news

News April 14, 2025

BSNL அறிவித்த அதிரடி ஆஃபர்!

image

இன்கம்மிங் தேவைக்கு மட்டும் செல்போன் வைத்திருப்பவர்களுக்கு BSNL அதிரடி ஆஃபர் ஒன்றை அறிவித்துள்ளது. ₹397-க்கு ரீசார்ஜ் செய்தால் 30 நாள்களுக்கு அளவில்லாத கால்களும் அதன் பின்னர் 120 நாள்களுக்கு இன்கம்மிங் கால்கள் வந்து கொண்டிருக்கும். குறிப்பாக இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்வோருக்கு 30 நாள்களுக்கு நாளொன்றுக்கு 2 GB இண்டர்நெட் வசதியும் கிடைக்கும். இந்த அறிவிப்பு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

News April 14, 2025

அமெரிக்காவை தவிக்க விட திட்டம் போடும் சீனா!

image

USA-வின் பரஸ்பர வரிக்கு பதிலடி தர சீனா புதிய உத்தியை கையாண்டு வருகிறது. கார்கள் முதல் ஏவுகணைகள் வரை, செமி கண்டக்டர்கள் முதல் விமானங்கள் வரை தயாரிக்க உதவும் அரிய வகை உலோகங்கள், காந்தம் ஆகியவற்றை ஏற்றுமதி செய்வதில்லை என முடிவெடுத்துள்ளது. குறிப்பாக அமெரிக்க ராணுவ ஒப்பந்த நிறுவனங்களுக்கு அனுப்பப் போவதில்லை என முடிவெடுத்துள்ளது. இதனால், இரு நாட்டுக்கும் இடையிலான வர்த்தகப் போர் தீவிரமடைந்துள்ளது.

News April 14, 2025

இது சிஎஸ்கேவின் தமிழ்ப் புத்தாண்டு!

image

தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, சென்னை அணி சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. தல தோனி, அஸ்வின் உள்ளிட்ட வீரர்கள் தமிழரின் பாரம்பரிய வேட்டி, சட்டை அணிந்து புத்தாண்டை கொண்டாடுவது போன்ற ஃபோட்டோவையும் சிஎஸ்கே அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. சவால்களை முறியடித்து அனைவரும் ஒற்றுமையுடன் வாழ புத்தாண்டு வழிவகுக்கட்டும் என X பதிவில் சிஎஸ்கே நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

News April 14, 2025

சமத்துவத்தை நோக்கி சமூகம் நகர வேண்டும்: CM

image

சமத்துவத்தை நோக்கி நமது சமூகம் வேகமாக நகர வேண்டும் என்ற அடிப்படையில் முன்னெடுப்புகளை செய்து வருவதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சமத்துவ நாள் விழாவில் உரையாற்றிய அவர், இந்தியாவில் முதல்முறையாக சட்டக் கல்லூரிக்கு அம்பேத்கர் பெயர் சூட்டியவர் கருணாநிதிதான் எனக் குறிப்பிட்டார். சமூக நீதியை நிலைநாட்டும் அரசாக திராவிட மாடல் அரசு இருப்பதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.

News April 14, 2025

ஆன்மிக பயணத்தில் அண்ணாமலை!

image

ரஜினிகாந்த் பாணியில் ஆன்மிக பயணம் சென்றுள்ள அண்ணாமலையின் புகைப்படம் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. தலைவர் பதவி மாற்றத்திற்கு பிறகு நேற்று டெல்லி சென்ற அவர் அங்கிருந்து உத்தராகண்ட் புறப்பட்டுச் சென்றார். 3 நாள்கள் பயணமாக இமயமலையில் உள்ள பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரியில் வழிபாடு செய்ய உள்ளார். ‘பாபா’ முத்திரையுடன் இருக்கும் போட்டோவை அவரது ஆதரவாளர்கள் டிரெண்டாக்கி வருகின்றனர்.

News April 14, 2025

ராணுவம், போலீஸ் இல்லாத நாடுகள்

image

ஐஸ்லாந்தில் நிலையான ராணுவம் இல்லை. NATO உறுப்பினர் என்பதால், தேவைப்பட்டால் USA பாதுகாப்பு வழங்கும். செலவுகள் அதிகமானதால் 1868-ல் லிச்சென்ஸ்டீன் ராணுவத்தை ஒழித்தது. அடிப்படை பாதுகாப்பிற்காக ஒரு சில காவலர்கள் மட்டுமே உள்ளனர். வாடிகனில் ராணுவம் இல்லை. போப்பாண்டவரை பாதுகாக்க சுவிஸ் காவலர்கள் மட்டுமே உள்ளனர். அன்டோராவில் ராணுவம் இல்லாததால், பாதுகாப்பை ஸ்பெயினும், ஃபிரான்சும் பகிர்ந்து கொள்கின்றன.

News April 14, 2025

₹150+ கோடி.. பட்டையை கிளம்பும் GBU வசூல்!

image

‘விடாமுயற்சி’ படத்தில் சறுக்கிய வசூலை ‘குட் பேட் அக்லி’ படம் மூலம் அறுவடை செய்து வருகிறார் அஜித் குமார். வசூலில் சக்கைப்போடு போட்டு வரும் இந்த படம் 4 நாள்களில் ₹155 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அஜித்தின் ஃபேன் பாயான ஆதிக் இயக்கியுள்ள படத்தின் ஒவ்வொரு காட்சியையும் திரையரங்கில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். GBU படம் உங்களுக்கு பிடிச்சிருக்கா?

News April 14, 2025

மெட்டாவுக்கு செக்? வாட்ஸ்அப், இன்ஸ்டா இருக்குமா?

image

META நிறுவனத்திற்கு எதிராக அமெரிக்க வர்த்தக ஆணையம் (FTC) தொடர்ந்த வழக்கின் விசாரணை இன்று தொடங்குகிறது. அமெரிக்க மாவட்ட நீதிபதி முன் இருதரப்பும் தங்களது அறிக்கைகளை சமர்பிக்க உள்ளனர். META நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார். இணைய சந்தையில் போட்டி நிறுவனங்களே இருக்கக்கூடாது என இன்ஸ்டா, வாட்ஸ்அப்பை வாங்கி மெட்டா Monopoly செய்ததாக FTC வழக்கு தொடர்ந்தது.

News April 14, 2025

சமூகநீதியை நிலைநாட்ட உறுதியேற்போம்: இபிஎஸ்

image

அம்பேத்கர் புகழை போற்றி வணங்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் புகழாரம் சூட்டியுள்ளார். அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி சேலம் தொங்கும் பூங்கா அருகே உள்ள அம்பேத்கர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அம்பேத்கர் வகுத்து தந்த அரசியல் சாசனத்தின்படி சமத்துவம், சகோதரத்துவம், சமூக நீதி கொண்ட சமூகத்தை அமைக்க உறுதியேற்போம் என இபிஎஸ் வலியுறுத்தினார்.

News April 14, 2025

கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறப்பு எப்போது?

image

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. சில தனியார் பள்ளிகளைப் பொறுத்தவரை 6 முதல் 12-ம் வகுப்பு வரை ஜூன் 2-ம் தேதியும், 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு ஜூன் 9-ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் எனக் கூறியுள்ளன. அரசு தரப்பிலிருந்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வராத போதிலும் ஜூன் 4 அல்லது 5-ம் தேதி திறக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!