news

News October 24, 2024

விஜய் ஏற்றும் கொடி 5 ஆண்டுகள் பறக்க ஒப்பந்தம்

image

தவெக மாநாட்டில் விஜய் ஏற்றும் கொடி மாநாட்டு திடலில் 5 ஆண்டுகள் பறக்கும் வகையில் இடத்தின் உரிமையாளரிடம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அக். 27இல் நடைபெறும் தவெக மாநாட்டு பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளன. மாநாட்டு முதல் நிகழ்ச்சியாக விஜய், மாலை 4 மணி அளவில் 100 அடி நீளமுள்ள கட்சி கொடியை ஏற்றி மாநாட்டு நிகழ்ச்சியைத் தொடங்கி வைக்கவுள்ளார். இந்த கொடி அடுத்த 5 ஆண்டுகள் தொடர்ந்து பறக்க இருக்கிறது.

News October 24, 2024

இவன் பெயர் மகவா.. அசகாய சூரன்..!

image

பாதாளத்தில் வசித்து கொண்டு, ஆட்கள் இல்லாத நேரத்தில் உணவை திருடும் எலி அல்ல இது. இந்த எலியின் பெயர் மகவா. கண்ணி வெடிகளை கண்டுபிடிப்பதற்கு பயிற்சி பெற்றது. பெல்ஜிய தொண்டு நிறுவனம் APOPO மகவாக்கு பயிற்சி அளித்தது. இதன் 5 ஆண்டுகால சர்வீஸில், 100க்கும் மேற்பட்ட கண்ணி வெடிகளைக் கண்டுபிடித்துள்ளது. இதன் தைரியத்தை கவுரவப்படுத்த தங்கப் பதக்கமும் வழங்கப்பட்டது. கடந்த 2022ல் மகவா உயிரிழந்தது.

News October 24, 2024

வாக்காளர் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்

image

ஜன.6இல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என ECI அறிவித்துள்ளது. வரும் நவ.16, 17, 23, 24 ஆகிய தேதிகளில் வாக்காளர் அட்டைகளில் திருத்தம் தொடர்பான முகாம்கள் நடைபெறும். இந்த முகாம்களில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படும். அதேபோல், புதிய வாக்காளர்கள் தங்களின் பெயரை சேர்த்துக் கொள்ளலாம். மேலும், வாக்காளர் முகாம் தொடர்பாக பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

News October 24, 2024

2026இல் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி: தமிழிசை

image

2026 தேர்தலில் திமுக மீண்டும் வெற்றிபெறாது என தமிழிசை ஆருடம் தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில் உள்ள சிபிஎம் மற்றும் விசிக உள்ளிட்ட கட்சிகள் தற்போதே அதிருப்தியில் உள்ளதாகவும், தேர்தல் நேரத்தில் மோதல் முற்றி கூட்டணி உடையும் எனவும் கூறியுள்ளார். 2026இல் தமிழகத்தில் நிச்சயம் கூட்டணி ஆட்சிதான் அமையும் எனவும், அதில் பாஜக முக்கிய இடத்தை பெற்றிருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

News October 24, 2024

தோனி விளையாடுவாரா மாட்டாரா?

image

IPL அணிகள் ரீடெய்ன் செய்யும் வீரர்களின் பட்டியலை, வரும் 31ஆம் தேதிக்குள் வெளியிட BCCI உத்தரவிட்டுள்ளது. ஆனால், 28ஆம் தேதி வரை தன்னை சந்திக்க முடியாது என CSK நிர்வாகத்திடம் தோனி கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால், வரும் 29 (அ) 30ஆம் தேதிகளில் தோனியை சந்தித்து பேச CSK நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பிற்கு பிறகே அவர் விளையாடுவாரா மாட்டாரா என்பது தெரியவரும்.

News October 24, 2024

தமிழ்நாட்டின் Top 10 மாவட்டங்கள்.. முதலிடம் எது?

image

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டியில் சென்னை அணி சாம்பியன் பட்டம் வென்றது. 105 தங்கம், 80 வெள்ளி, 69 வெண்கலம் என மொத்தம் 254 பதக்கங்களுடன் சென்னை மாவட்டம் சாம்பியனானது. 2வது இடத்தில் செங்கல்பட்டு, கோவை 3, சேலம் 4, ஈரோடு 5வது இடத்தை பிடித்துள்ளன. திண்டுக்கல், நெல்லை, திருவள்ளூர், மதுரை, குமரி மாவட்டங்கள் முதல் 10 இடங்களை பெற்றுள்ளன. இதில் உங்கள் மாவட்டம் எந்த இடத்தில் உள்ளது?

News October 24, 2024

நாளை கடைசி: 2,236 பணியிடங்கள்

image

ONGCல் அப்ரண்டிஸ் நிலையிலான 2,236 பதவிகளுக்கு விண்ணப்பிக்க நாளை (அக்.25) கடைசி நாளாகும். அக்கவுண்ட் எக்ஸிகியூட்டிவ்ஸ், கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் உள்ளிட்ட பதவிகள் காலியாக இருப்பதாகவும், 10, 12, ஐடிஐ, பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள 18-24 வயதுடையோர் <>www.ongcapprentices.ong.co.in<<>> என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

News October 24, 2024

‘மாரீசன்’ 2ஆம் கட்ட படப்பிடிப்பு தொடக்கம்

image

ஃபகத் ஃபாசில், வடிவேலு நடிக்கும் ‘மாரீசன்’ படத்தின் 2ஆம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் இன்று தொடங்கியது. கிருஷ்ண மூர்த்தி இந்த படத்தை இயக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ‘Road Comedy’ ஜானரில் திரைக்கதை எழுதப்பட்டுள்ளதாகவும், லைவ் லொகேஷனில் படப்பிடிப்பு நடத்தப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

News October 24, 2024

இந்திய அணிக்கு தொடக்கமே தடுமாற்றம்

image

புனேவில் நடைபெறும் நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் முதல் நாள் முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 16 ரன்கள் எடுத்துள்ளது. முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் சௌதி பந்தில் 2 ரன்னுக்கு போல்டான கேப்டன் ரோஹித், இந்த முறையும் சௌதி பந்தில் ரன்கள் ஏதும் எடுக்காமல் போல்டானார். ஜெய்ஷ்வால் 6*, கில் 10* ரன்களுடன் களத்தில் உள்ளனர். முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து 259 ரன்கள் எடுத்துள்ளது.

News October 24, 2024

பெங்களூரு விபத்து: மத்திய அரசு நிவாரணம் அறிவிப்பு

image

பெங்களூரு கட்டட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. பலத்த காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் நிவாரணமாக வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த விபத்தில் தமிழகத்தை சேர்ந்த இருவர் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். 13 பேர் காயமடைந்த நிலையில், விபத்து தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!