India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமக்கல்லில் முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.5.90ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 54 ஆண்டுகால கோழிப்பண்ணை வரலாற்றில் முட்டை விலை ரூ.5.90ஆக உயர்ந்தது இதுவே முதல்முறை. முட்டை நுகர்வு, விற்பனை அதிகரித்துள்ளதால், கடந்த 4 நாட்களில் 25 காசுகள் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு அனைத்து மாவட்டங்களிலும் நாளை முதல் அமலுக்கு வரும்.
புயல் பாதிப்பு தொடர்பாக திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார் விஜய். ஆட்சியாளர்களை குறைகூறும் அரசியலை செய்ய தாங்கள் வரவில்லை என்றும், மக்களுக்காக குரல் கொடுக்கும் அரசியலை செய்யவே வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். எது நடந்தாலும் காவி சாயம் பூசி ஆட்சியாளர்கள் தப்ப நினைப்பதாக விமர்சித்த விஜய், மக்கள் மறந்துவிடுவர் என்ற மமதையில் இருந்தோர் மக்கள் மன்றத்தில் நிலைத்ததில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
உணவுக்காக மக்கள் வீதிக்கு வந்து போராடும் சூழல் ஏற்பட்டுள்ளதற்கு தமிழக அரசே காரணம் என டிடிவி தினகரன் குற்றஞ்சாட்டியுள்ளார். ஃபெஞ்சல் புயல் கரையை கடந்து 3 நாள்கள் ஆன பிறகும், 4 மாவட்ட மக்கள் தவிப்பதற்கு தமிழக அரசே காரணம் எனவும் விமர்சித்துள்ளார். முன்னறிவிப்பின்றி, சாத்தனூர் அணையிலிருந்து நீரை திறந்துவிட்டதே, இவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்பட காரணம் எனவும் குறை கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் வங்கிகள் சட்டத்திருத்த மசோதா மீதான விவாதத்தில் நிர்மலா சீதாராமன் இன்று பேசினார். அப்போது, தமிழ்நாட்டில் இந்தி கற்பதே குற்றம் எனக் கருதும் சூழல் நிலவுவதாக அவர் குற்றஞ்சாட்டினார். மேலும், அப்படிப்பட்ட சூழல் காரணமாகவே தன்னால் இப்போது வரை சரியாக இந்தி பேச முடியவில்லை என்றும் அவர் வேதனை தெரிவித்தார். அவரது பேச்சுக்கு திமுக உள்ளிட்ட
தமிழக MPக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
வெள்ள பாதிப்பு குறித்து ஆளும் திமுகவை விஜய் காட்டமாக விமர்சித்துள்ளார். அவரது அறிக்கையில், மக்களை காக்க முறையான திட்டங்களை அரசு தீட்டவில்லை. முன்னெச்சரிக்கை இல்லாமல், மக்களை கையறு நிலையில் பரிதவிக்கவிடும் சுயநல ஆட்சியாளர்களை என்னவென்று சொல்ல? மக்களை ஏமாற்றி ஆட்சியமைக்க நினைப்பவர்கள் நீடிப்பதில்லை. தற்காலிக நடவடிக்கையில் மட்டுமே ஆட்சியாளர்கள் கவனம் செலுத்துகிறார்கள் எனக் கூறினார்.
விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசியவர்கள் பாஜகவை சேர்ந்தவர்கள் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். பாஜக மகளிரணியில் உள்ள விஜயராணியும், அவரது உறவினர் ராமர் என்கிற ராமகிருஷ்ணனும் சேர்ந்து, உள்நோக்கத்துடன் இதை செய்துள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாததால், பின்வாசல் வழியாக திமுகவை களங்கப்படுத்த பாஜக முயல்வதாகவும் சாடியுள்ளார்.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் Brian Bennett 21, Marumani 16 ரன்கள் எடுத்த நிலையில் மற்ற வீரர்கள் அடுத்தடுத்து நடையை (20 ரன்களுக்கு 8 விக்கெட்) கட்டினர். இதனால் அந்த அணி 57 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்பின் களமிறங்கிய PAK 5.3 ஓவரிலேயே 61 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
ப்ரோபா-3 செயற்கைகோளுடன் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை மாலை 4.08 மணிக்கு PSLV C59 ராக்கெட் ஏவப்படுகிறது. பூமியில் இருந்து 60,500 கி.மீ தொலைவில் நிலை நிறுத்தப்படும் இந்த செயற்கைகோள்கள், சூரியனின் புறவெளிக் கதிர்களை ஆய்வு செய்து, உடனுக்குடன் அந்த தரவுகளை அனுப்பும். ராக்கெட்டை ஏவும் இறுதிக்கட்ட பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
US துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜே.டி.வான்ஸ் தனது மனைவி, குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. அமெரிக்க கிறிஸ்தவரான வான்ஸின் மனைவி, இந்திய வம்சாவளி ஹிந்து குடும்பத்தை சேர்ந்தவர். காதலில் இணைந்த பந்தம் இருவரின் குடும்பத்தினரையும் இணைத்துள்ளது. வான்ஸ் தோளில் குழந்தையை தூக்கி வைத்திருப்பதும் Typical இந்திய தந்தைகளின் பழக்கம் என நெட்டிசன்கள் கமென்ட் செய்கின்றனர்.
2025 ஏப்ரல் முதல் டாஸ்மாக் கடைகளில் காலி மதுபான பாட்டில்கள் திரும்ப பெறும் திட்டம், மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்படுவதாக ஐகோர்ட்டில் TN அரசு தெரிவித்துள்ளது. காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தால், ₹45 கோடி வருவாய் கிடைப்பதாகவும் அரசு கூறியது. இதை கேட்ட நீதிபதி, இத்திட்டத்தால் பணியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பணிச்சுமை குறித்து ஆய்வு செய்ய உத்தரவிட்டு, வழக்கை பிப்.4க்கு ஒத்திவைத்தார்.
Sorry, no posts matched your criteria.