India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
டெங்கு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும் கொசுக்களிடம் இருந்து தப்பிக்க கெமிக்கல் Repellent & Coil-களை நம்மில் பலர் பயன்படுத்துகிறோம். சுவாசப் பிரச்னை & பக்க விளைவுகளை ஏற்படுத்தும் அவற்றுக்கு பதிலாக, இயற்கையான புகைமூட்டிகளை வீட்டிலேயே நாம் தயாரித்து பயன்படுத்தலாம். யூகலிப்டஸ், தும்பை, வேம்பு, துளசி, நொச்சி ஆகியவற்றின் இலைப் பொடிகளை நெருப்புத்தணலில் போட்டு அதன் புகையை வீடு முழுவதும் காட்டலாம்.
ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமிதாப் நடிப்பில் கடந்த 10ஆம் தேதி வெளியான ‘வேட்டையன்’ படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இப்படம் வெளியான 4 நாள்களில் ₹240 கோடி வசூலித்ததாக படக்குழு அறிவித்தது. இந்நிலையில் விரைவில் இப்படம் OTTக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது நவ.7 – 9 ஆகிய தேதிக்குள் இப்படம் அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது.
மேற்கு ரயில்வேயில் 5,066 அப்ரண்டிஸ் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை (அக்.22) கடைசி நாளாகும். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கல்வித் தகுதியாக 10ஆம் வகுப்பில் 50% தேர்ச்சியுடன், ஐடிஐ தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். இதற்கு வயது வரம்பாக 15- 24 வரை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. விருப்பமுள்ளவர்கள் rrc-wr.com இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
பாபா சித்திக் கொலை, சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் என அடுத்தடுத்த சம்பவங்களால் தினசரி செய்தி ஆகியுள்ளது லாரன்ஸ் பிஷ்னோய் கேங். தனிமை சிறையில் இருக்கும் தலைவன் லாரன்ஸ் பிஷ்னோய் சொன்னால் போதும், ஆட்களை போட்டுத்தள்ள துப்பாக்கியுடன் 700 ரவுடிகள் தயாராக இருக்கிறார்களாம். பஞ்சாப், இ.பி., அரியானா, ராஜஸ்தான் என வடமாநிலங்களில் செயல்பட்டு வரும் இந்த கேங், தற்போது கனடா வரை நெட்வொர்க் வைத்திருக்கிறதாம்.
Emerging ஆசிய கோப்பை தொடரில் வெறும் 11 ஓவரிலேயே இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த UAE, 16.5 ஓவரிலேயே 107 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்த எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய IND, அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 10.5 ஓவரில் 3 விக்கெட்டை பறிகொடுத்து 111 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. IND சார்பில் அபிஷேக் சர்மா 58 ரன்கள் குவித்தார். கடைசி 2 பந்தில் பதோனி SIX,FOUR பறக்கவிட்டார்.
2030க்குள் உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும் என EAM ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். தனியார் TV நிகழ்ச்சியில் பேசிய அவர், தொழில்நுட்பம், AI மற்றும் செமிகண்டக்டரின் வளர்ச்சியை பார்க்கும்போது, இந்தியாவின் திறன் முக்கியத்துவம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது என்றார். மேலும், மக்கள்தொகை, திறன் ஆகியவை இந்தியாவில் அதிகம் என்பதால், யார் முன்னேறுகிறார்கள் என்பதுதான் இதில் முக்கியம் எனக் கூறினார்.
Emerging ஆசிய கோப்பை தொடரில் UAE அணிக்கெதிரான ஆட்டத்தில் அதிரடியாக ஆடிவரும் அபிஷேக் ஷர்மா 20 பந்துகளில் அரைசதம் அடித்துள்ளார். எதிரணியின் பவுலிங்கை துவம்சம் செய்துவரும் அவர் தற்போது வரை 5 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். இவரது அதிரடியால் இந்தியா 7 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 80 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா வெற்றிக்கு இன்னும் 28 ரன்களே தேவை.
நம் ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள் (அ) ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பது ரத்தசோகை எனப் படுகிறது. உடலுக்கு ஆக்சிஜனை கொண்டு செல்லும் சிவப்பணுக்கள் குறையும்போது, உடல்சோர்வு, மூச்சு வாங்குதல், மயக்கம், உடல் பலவீனம் போன்ற அறிகுறிகள் தோன்றும். ஒப்பீட்டளவில் பெண்களுக்கே ரத்தசோகை அதிகம் உள்ளது. இதனால் பிரசவத்தில் சிக்கல், தாய் உயிரிழக்கும் அபாயம் ஏற்படலாம். பிறக்கும் குழந்தையையும் இது பாதிக்கும்.
RJ பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள ‘SURIYA 45’ படத்தில் ருக்மிணி வசந்த் & மிருணாள் தாகூர் கதாநாயகிகளாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெய்வீக ஃபேன்டஸி கதைக்களத்தில் உருவாகவுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைக்க உள்ளதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. டிரீம் வாரியர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பரில் தொடங்கவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு படையெடுக்க தயாராகி வருகின்றனர். இதைப்பயன்படுத்தி, தனியார் பேருந்துகள் கட்டணத்தை 2 மடங்கு உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்தால் 1800 4256151, 01044-2474 9002, 044-2628 0445, 044-2628 1611 என்ற எண்களில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.