India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கேரள தொழிலதிபர் ஆன்டனியை காதலிப்பதாக கீர்த்தி சுரேஷ் தன் ரசிகர்களுக்கு தெரிவித்திருந்தார். இந்நிலையில், ஆன்டனி கிறிஸ்தவர் என்பதால், கீர்த்தி சுரேஷும் அந்த மதத்துக்கு மாற இருப்பதாகவும், அதன்பின் கோவாவில், டிச. 11 அன்று இருவருக்கும் திருமணம் நடைபெற இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல தான் நடிகை நயன்தாராவும், திருமணத்துக்கு முன் கிறிஸ்தவ மதத்திலிருந்து இந்துவாக மதம் மாறினார்.
நாட்டின் 3ஆவது பரபரப்பான ஏர்போர்ட்டாக பெங்களூரு ஏர்போர்ட் உருவெடுத்துள்ளது. அக்டோபரில் மட்டும் சென்னை, கொச்சியைவிட அதிக பயணிகளை கையாண்டுள்ளது பெங்களூரு இன்டர்நேஷனல் ஏர்போர்ட். அதன்படி அக்டோபரில், 4.8 லட்சம் சர்வதேச பயணிகளை கையாண்டுள்ளதாக கெம்பேகவுடா ஏர்போர்ட் நிர்வாகம் கூறியுள்ளது. இதே காலக்கட்டத்தில் சென்னையில் 4.5 லட்சம், கொச்சியில் 4.1 லட்சம் சர்வதேச பயணிகள் கையாளப்பட்டுள்ளனர்.
இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் பட்டியலை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. அதில், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, காரைக்காலில் இடி, மின்னலுடன் மழை கொட்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரத்தில் இடி, மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கணித்துள்ளது.
ஃபெங்கல் புயல் இன்னும் சற்றுநேரத்தில் உருவாகவுள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களுக்கு மழை அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி முதல் மாவட்டமாக நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ரியல் எஸ்டேட் மற்றும் ஆடம்பர பொருள்களுக்காக இந்திய தொழிலதிபர்கள் அதிகம் செலவிடுவது தெரியவந்துள்ளது. இதுதொடர்பான ஆய்வறிக்கையில், 10இல் 6 பேர், தங்கள் வசமுள்ள நிதியை ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வதாகக் கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கலை பொருள்கள் சேகரிப்பு சார்ந்து அவர்கள் செலவிடும் தொகை மிகவும் குறைவு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீங்க எந்த விஷயத்துக்காக அதிகம் செலவு பண்ணுவீங்க? கமெண்ட் பண்ணுங்க.
ஃபெங்கல் புயல் எச்சரிக்கையால் ‘MISS YOU’ பட ரிலீஸை தள்ளி வைப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிக்கையில், அரசு விடுத்துள்ள புயல் எச்சரிக்கை மற்றும் மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பட ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 7 மைல்ஸ் பெர் செகண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் சித்தார்த் நடித்துள்ளார். முன்னதாக நவ.29ஆம் தேதி படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
வயநாட்டில் வென்றதற்கான சான்றிதழை ராகுலிடம் காட்டி, தங்கை பிரியங்கா காந்தி வாழ்த்து பெற்றார். ராகுல் காந்தி அவருக்கு இனிப்பு ஊட்டி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் சுமார் 4 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றார். இந்நிலையில், புதிய பயணத்தை முன்னெடுத்துச் செல்ல தன்னைத் தேர்ந்தெடுத்ததற்காக வயநாட்டு மக்களுக்கு பிரியங்கா காந்தி நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழர்களின் வீடுகளில் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருளான தேங்காயின் விலை, தற்போது கிலோ ரூ.70 ஆக உயர்ந்துள்ளது. வடமாநிலங்களில் தேங்காய் விளைச்சல் பாதிப்பு, சபரி மலை சீசன் ஆகியவை விலை உயர்வுக்கு முக்கிய காரணங்கள் எனக் கூறப்படுகிறது. இதனால் சென்னை, சேலம், கோவை உள்ளிட்ட இடங்களில் விலை ரூ.40-ல் இருந்து ரூ.70 ஆக அதிகரித்துள்ளது. உங்கள் ஊரில் 1 கிலோ தேங்காய் விலை என்ன? கீழே பதிவிடுங்க.
விவாகரத்து வழக்கில் நடிகர் ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி ஆர்த்தியும் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். இதனையடுத்து, சமரச தீர்வு மையத்தில் இருவரிடமும் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இருவரும் தங்களின் கருத்தை தெரிவித்ததை அடுத்து, விசாரணையை டிசம்பர் 7ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
அயர்லாந்தை 98 ரன்களில் சுருட்டி வங்காளதேச மகளிர் அணி வெற்றி பெற்றுள்ளது. அயர்லாந்து அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. முதல் ODI இன்று நடைபெற்றது. முதலில் விளையாடிய BAN 252/4 ரன்களை எடுத்தது. பின்னர் விளையாட துவங்கிய அயர்லாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து 98 ரன்னில் சுருண்டது. இதன் மூலம்154 ரன் வித்தியாசத்தில் BAN வெற்றி பெற்றது.
Sorry, no posts matched your criteria.