news

News December 3, 2024

தமிழக நிர்வாகிகளுக்கு பிரியங்கா வேண்டுகோள்

image

தமிழகத்தில் ஃபெஞ்சல் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காங்கிரஸ் நிர்வாகிகள் உதவுமாறு வயநாடு எம்.பி பிரியங்கா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். அரசுடன் இணைந்து மீட்பு, நிவாரண பணிகளில் ஈடுபடும்படியும் கேட்டுக்கொண்டார். மேலும், தமிழகத்தில் புயல் ஏற்படுத்திய பேரழிவு வேதனை அளிப்பதாக கூறியுள்ள அவர், உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு இரங்கலும் தெரிவித்துள்ளார்.

News December 3, 2024

விண்வெளியிலும் Traffic Jam?

image

Low Earth Orbit (LEO) செயற்கைக்கோள்களின் நெரிசல் காரணமாக பூமியின் சுற்றுப்பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தற்போது 14,000 செயற்கைக்கோள்கள் பூமியைச் சுற்றும் நிலையில், அவற்றில் 3,500 செயலற்ற நிலையில் உள்ளன. ஏவப்பட்ட செயற்கைக்கோள்கள், அவற்றின் மோதல் காரணமாகவும் 120 மில்லியன் குப்பைகள் சுற்றுப்பாதையில் சுழல்கின்றன. எதிர்காலத்தில் இது விண்வெளி நடவடிக்கைகளுக்கு இடைஞ்சலாகும் அபாயம் உள்ளது.

News December 3, 2024

மின்சார பயன்: 125.44 பில்லியன் யூனிட்டுகளாக அதிகரிப்பு

image

நாடு முழுவதும் மின்சார பயன்பாடு நவம்பர் மாதத்தில் 125.44 பில்லியன் யூனிட்டுகளாக அதிகரித்துள்ளது. இது கடந்தாண்டு இதே மாத நிலவரத்துடன் ஒப்பிடுகையில் 5% அதிகமாகும். ஒருநாளின் அதிகபட்ச மின்சார பயன்பாடும் 204.56 GWஇல் இருந்து 207.42 GWஆக அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. உங்கள் வீட்டில் நீங்கள் எவ்வளவு மின்சார யூனிட் பயன்படுத்துகிறீர்கள். கீழே பதிவிடுங்க.

News December 3, 2024

BREAK UP செய்ததால் கொலை: நடிகையின் சகோதரி கைது

image

BREAK UP செய்ததால் ஆண் நண்பர் உள்ளிட்ட 2 பேரை கொலை செய்ததாக ஹிந்தி நடிகை நர்கீஸ் பக்ரியின் சகோதரி ஆலியாவை நியூயார்க் போலீசார் கைது செய்துள்ளனர். ஆலியாவுடனான உறவை ஆண் நண்பர் ஜேக்கப் பிரேக் ஆப் செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்து கேரேஜில் ஜேக்கப், பெண்தோழி தங்கியிருந்தபோது தீ வைத்துள்ளார். தீ வைக்கும்போது எனது கையால்தான் உனக்கு சாவு என ஆலியா சத்தமிட்டதாகக் கூறப்படுகிறது.

News December 3, 2024

வேகமாக பரவும் ‘BLEEDING EYE’ வைரஸ்

image

The Marburg virus disease (MVD) அல்லது Bleeding eye எனப்படும் இந்த வைரஸ் 17 ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாக பரவி வருவதாக WHO தகவல் வெளியிட்டுள்ளது. இதற்கு ருவாண்டா நாட்டில் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ள சூழலில், 66க்கும் மேற்பட்டோர் பாதிப்பிற்குள்ளாகி உள்ளனர். எபோலா வைரசுடன் தொடர்புடைய இந்த MVD வைரஸ், கண்ணில் இருக்கும் ரத்த நாளங்களை பாதித்து கண் முதல் உடல் துவாரங்கள் வழியே ரத்தக்கசிவை ஏற்படுத்தும்.

News December 3, 2024

தென்பெண்ணையை திடீரென திறந்ததே காரணம்: EPS

image

முன் அறிவிப்பின்றி இரவில் தென்பெண்ணை ஆற்றில் 1.60 லட்சம் கன அடி தண்ணீர் திறந்ததே விழுப்புரம், கடலூர் வெள்ளத்தில் மிதக்க காரணம் என EPS குற்றம்சாட்டியுள்ளார். சேலம் கந்தம்பட்டி பகுதியில் மழை பாதிப்புகளை ஆய்வு செய்த அவர், MET விடுத்த எச்சரிக்கையை திமுக அரசு பொருட்படுத்தாமல் அலட்சியமாக கையாண்டுள்ளது எனவும், தூக்கத்தை தொலைத்து துயரில் இருக்கும் மக்களிடம் அரசு பொய் கூறிவருகிறது என்றும் கூறினார்.

News December 3, 2024

IIT மாணவருக்கு ஆண்டுக்கு ₹4.3 கோடி சம்பளம்

image

மெட்ராஸ் IITயில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்த மாணவர் ஒருவருக்கு ஆண்டு சம்பளமாக ₹4.3 கோடியில் வேலை கிடைத்துள்ளது. ஹாங்காங்கில் உள்ள வர்த்தக நிறுவனமான ஜேன் ஸ்ட்ரீட் இந்த வாய்ப்பை அவருக்கு வழங்கியுள்ளது. சம்பளம் மட்டுமின்றி அவருக்கு போனஸ், Relocation Allowance ஆகியவையும் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தில் தான் மாணவர், Intenship மேற்கொண்டார். மாணவரின் விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

News December 3, 2024

வெள்ள பாதிப்பு: ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் மோடி

image

தமிழக வெள்ளப் பாதிப்பு குறித்து CM ஸ்டாலினிடம் PM மோடி கேட்டறிந்துள்ளார். ஃபெஞ்சல் புயலுக்கு தமிழகத்தில் 12 பேர் பலியான நிலையில், பல ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதைச் சுட்டிக்காட்டி, மோடிக்கு ஸ்டாலின் நேற்று கடிதம் எழுதியிருந்தார். அக்கடிதத்தில் ரூ.2,000 கோடி ஒதுக்கும்படி அவர் கோரியிருந்தார். இந்த சூழ்நிலையில் ஸ்டாலினிடம் தேவையான உதவி செய்யப்படும் என மோடி உறுதியளித்துள்ளார்.

News December 3, 2024

தமிழகத்தின் மெதுவான புயல் ‘ஃபெஞ்சல்’

image

தமிழக புயல் வரலாற்றில் 50 ஆண்டுகளில் இல்லாத வகையில் 500 கி.மீ. தொலைவை ஃபெஞ்சல் புயல் மிக மெதுவாக கடந்துள்ளது. பொதுவாக புயல்கள் 10 முதல் 12 கி.மீ. வேகத்தில் 250 கி.மீ. முதல் 300 கி.மீ. வரை பயணிக்கும். புயல்கள் உருவான 3ஆவது நாளில் வலுவிழக்கும். ஆனால், இந்த புயல் 3 கி.மீ. வேகத்தில்தான் பயணித்தது. இதனால், 500 கி.மீ. தூரத்தை கடக்க 5 நாட்கள் எடுத்துக்கொண்டது. இதுவே அதிக மழை பொழிவுக்கு காரணம்.

News December 3, 2024

காங்கிரஸ் கட்சியினர் களத்தில் இறங்க ராகுல் உத்தரவு

image

தமிழகத்தில் மழையால் பலியானோர் குடும்பங்களுக்கு ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். வீடு மற்றும் உடமைகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு, காங்கிரஸ் கட்சியினர் தங்களால் முடிந்த உதவிகளை செய்யம்படியும் அவர் அறிவுறுத்தியுள்ளார். ஃபெஞ்சல் புயலால் இதுவரை 12 பேர் பலியான நிலையில், 69 லட்சம் குடும்பங்களில் சுமார் 1.5 கோடி பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!