news

News December 3, 2024

திரைப்பட விமர்சனங்களுக்கு தடை விதிக்க மறுப்பு

image

திரைப்படங்கள் வெளியான 3 நாள்களுக்கு சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் வெளியிடத் தடை விதிக்க சென்னை ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. விமர்சனங்களால் திரைப்படம் தோல்வியடைவதாகக் கூறி தயாரிப்பாளர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கு விசாரணையில், கருத்து சுதந்திரம் என்பதால் பொத்தாம் பொதுவாக உத்தரவு பிறக்க முடியாது என்று கோர்ட் கூறியுள்ளது. அவதூறு பரப்பினால் போலீசாரிடம் புகார் அளிக்கலாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

News December 3, 2024

உலுக்கிய ஃபெஞ்சல்: 1500 கி.மீ வரை எதிரொலித்த தாக்கம்

image

வங்காள விரிகுடாவின் தென்மேற்கில் உருவான ஃபெஞ்சல் புயல் கடும் பாதிப்புகளை உண்டாகியுள்ளது. மீட்புப்பணிகள் தொடர்ந்து வரும் நிலையில், இன்று மாலையில் இருந்து புயலின் வீரியம் படிப்படியாக குறையும் என IMD தெரிவித்திருக்கிறது. தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரி மாநிலங்கள் மட்டுமின்றி, புயலின் மையத்தில் இருந்து 1500 கி.மீ தொலைவில் இருக்கும் ஒடிஷா மாநிலத்திலும் பாதிப்புகளை உண்டாக்கி இருக்கிறது.

News December 3, 2024

‘ஜெயிலர் 2’ விரைவில் வர்றார்… வெயிட் பண்ணுங்க

image

‘ஜெயிலர் 2’ படத்தின் ப்ரொமோ ஷூட்டிங் இன்று நடைபெறவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நெல்சன் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. அதன் தொடர்ச்சியாக 2ஆம் பாகத்தை உருவாக்க படக்குழு தயாராகி வருகிறது. இந்நிலையில், ரஜினியின் பிறந்தநாளான டிச. 12ஆம் தேதி இப்படத்தின் சிறப்பு ப்ரொமோவை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

News December 3, 2024

PM – CM தொலைபேசியில் பேசியது என்ன?

image

தமிழக மக்களைத் துன்பத்தில் ஆழ்த்தியுள்ள ஃபெஞ்சல் புயல் பாதிப்புகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என PM மோடியிடம் கேட்டுக்கொண்டதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தொலைபேசி வாயிலாக புயல் பாதிப்பு குறித்து கேட்ட பிரதமரிடம், மத்திய குழுவை உடனடியாக அனுப்பவும், ஏற்கனவே அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றவும் கேட்டுக்கொண்டதாக Xஇல் குறிப்பிட்டுள்ளார்.

News December 3, 2024

EPS, ராமதாஸ் குற்றச்சாட்டுக்கு துரைமுருகன் பதிலடி

image

சாத்தனூர் அணையை முன்னறிவிப்பின்றி திறந்ததே விழுப்புரம், கடலூரில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு காரணமென இபிஎஸ், டாக்டர் ராமதாஸ் ஆகியோர் குற்றஞ்சாட்டியிருந்தனர். இதற்கு பதிலளித்துள்ள துரைமுருகன், அணையை திறக்கும் முன்பு 5 கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் மனசாட்சியை துறந்து அவதூறுகளை பரப்புவதாகவும் அவர் பதிலடி கொடுத்துள்ளார்.

News December 3, 2024

முதலீட்டாளர்களின் எண்ணிக்கை உயர்வு

image

பங்குச்சந்தை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை கடந்த அக்டோபர் மாதத்தில் 13 லட்சம் அதிகரித்துள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. பதிவு செய்யப்பட்ட முதலீட்டாளர்களின் எண்ணிக்கை செப்டம்பரில் 10.37 கோடியாக இருந்த நிலையில், அக்டோபரில் 10.50 கோடியாக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1.80 கோடி பேர், உ.பி.யில் 1.20 கோடி பேர், குஜராத்தில் 94 லட்சம் பேர் முதலீட்டாளர்களாக உள்ளனர்.

News December 3, 2024

6வது வீரராக களமிறங்குகிறாரா ரோஹித்?

image

ரோஹித் ஷர்மா அணிக்கு திரும்பியுள்ள நிலையில், அணியில் Playing XIல் நிச்சயமாக மாற்றம் இருக்கும். நடைபெறும் 2வது டெஸ்ட் போட்டியில் ரோஹித், 6வது வரிசையில் களமிறங்க வேண்டும் என இந்திய அணி முன்னாள் தேர்வாளர் தேவாங் காந்தி தெரிவித்திருக்கிறார். அணி சரியான கலவையில் இருப்பதால், ஏற்கனவே 6வது வரிசையில் இறங்கிய ரோஹித்திற்கு இது கடினமானதாக இருக்காது என்றும் குறிப்பிட்டுள்ளார். இது சரியானதாக இருக்குமா?

News December 3, 2024

மக்களவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

image

மக்களவையில் இருந்து காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளன. அதானி விவகாரம், தமிழக வெள்ள பாதிப்பு குறித்து விவாதம் நடத்த சபாநாயகர் அனுமதி மறுத்ததால் வெளிநடப்பு செய்துள்ளனர். ஃபெஞ்சல் புயல் நிவாரணம் தொடர்பாக அவையை ஒத்திவைத்து விவாதிக்கக் கோரி மக்களவை செயலாளருக்கு திமுக எம்.பி கனிமொழி, TR பாலு உள்ளிட்டோர் நோட்டீஸ் அளித்திருந்தனர். எனினும், இதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

News December 3, 2024

ரேஷனில் அரிசிக்கு பதில் பணம்? மத்திய அரசு யோசனை?

image

ரேஷனில் தற்போது இலவசமாக அரிசி, மானிய விலையில் சர்க்கரை, எண்ணெய், பருப்பு, கோதுமை வழங்கப்படுகின்றன. ஆனால், இலவசமாக அளிக்கப்படும் பொருளை சிலர் சட்டவிரோதமாக விற்பது மத்திய அரசால் கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் அரிசிக்கு பதில் பணம் அளிக்க மத்திய அரசு ஆலோசிப்பதாக கூறப்படுகிறது. ஆனால், தமிழகத்தில், மாநில அரசு தான் இதை முடிவு செய்யும் என்பதால், அதன் அடிப்படையிலேயே இது அமலாவது முடிவாகும்.

News December 3, 2024

வட தமிழகத்தை குறிவைக்கும் புயல்கள்!

image

தென் தமிழகத்தை விட, வட தமிழகத்தை அதிக புயல்கள் தாக்குவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 1819-2013 காலக்கட்டத்தில் உருவான 29 தீவிர புயல்களில், 23 புயல்கள் வட கடலோரப் பகுதிகளில் கரையைக் கடந்துள்ளன. பூமத்திய ரேகைக்கு அருகில் புயல் உருவாவது குறைவது. புயல் துருவமுனையை நோக்கி நகரும் என்பதால், இந்தியாவுக்கு அருகில் உருவாகும் புயல் வடக்கு நோக்கி நகர்வதால், தென் தமிழகம் பாதிக்கப்படுவதில்லை என்கின்றனர்.

error: Content is protected !!