news

News April 27, 2025

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி, என்எல்சிக்கு ஒரு நீதியா?

image

என்எல்சியால் நிலத்தடி நீர், நீர்நிலைகளில் உள்ள தண்ணீரில் இயல்பைவிட 115 மடங்கு கூடுதலாக பாதரசம் கலந்துள்ளதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் ஏற்படுத்திய தீங்குகளைவிட பல மடங்கு கேடுகளை என்எல்சி ஏற்படுத்தியுள்ளது. என்எல்சியால் கடலூரில் உள்ள 30 லட்சம் மக்களும் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ள அன்புமணி, உடனடியாக என்எல்சியை மூட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

News April 27, 2025

திமுக துணை பொதுச் செயலாளராகும் உதயநிதி?

image

உதயநிதி ஸ்டாலின், திமுகவின் துணை பொதுச் செயலாளராக நியமிக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. திமுக இளைஞரணி செயலாளராக உள்ள உதயநிதிக்கு, அக்கட்சித் தலைமை அடுத்து ஒரு பெரிய பதவியை வழங்க விரும்புவதாகக் கூறப்படுகிறது. பொதுச் செயலாளராக துரைமுருகன் இருப்பதால், அவருக்கு அடுத்த பதவியில் உதயநிதியை நியமிப்பது குறித்த அறிவிப்பை விரைவில் திமுக வெளியிடும் எனச் சொல்லப்படுகிறது.

News April 27, 2025

மருத்துவ கழிவுகள் விவகாரம்.. அரசு முக்கிய முடிவு

image

தமிழகத்தில் மருத்துவ கழிவுகளை கொட்டினால், விசாரணையின்றி நேரடி சிறை தண்டனை வழங்கும் வகையில், சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மசோதாவை அறிமுகம் செய்தார். வரும் 29-ம் தேதி மசோதா விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளது. கேரளாவில் இருந்து சட்டவிரோதமாக மருத்துவ கழிவுகள் கொட்டப்படும் நிலையில், அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

News April 27, 2025

வீட்டில் சாமி கும்பிடும் போது இந்த 3 விஷயங்கள் முக்கியம்

image

வீட்டில் கடவுளை தூய மனதுடன் வழிபட முடியவில்லை, பூஜை செய்ய முடியவில்லை என்றால் அதற்கு கர்ம வினையே தான் காரணம் எனப்படுகிறது. இதிலிருந்து விடுபட இந்த 3 விஷயங்களை பின்பற்ற வேண்டும். இதை ‘ திரிகரண சுத்தி’ என்கிறார்கள். அதாவது வழிபடும் போது, மனதில் நல்ல எண்ணங்களை நிலைநிறுத்தி, கைகளால் பூக்களை தூவி, வாய் முழுக்க கடவுளின் மந்திரங்களை உச்சரித்து கடவுளை பூஜிக்க வேண்டும். SHARE IT.

News April 27, 2025

நடிகை செளந்தர்யா மரணம்… கிடைக்காத சடலம்

image

பொன்னுமணி படம் மூலம் தமிழில் அறிமுகமாகி பிறகு, ரஜினியின் அருணாச்சலம், படையப்பா, விஜயகாந்தின் தவசி, சொக்கத்தங்கம் என பல வெற்றி படங்களில் நடித்தவர் செளந்தர்யா. பெங்களூரு அருகே கடந்த 2004ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17ம் தேதி விமான விபத்தில் பலியானார். அப்போது அவரின் வயது 32 மட்டுமே. ஆனால் 21 ஆண்டுகளாகியும், அவர், அவருடன் பயணித்தோரின் சடலங்கள் கிடைக்கவில்லை. மர்மம் நீடிக்கிறது.

News April 27, 2025

5 ஆண்டுகளுக்கு பின் தொடங்கும் புனித யாத்திரை

image

கைலாஷ் – மானசரோவர் யாத்திரை 5 ஆண்டுகளுக்கு பின் தொடங்க உள்ளது. வரும் ஜூன் – ஆகஸ்ட் வரை 750 பேரை, 15 பிரிவுகளாக அழைத்து செல்ல வெளியுறவு அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது. கடைசியாக கடந்த 2019-ல் இந்த யாத்திரை நடந்தது. கொரோனா மற்றும் 2020-ல் லடாக் எல்லையில் சீன மோதலால் யாத்திரை நிறுத்தப்பட்டது. மானசரோவர் ஏரி சீனாவின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட திபெத்தில் உள்ளது.

News April 27, 2025

நாள் முழுக்க சுறுசுறுப்பாக இருக்க.. காலை எழுந்ததும்

image

காலையில் எழுந்தவுடன் இவற்றை செய்வதால், நீங்கள் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக உணர முடியும் ✦காலை கடனை முடித்து விடுங்கள், உடல் புத்துணர்ச்சியாக இருக்கும் ✦ஒரு கிளாஸ் தண்ணீரை பருகுவது, செரிமான பிரச்னையை சீராக்கும் ✦எழுந்ததும் சோம்பேறி தனமாக அமராமல், உடனே சில வேலைகளை செய்ய தொடங்குங்கள். உடல் உத்வேகம் பெறும் ✦காலை டிபனாக ஊட்டச்சத்து நிறைந்த உணவை எடுத்துக்கொள்ளுங்கள்.

News April 27, 2025

தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரியும்: நிபுணர்கள்

image

தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரியக்கூடும் என்று பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். இந்தியாவில் கடந்த 22-ம் தேதி உச்சம் தொட்ட தங்கம் விலை பிறகு 2 நாள்களாக சரிந்தது. அதன்படி, இன்று 1 கிராம் ரூ.9,005ஆகவும், 1 சவரன் ரூ.72,040ஆகவும் விற்பனையாகிறது. இந்நிலையில் அடுத்த 12 மாதங்களுக்கு தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரியக்கூடும் என்று பொருளாதார நிபுணர்களும், தங்க சுரங்க நிர்வாகிகளும் கூறியுள்ளனர்.

News April 27, 2025

இந்தியா vs பாக்: இந்த பொருட்களின் விலை உயரலாம்!

image

பாக். உடனான வர்த்தகம் முற்றிலும் முடிவுக்கு வந்தால், அங்கிருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் சில பொருள்களின் விலை அதிகரிக்கலாம். உலர் பழங்கள், கல் உப்பு, ஆப்டிகல் லென்ஸ் உள்ளிட்ட பொருட்களின் விலை உயரலாம். அதேபோல், சுண்ணாம்பு, காட்டன், ஸ்டீல், ரசாயனங்கள், லெதர் விலையிலும் மாற்றம் இருக்கும். இருப்பினும், பொருளாதார நெருக்கடியில் இருக்கும் PAK-க்குத்தான் இது அதிக இழப்பை ஏற்படுத்தும்.

News April 27, 2025

பிறந்த குழந்தைக்கும் உடற்பயிற்சி தேவை

image

பிறந்தது முதல் சுறுசுறுப்பாக கைகால்களை உதைத்து, தவழ்ந்து கொண்டு இருக்கும் குழந்தைகள் வளரும்போது இயல்பான எடையுடன் இருக்கின்றன; ஆனால் கொஞ்சம் சோம்பலான குழந்தைகள் வளரும் போது உடல்பருமன் அதிகரிக்கிறது என்கிறார்கள் அமெரிக்க ஆய்வாளர்கள். பெற்றோர்களே கவனம், குழந்தைக்கும் உடற்பயிற்சி தேவை!

error: Content is protected !!