news

News October 23, 2024

ரயில்களில் இவர்களுக்கு 75% கட்டண சலுகை

image

குறிப்பிட்ட ரயில் பயணிகளுக்கு கட்டணத்தில் 75% வரை சலுகை வழங்கப்பட்டு வருகிறது. கண் பார்வை இல்லாதோர், மனநிலை பாதிக்கப்பட்டோர், உடல்நிலை முழுவதும் பாதிக்கப்பட்டாேருக்கு பொதுப் பெட்டி, 3 ஏசி, ஸ்லீப்பரில் 75% கட்டண சலுகை உண்டு. முதல்தர ஏசி, 2ம் தர ஏசி பெட்டிகளில் 50% கட்டண சலுகை உண்டு. கல்வி சுற்றுலா அல்லது சொந்த ஊர் செல்லும் மாணவர்களுக்கு 50%-75% கட்டண சலுகை அளிக்கப்படுகிறது. SHARE IT.

News October 23, 2024

இன்று புதனை வழிபட்டால் தொழில் போட்டி நீங்கும்

image

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பது பழமொழி. புதன்கிழமை வழிபாடு மிகவும் சிறப்பான பலன்களை தரும் என்பது நம்பிக்கை. ஒவ்வொரு வாரமும் புதன் கிழமைகளில் புதன் பகவானுக்கான ஆயில்யம், கேட்டை, ரேவதி நட்சத்திர நாட்களில் வீட்டில் விளக்கேற்றி வழிபட்டு வந்தால் தொழில் போட்டிகள் நீங்கி சிறப்பாக இருக்கும் என்பது ஐதீகம். இதுபோல சிறப்பு வாய்ந்த நாள் புதன் கிழமை. இந்தத் தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.

News October 23, 2024

இந்தியாவின் ஜிடிபி 7%ஆக இருக்கும்: IMF கணிப்பு

image

2025ம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7%ஆக இருக்கக்கூடும் என்று IMF மீண்டும் கணித்துள்ளது. 2025-26ஆம் நிதியாண்டுக்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.5%ஆக இருக்கும் என்றும் IMF தெரிவித்துள்ளது. உலக அளவில் நிலவிய பணவீக்கம் ஏறத்தாழ முடிவுக்கு வந்து விட்டதாக கூறியுள்ள IMF, கடன் மற்றும் புவிசார்ந்த, வணிக ரீதியிலான மோதல்கள் புதிய பிரச்னைகளாக உருவெடுத்துள்ளதாகவும் எச்சரித்துள்ளது.

News October 23, 2024

இன்று இந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

image

11 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக IMD தெரிவித்துள்ளது. அதாவது, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனக் கூறியுள்ளது. நாளை முதல் 28ம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கணித்துள்ளது.

News October 23, 2024

அமெரிக்க அதிபர் தேர்தலும், நவம்பர் முதல் செவ்வாயும்..

image

அமெரிக்க அதிபர் நவ. முதல் செவ்வாயன்றே நடத்தப்படுகிறது. தேர்தலை ஏதேனும் ஒருநாளில் நடத்தாமல், நவ. முதல் செவ்வாய் ஏன் தேர்வு செய்யப்பட்டது எனத் தெரிந்து கொள்வாேம். 1845இல் அமெரிக்க நாடாளுமன்றம் ஏற்படுத்தப்பட்டபோது, அந்நாடு விவசாயத்தை சார்ந்து இருந்தது. இதனால் விவசாய தாெழில் பாதிக்கப்படாதவாறு அதிபர் தேர்தல் நடத்த அந்தநாள் தேர்வு செய்யப்பட்டதாகவும், அது தற்போதும் தாெடர்வதாகவும் கூறப்படுகிறது.

News October 23, 2024

உடல் பருமனால் பிரச்னை.. மும்பை அணியிலிருந்து நீக்கம்

image

உடல் பருமன் காரணமாக, மும்பை அணியிலிருந்து பிருத்வி ஷா நீக்கப்பட்டுள்ளார். இந்திய அணியில் பெரிதாக வருவார் என முன்பு எதிர்பார்க்கப்பட்ட பிருத்வி ஷாவுக்கு, சொதப்பலான ஆட்டம் காரணமாக வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை. இதனால் உள்ளூர் கிரிக்கெட்டில் பங்கேற்று விளையாடி வருகிறார். இந்நிலையில், ரஞ்சியில் பரோடா அணிக்கு எதிராக மோசமாக விளையாடியது, உடல் பருமன் உள்ளிட்ட காரணத்தால் நீக்கப்பட்டுள்ளார்.

News October 23, 2024

சிவசேனாவின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

image

மகாராஷ்ட்ரா சட்டப்பேரவைத் தேர்தலையாெட்டி 45 தொகுதிகளுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை சிவசேனா கட்சி வெளியிட்டுள்ளது. அதில் கோப்ரி பச்பாகடி தொகுதியில் முதல்வர் ஏக்நாத் சிண்டே போட்டியிடுவார் எனக் கூறப்பட்டுள்ளது. மகிம் தொகுதியில் ராஜ் தாக்கரே மகன் அமித் தாக்கரேயை எதிர்த்து சதா சர்வான்கரை சிவசேனா களமிறக்கியுள்ளது. மகாராஷ்ட்ரா சட்டப்பேரவைக்கு நவ.20இல் தேர்தல் நடைபெறவுள்ளது.

News October 23, 2024

ராஜாஜியின் பொன்மொழிகள்

image

* நம்முடைய தேகமும், உள்ளமும் ஆண்டவனுடைய கோயில். அதை சுத்தமாக வைத்திருப்பது நமது கடமை.
* கல்வியும், செல்வமும் எவ்வளவு அதிகம் இருந்தாலும், அடக்கம் இல்லையெனில் பண்பாடென்பது இல்லை.
* தீண்டாமை என்பது நம் சமூகத்தில் இருக்கும் ஒரு மாசு. அதை கட்டாயம் அழித்தாக வேண்டும்.
* வாழ்க்கையில் தைரியமாக இருப்பதை விட, மகிழ்ச்சியளிக்கக் கூடிய விஷயம் வேறு எதுவாக இருக்க முடியும்?. SHARE IT.

News October 23, 2024

அக்.23: வரலாற்றில் இன்று

image

1923: முன்னாள் துணை குடியரசுத் தலைவர் பைரோன்சிங் செகாவத் பிறந்தார்
1940: பிரேசில் முன்னாள் கால்பந்து ஜாம்பவான் பீலே பிறந்தார்
1968: காமெடி நடிகர் வையாபுரி பிறந்தார்
1979: தெலுங்கு நடிகர் பிரபாஸ் பிறந்தார்
1982: நடிகர் ஜித்தன் ரமேஷ் பிறந்தார்
1991: நடிகை சாந்தினி செளத்ரி பிறந்தார்
2023: முன்னாள் கிரிக்கெட் வீரர் பிசன் சிங் பெடி காலமானார்

News October 23, 2024

JOB ALERTS: NICL நிறுவனத்தில் வேலை

image

NICL நிறுவனத்தில் காலியாகவுள்ள 500 உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வேலைக்கு சேர விரும்புவோர் nationalinsurance.nic.co.in இணையதளத்தில் நாளை முதல் விண்ணப்பிக்கலாம். வேலைக்கு விண்ணப்பிக்க வருகிற நவம்பர் மாதம் 11ஆம் தேதி கடைசி நாளாகும். கல்வித் தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட கூடுதல் தகவலை NICL நிறுவன இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம். SHARE IT

error: Content is protected !!