India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மார்பக புற்றுநோய் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த, யுவராஜ் சிங்கின் #YouWeCan Foundation வைத்த விளம்பர போஸ்டர், மக்களின் எதிர்ப்பால் நீக்கப்பட்டது. டெல்லி மெட்ரோ ரயில்களின் பெண்கள் பெட்டிகளில் வைக்கப்பட்ட அந்த advt போஸ்டரில், ஒரு பெண் கையில் ஆரஞ்சு பழங்களை வைத்திருக்கும் படமும், அதன் கீழே ‘ஒவ்வொரு மாதமும் உங்க ஆரஞ்சுகளை செக் பண்ணுங்க’ என்ற வாசகமும் இடம் பெற்றிருந்தது. நீங்க என்ன நினைக்கிறீங்க?
திருச்செந்தூர் கந்தசஷ்டி விழாவில் கூடுதல் கட்டண விவகாரத்தில், பணக்காரர்களுக்கு மட்டும்தான் கோவிலா என ஐகோர்ட் மதுரை கிளை காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளது. சாமி தரிசனத்திற்கு 1000, 2000 என வாங்கினால் ஏழைகள் எப்படி சாமி தரிசனம் செய்வார்கள் எனவும், ஏழைகள் சாமி கும்பிட கூடாதா எனவும் நீதிபதிகள் வினவியுள்ளனர். மேலும், அறநிலையத்துறை ஆணையர் பதில் மனுத்தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளனர்.
நாடு முழுவதும் இந்திய ராணுவ பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள். பி.எட் முடித்துவிட்டு 2 ஆண்டுகள் ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.awesindia.com/ என்ற இணையதள முகவரியை அணுகவும். வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் அறிய WAY2NEWS APPஐ ஃபாலோ பண்ணுங்க.
அமைச்சர் துரைமுருகனுக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, வேலூரில் உள்ள தனியார் ஹாஸ்பிடலில் அட்மிட் செய்யப்பட்டுள்ள அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். அவருக்கு என்ன பிரச்சனை என்பதும், அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் உடனடியாக எந்த தகவலும் வெளியாகவில்லை. வயது மூப்பு காரணமாக, கடந்த சில மாதங்களாகவே அவருக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லை எனக் கூறப்படுகிறது.
கனடா PM ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா செய்ய வேண்டும் என அவரது சொந்த கட்சி MPக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். காலிஸ்தான் ஆதரவாளர் நிஜ்ஜார் கொலைக்கு இந்தியா தான் காரணம் என ட்ரூடோ குற்றஞ்சாட்டியிருந்தார். இதனால் அதிருப்தியடைந்த MPக்கள், அவருக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர். மேலும், 28ஆம் தேதிக்குள் அவர் பதவி விலகாவிட்டால் அடுத்தக்கட்ட நடவடிக்கை இருக்கும் என பகிரங்கமாக எச்சரித்துள்ளனர்.
USA அதிபர் தேர்தலில் டிரம்ப் வென்றால், ஆபாச படத் துறையையே இழுத்து மூடிவிடுவார். எனவே அவருக்கு எதிராக இளைஞர்கள் வாக்களிக்க Porn நடிகைகள் கோரிக்கை விடுத்துள்ளனர். டிரம்பிற்கு எதிராக பிரச்சாரம் செய்ய இதுவரை $2 லட்சம் செலவில் விளம்பரம் செய்துள்ளதும் தெரியவந்துள்ளது. டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டால் ஆபாச படங்களில் நடிப்பவர்கள் சிறையில் தள்ளப்படுவர் என குடியரசுக் கட்சி சமீபத்தில் அறிவித்து இருந்தது.
சுக்கிர பகவான் அனுஷ நட்சத்திரத்திற்கு அக்.16-இல் இடம்பெயர்ந்தார். இந்த பயணம் 3 ராசிக்காரர்களுக்கு செல்வத்தை வாரி வழங்க போகிறது. 1) சிம்மம்: திடீர் இடமாற்றத்தால் பண வரவு அதிகரிக்கும். புதிய முதலீடுகள் லாபத்தை தரும். 2) கன்னி: தொட்டதெல்லாம் வெற்றியாகும். வியாபாரம் செழிக்கும். 3) தனுசு: நீண்டகாலமாக வராமல் இருந்த பணம், வட்டியோடு வரும். எந்த காரியத்தை செய்தாலும் லாபம் வரும். பேச்சில் கவனம்.
தீபாவளி, சாத்பூஜை உள்ளிட்ட பண்டிகைகளை முன்னிட்டு, நாடு முழுவதும் 7,000 சிறப்பு ரயில்கள் விடப்படுவதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இதன்மூலம் நாள்தோறும் கூடுதலாக, 2 லட்சம் பேர் பயணிக்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார். பணி நிமித்தமாக வெளியூர்களில் தங்கியுள்ளவர்கள், தங்களது சொந்த ஊர்களுக்கு சிரமமின்றி செல்ல வசதியாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆப் டெவலப்பராக உள்ள டெல்லி இளைஞர், ரிலையன்ஸின் ஜியோவும், Disney+ Hotstar-ம் இணையும் என கணித்து, கடந்த ஆண்டே JioHotstar.com என்ற இணைய பக்கத்தை வாங்கிவிட்டார். தற்போது இணைப்பு உறுதியான நிலையில், “உங்களுக்கு தேவைப்படும் JioHotstar.com டொமைனை கொடுக்க நான் தயார். பதிலுக்கு கேம்ப்ரிட்ஜில் படிக்க எனக்கு தேவையான ரூ.1 கோடியை தருவீர்களா..’ என கடிதம் எழுதி டீல் பேசியுள்ளார். ஆனால், ரிலையன்ஸ் இதை ஏற்கவில்லை.
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் முதல் இன்னிங்சில் டக் அவுட்டான கேப்டன் ரோஹித் ஷர்மா ஒரு மோசமான சாதனை படைத்துள்ளார். சர்வதேச போட்டிகளில் அதிக முறை டக் அவுட்டான இந்திய கேப்டன்களில் தோனியுடன் 3வது இடத்தை பகிர்ந்துகொண்டார். இருவரும் 11 முறை டக் அவுட்டாகியுள்ளனர். விராட் கோலி அதிகபட்சமாக 16 முறையும், கங்குலி 13 முறையும் டக் அவுட்டாகியுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.