news

News November 24, 2024

டவர் கவரேஜ் பகுதியை வெளியிட டிராய் உத்தரவு

image

செல்போன் பயனாளர்கள் சிக்னல் கிடைக்காமல் சில பகுதிகளில் அவதிப்படுவர். அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், டிராய் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. எந்தெந்த பகுதிகளில் டவர் கவரேஜ் உள்ளது என்பதை இணையதளம், செயலியில் வெளியிடும்படி தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு டிராய் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு அமலுக்கு வந்ததும் டவர் கவரேஜ் பகுதியை நாமே எளிதில் தெரிந்து கொள்ளலாம்.

News November 24, 2024

DAY 1 IPL ஏலம்: CSK ஏலத்தில் எடுத்த வீரர்கள்

image

IPL 2025ஆம் ஆண்டு போட்டியில் விளையாடவுள்ள கிரிக்கெட் வீரர்கள் இன்று ஏலத்தில் எடுக்கப்பட்டனர். இன்றைய முதல்நாள் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (CSK) ஏலத்தில் எடுத்த வீரர்களை காணலாம். *நூர் அகமது – ரூ.10 கோடி *அஸ்வின் – ரூ.9.75 கோடி * கான்வே – ரூ.6.25 கோடி * சையது கலீல் அகமது – ரூ.4.80 கோடி *ரச்சின் ரவீந்திரா – ரூ.4 கோடி *ராகுல் திரிபாதி – ரூ.3.40 கோடி *விஜய் சங்கர் – ரூ.1.20 கோடி.

News November 24, 2024

எங்கும் தமிழ், எதிலும் தமிழ்… ஸ்டாலின் விருப்பம்

image

தமிழ்நாட்டில் எங்கும் தமிழ், எதிலும் தமிழ் இருக்க வேண்டும் என்று CM ஸ்டாலின் விருப்பம் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற முத்தமிழ் பேரவை பொன்விழா ஆண்டு இசை விழாவில் பேசிய அவர், இசையிலும் தமிழ் ஒலிக்க வேண்டும், செழிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். எந்த ஆதிக்கத்தையும் வெல்லும் ஆற்றல் மொழிக்கும், கலைக்கும் உண்டு என்றும், அந்த இரண்டையும் கண்போல காக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் காெண்டார்.

News November 24, 2024

தமிழ் இலக்கியம் படித்தோருக்கு அரசு வேலையில் முன்னுரிமை

image

தமிழ் இலக்கியம் படித்தோருக்கு அரசு வேலையில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார். தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசியபோது இந்தத் தகவலை அவர் தெரிவித்தார். மேலும் அவர், தஞ்சையில் சோழர் அருங்காட்சியகத்திற்கான படங்கள் தயாராகி வருவதாகவும், விரைவில் அதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் இடம் தேர்வு செய்யப்படும் எனவும் கூறினார்.

News November 24, 2024

உத்தரப் பிரதேச கலவரத்தில் 3 பேர் பலி

image

உத்தரப் பிரதேச கலவரத்தில் 3 பேர் பலியாகியுள்ளனர். சம்பலில் உள்ள பழமையான மசூதி, இந்து கோயில் மீது கட்டப்பட்டு இருப்பதாக கூறி கோர்ட்டில் வழக்கு உள்ளது. இதில் கோர்ட் பிறப்பித்த உத்தரவுப்படி அதிகாரிகள் ஆய்வு நடத்த சென்றபோது, அப்பகுதியினர் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து போலீசாருக்கும் அப்பகுதியினருக்கும் இடையே மோதல் வெடித்தது. வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. 30 போலீசாரும் காயமடைந்தனர்.

News November 24, 2024

Office-ல் தூங்கியவருக்கு அடித்த ஜாக்பாட்டை பாருங்க..!

image

ஆஃபிஸில் தூங்கிய நபரை பணி நீக்கம் செய்த கம்பெனிக்கு, ₹4 கோடியை ஊழியருக்கு வழங்க சீன கோர்ட் உத்தரவிட்டுள்ளது. பல ஆண்டுகளாக பணி செய்து வந்த ஊழியர் சாங்கை, ஆஃபிஸில் தூங்கிய காரணத்திற்காக, கம்பெனி பணி நீக்கம் செய்ய, அவரோ கோர்ட்டை நாடியுள்ளார். நிறுவனத்திற்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தியவரையே பணி நீக்கம் செய்ய முடியும், தூங்குவது என்பது அந்த தீவிர இழப்பில் சேராது என கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

News November 24, 2024

இந்திய அணியில் புறக்கணிப்பு, ஆனால் IPLஇல் அதிர்ஷ்டம்

image

உள்நாட்டு போட்டிகளில் விளையாடவில்லை எனக் கூறி, இந்திய அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டவர்கள் இசான் கிஷண், ஷ்ரேயஸ் ஐயர். இதனால் நீண்ட நாள்களாக சர்வதேச போட்டிகளில் விளையாடாமல் இருந்து வருகின்றனர். இந்நிலையில், ஐபிஎல் ஏலத்தில் ஷ்ரேயஸ் ரூ.26.75 கோடிக்கு பஞ்சாப் அணியால் வாங்கப்பட்டுள்ளார். அதேபோல், இசான் கிஷண் சன்ரைசர்ஸ் அணியால் ரூ.11.25 கோடிக்கு ஏலத்தில் வாங்கப்பட்டுள்ளார்.

News November 24, 2024

APPLY NOW: BEL நிறுவனத்தில் 229 பணியிடங்கள்

image

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்தில் காலியாக உள்ள 229 பொறியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் பணியிடங்கள் உள்ளன. BE/B.Tech/B.Sc இன்ஜினியரிங் முடித்த 28 வயதுக்கு உட்பட்டவர்கள் <>www.bel-india.in<<>> என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி டிச.10.

News November 24, 2024

24 வயது இளவட்டத்தை ₹10 கோடிக்கு வாங்கிய CSK..!

image

ஆஃப்கன் வீரர் நூர் அகமதை ₹10 கோடி கொடுத்து CSK வாங்கியுள்ளது. இடது கை ஸ்பின் பவுலரான அகமது, கடந்த 2023 சீசனில் தான் IPL-ல் அறிமுகமானார். குஜராத் அணிக்காக விளையாடி வந்தவரைத்தான் CSK தூக்கியுள்ளது. 24 வயதே ஆன அகமது, இதுவரை 23 ஐபிஎல் போட்டிகளில் தான் விளையாடியுள்ளார். IPL-ல் மொத்தம் 24 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். கடந்த 2022ஆம் ஆண்டில்தான் அவர் சர்வதேச போட்டிகளில் அறிமுகமானார்.

News November 24, 2024

குணச்சித்திர நடிகர் தனபால் காலமானார்

image

பழம்பெரும் குணச்சித்திர நடிகர் தனபால் (95) காலமானார். சென்னையில் வசித்துவந்த அவர், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று உயிரிழந்தார். ரஜினிகாந்த் நடித்த நான் மகான் அல்ல, விஜயகாந்த் நடித்த சொக்கத்தங்கம் உள்பட 100க்கும் மேற்பட்ட படங்களில் தனபால் நடித்துள்ளார். இவரது மறைவுக்கு திரையுலகை சேர்ந்த பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!