக்கொண்டு ரத்த வெள்ளத்தில் வீடியோ அனுப்பியுள்ளார் காதலி. வீடியோவை பார்த்து பதறிய காதலன், அப்பெண்ணை ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் செல்ல, மருத்துவர்கள் வேகமாக செயல்பட்டு பெண்ணை காப்பாற்றிவிட்டனர். ஆனால் அதிர்ச்சியில் உறைந்த காதலன், காதலியின் கண்களை பார்த்தபடி மாரடைப்பால் உயிரிழந்தார்.

News October 21, 2024

தமிழ், தமிழன், திராவிடத்தை தொடக்கூட முடியாது: உதயநிதி

image

திமுகவின் கடைசி தொண்டனும், தமிழனும் இருக்கும் வரை தமிழ், தமிழன், திராவிடத்தை தொடக்கூட முடியாது என உதயநிதி கூறியுள்ளார். இந்தியை திணிக்க முடியாததால், தமிழ்த்தாய் வாழ்த்தில் சில சொற்களை தவிர்த்ததாக குற்றஞ்சாட்டிய அவர், இந்தி திணிப்பை தமிழகம் ஒருநாளும் ஏற்காது என்றார். முன்னதாக, ஆளுநர் பங்கேற்ற DD தமிழ் நிகழ்ச்சியில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்தில், திராவிடநல் திருநாடும் என்ற வார்த்தை விடுபட்டது.

News October 21, 2024

தீபாவளி போனஸ் அறிவித்தது அரசு

image

தமிழகத்தில் உள்ள 20,000க்கும் மேற்பட்ட டாஸ்மாக் ஊழியர்களுக்கு தமிழக அரசு தீபாவளி போனஸ் அறிவித்துள்ளது. அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் C, D பிரிவு ஊழியர்களுக்கு 20% போனஸ் வழங்கப்படும் என CM ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, டாஸ்மாக் ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அதிகபட்சமாக ஒரு டாஸ்மாக் ஊழியருக்கு ₹16,800 போனஸ் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.

News October 21, 2024

சவுதி அரேபியாவில் நடைபெறும் ஐபிஎல் ஏலம்!

image

ஐபிஎல் மெகா ஏலம் சவுதி அரேபியாவில் நவம்பர் 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து BCCI அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என்றாலும், விரைவில் ஏலம் தொடர்பான அட்டவணை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஐபிஎல் அணிகள் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை அக்.31 மாலை 5 மணிக்குள் BCCIயிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

News October 21, 2024

அதிக கட்டணம் வசூலித்தால்… இந்த எண்ணை அழையுங்கள்!

image

தீபாவளி நேரத்தில் தமிழ்நாட்டில் ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்தால் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என்று தமிழக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. 1800 425 6151, 9445014436, 044-2474 9002 / 2628 0445/ 2628 1611 தொலைபேசி எண்களில் தொடர்புகொண்டு மக்கள் புகார் தெரிவிக்கலாம். பயணிகளின் வசதிகளுக்காக கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

News October 21, 2024

நாதக நிர்வாகி கட்சியில் இருந்து விலகல்

image

நாதக விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலர் மணிகண்டன் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஏற்கெனவே, விழுப்புரம் மேற்கு மாவட்டச் செயலாளர் பூபாலன், வடக்கு மாவட்டச் செயலாளர் சுகுமார் அடுத்தடுத்து கட்சியில் இருந்து விலகினர். இவர்கள் அனைவரும் கட்சியில் உரிய மரியாதையும், அங்கீகாரமும் கிடைக்கவில்லை என்றும், சீமானின் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியவில்லை எனவும் சரமாரியாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.

News October 21, 2024

மனிதனும் நாயகனும் மோதிக் கொண்ட நாள்!

image

மணிரத்னம் இயக்கத்தில், கமல் நடிப்பில் உருவான ‘நாயகன்’ திரைப்படம் வெளியாகி 37 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. அதே நாளில், ரஜினியின் ‘மனிதன்’ திரைப்படமும் வெளியானது. இரு படங்களும் வெற்றி பெற்றிருந்தாலும் ஃபாக்ஸ் ஆஃபிஸில் ‘மனிதன்’ அதிகமாக வசூலித்தது. ஆனால், தலைமுறைகள் கடந்தும் ‘நாயகன்’ இன்றும் கொண்டாடப்படுகிறது. இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? கமெண்ட்ல சொல்லுங்க.

News October 21, 2024

பொது அறிவு: கேள்விகளுக்கான பதில்கள்

image

இன்று 11 மணிக்கு <<14412876>>GK<<>> வினா-விடை பகுதியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் இவையே. 1) கிம்பர்லி – தென் ஆப்பிரிக்கா 2) திப்பு சுல்தான் 3) கோவாரா மீன் 4) ஜப்பான் 5) Research and Analysis Wing 6) பெங்குவின் 7) நாய் (48 பற்கள்). இதுபோன்ற அறிவார்ந்த தகவல்களை பெற Way2News-ஐ தொடர்ந்து படியுங்கள். இன்றைய கேள்விகளுக்கு நீங்கள் எத்தனை சரியான பதிலளித்தீர்கள் என இங்கே கமெண்ட்டில் சொல்லுங்கள்.

News October 21, 2024

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய யூடியூபர் இர்ஃபான்

image

யூடியூபர் இர்ஃபானுக்கு ஜூலை 24ம் தேதி குழந்தை பிறந்தது. ஆபரேஷன் தியேட்டரில் இருந்து தொப்புள் கொடியை வெட்டுவது போன்ற வீடியோவை வெளியிட்டிருந்தார். விதிகளின்படி, தொப்புள் கொடியை இர்ஃபான் வெட்டியது குற்றமென டாக்டர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து புகார் அளிக்கப்பட்ட நிலையில், ஹாஸ்பிடல், இர்ஃபானிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, குழந்தை பாலினத்தை கூறி இவர் சர்ச்சையில் சிக்கினார்.

error: Content is protected !!