news

News December 3, 2024

‘சேறு வீச்சு’ திமுகவுக்கு மக்கள் அளித்த சான்றிதழ்: வானதி

image

மூன்றரை ஆண்டுகால திமுக ஆட்சிக்கு தமிழ்நாட்டு மக்கள் அளித்த சான்றிதழ் தான் அமைச்சர் பொன்முடி மீதான சேறு வீச்சு என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். காருக்குள்ளே அமர்ந்து கொண்டு பேசும் மகாராஜா மனப்பான்மையில் இருந்து திமுக அமைச்சர்கள் வெளியே வரவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். அமைச்சர்கள் நலத்திட்டம் வழங்குவதை போல் போட்டோ எடுத்துக் கொள்வதிலேயே அக்கறை காட்டுவதாகவும் சாடியுள்ளார்.

News December 3, 2024

இளையராஜாவின் இசையில் உருவாகும் ‘திருக்குறள்’

image

இசைஞானி இளையராஜாவின் இசை மற்றும் பாடல் வரிகளில் ‘திருக்குறள்’ என்ற தலைப்பில் புதிய படம் உருவாகி வருகிறது. பெருந்தலைவர் காமராஜர் வாழ்க்கை வரலாறு படத்தை இயக்கிய ஏ.ஜெ.பாலகிருஷ்ணன் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தில் வள்ளுவராக கலைச்சோழன், வாசுகியாக தனலட்சுமி, பாண்டிய மன்னனாக ஓ.ஏ.கே.சுந்தர், நக்கீரராக இயக்குநர் சுப்ரமணிய சிவா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

News December 3, 2024

பாலியல் உறவு: ஆண்களை மிஞ்சும் பெண்கள்…

image

வாழ்நாளில் சராசரியாக அதிக துணைவர்கள் (பாலியல் உறவில்) கொண்டுள்ளதில், தமிழகத்தில் ஆண்களை(1.8 பேர்) விட பெண்கள்(2.4 பேர்) முன்னிலையில் உள்ளதாக மத்திய அரசின் NFHS ஆய்வு (2019-21) கூறுகிறது. இந்திய அளவில் ஆண்கள் சராசரியாக -1.5, பெண்கள் -1.8 பாலியல் துணைவர்களை கொண்டுள்ளனர். மேலும், நகர்ப்புறங்களை விட, கிராமப்புறங்களில் தான், ஒன்றுக்கு மேற்பட்டவர்களுடன் உறவு கொள்வது அதிகமாக உள்ளதாம். உங்கள் கருத்து?

News December 3, 2024

பொருளாதாரப் பேரழிவிலிருந்து காக்க வேண்டும்: அன்புமணி

image

தமிழ்நாட்டை பொருளாதாரப் பேரழிவிலிருந்து மீட்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 2024-25ம் நிதியாண்டின் முதல் பாதியில் தமிழக அரசு ரூ.50 ஆயிரம் கோடி கடன் வாங்கியுள்ளதாக RBI கூறியுள்ளது அதிர்ச்சி அளிப்பதாகவும், இதில் ரூ.15,375 கோடி முன்பு வாங்கிய கடனை அடைக்க செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறை கூறியுள்ளார். TN நிதி நிலைமை கவலைக்குரியதாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

News December 3, 2024

கிரிக்கெட்டுக்கு Good Bye; வங்கிப் பணிக்கு YES

image

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறும் வீரர்கள் எல்லாருக்கும் பெரிய ஐபிஎல் வாய்ப்புகள் கிடைப்பதில்லை. ஆகவே, எப்போதும் பாதுகாப்புக்கு ஒரு வேலையை வைத்திருப்பார்கள். அப்படித்தான், அண்மையில் ஓய்வை அறிவித்த சித்தார்த் கவுல், எஸ்பிஐ பணிக்கு திரும்பியுள்ளதை தன் X பக்கத்தில் ‘office time’ என்று பதிவிட்டு தெரிவித்துள்ளார். கோலியுடன் இணைந்து U-19 உலகக் கோப்பையை வென்றவர் சித்தார்த் என்பது குறிப்பிடத்தக்கது.

News December 3, 2024

10, 11, 12th EXAM: தனித் தேர்வர்கள்

image

மார்ச், ஏப்ரலில் நடைபெறவுள்ள 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித் தேர்வர்கள் டிச. 6 முதல் 17ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். காலை 11 முதல் மாலை 5 மணி வரை மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசு தேர்வுகள் இயக்கக சேவை மையங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பத்தினை பதிவு செய்ய வேண்டும். இதுதொடர்பான முழு விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்துக் கொள்ளலாம்.

News December 3, 2024

பா.ரஞ்சித் படங்களில் சந்தோஷ் நாராயணன் இசை?

image

இனி பா.ரஞ்சித் படங்களுக்கு தான் மட்டுமே இசையமைப்பேன் என சந்தோஷ் நாராயணன் கூறியுள்ளார். மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகியுள்ள ‘சூது கவ்வும் 2’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய அவர், ரஞ்சித் படத்தில் யாரையும் இசையமைக்க உள்ளே விடமாட்டேன், இது என்னுடைய கட்டளை என நகைச்சுவையாக தெரிவித்தார். இருவருக்கும் இடையே சில வருடங்களாக மனக்கசப்பு இருந்த நிலையில், அது தற்போது சரியாகியுள்ளது.

News December 3, 2024

BREAKING: தென்கொரியாவில் எமெர்ஜென்சி அமல்!

image

தென்கொரிய அதிபர் யூன் சுக் யோல் அதிரடியாக ராணுவ ஆட்சி பிரகடனத்தை அறிவித்துள்ளார். அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வகிக்கும் இடதுசாரி கட்சியிடமிருந்து
தென்கொரியாவின் சுதந்திரத்தை பாதுகாக்க இந்த முடிவு என அதிபர் இன்று (டிச. 3) அறிவித்துள்ளார். எத்தகைய விதிகள் அமல்படுத்தப்படும் என்பது குறித்து அவர் தெரிவிக்கவில்லை.

News December 3, 2024

ஆதார் இலவச சலுகை.. இன்னும் சில நாள்களே அவகாசம்

image

ஆதாரில் பெயர், முகவரி, பிறந்த தேதி உள்ளிட்ட தகவலை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை அப்டேட் செய்ய வலியுறுத்தப்பட்டு வருகிறது. இவற்றை இலவசமாக திருத்தும் சலுகையை அறிவித்த UIDAI, அந்த சலுகையை வரும் 14ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. இந்த அவகாசம் முடிய இன்னும் 11 நாள்களே உள்ளன. இச்சலுகையை பயன்படுத்தி இலவசமாக தகவலை அப்பேட் செய்யும்படியும், அதன்பிறகு ரூ.50 செலுத்த வேண்டியிருக்கும் என்றும் UIDAI அறிவுறுத்தியுள்ளது.

News December 3, 2024

யாரை கண்டும் பயம் இல்லை: அலெக்ஸ் கேரி

image

பும்ராவை சமாளிக்கும் திறமை ஆஸி. வீரர்களுக்கு இருப்பதாக, அந்த அணியின் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி நம்பிக்கை தெரிவித்துள்ளார். IND வீரர்கள் சிறப்பாக பந்து வீசி வருவதாக குறிப்பிட்ட அவர், உலகத்தரம் மிக்க பேட்ஸ்மேன்கள் தங்களிடம் உள்ளதால், அவர்களை எளிதாக சமாளிப்போம் என்றார். அடிலெய்ட் மைதானத்தில் AUS எப்போதும் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், இம்முறை வெற்றியை தவற விடமாட்டோம் எனவும் கூறியுள்ளார்.

error: Content is protected !!