news

News December 4, 2024

மன்சூர் அலிகான் மகனுக்கு 15 நாள் நீதிமன்றக்காவல்

image

மன்சூர் அலிகான் மகன் அலிகான் துக்ளக் உள்ளிட்ட 7 பேரை 15 நாள் நீதிமன்றக் காவலில் அடைக்க அம்பத்தூர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கஞ்சா, மெத்தபெட்டமைன் போதைப் பொருள்களை கடத்தி வந்து சென்னையில் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்ததாக சமீபத்தில் 10 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களின் செல்போனை ஆய்வு செய்ததில், துக்ளக் உள்ளிட்ட 4 பேர் தொடர்பில் இருந்தது தெரியவந்ததால், அவரை போலீசார் இன்று கைது செய்தனர்.

News December 4, 2024

தக்காளி காய்ச்சல் அறிகுறியும், தடுக்கும் வழிமுறையும்

image

காய்ச்சல், தொண்டை எரிச்சல், தொண்டை, வாய், நாக்கில் புண் மற்றும் தலை, கை, கால், முதுகுக்கு கீழ் மற்றும் பாதங்களில் கொப்பளங்கள் தோன்றுதல், பசியின்மை போன்றவை தக்காளி காய்ச்சலின் அறிகுறிகள். சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருப்பதன் மூலம் இந்த நோயை தடுக்கலாம். குறிப்பாக, குழந்தைகளின் டயப்பர்களை மாற்றியவுடன் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். குழந்தைகள் விளையாடும் பொம்மைகளை சுத்தமாக வைத்துக் கொள்ளவும்.

News December 4, 2024

PAN 2.0. விண்ணப்பிக்கும் முறை தெரியுமா?

image

புதிய PAN 2.0. அட்டைக்கு எப்படி விண்ணப்பிப்பது என தற்போது தெரிந்து கொள்வோம். <>https://www.pan.utiitsl.com/<<>> சென்று, PANCARD FOR INDIANS என்ற பகுதியை கிளிக் செய்ய வேண்டும். அப்போது புதிதாக திறக்கும்பக்கத்தில் உள்ள APPLY FOR NEW PANCARD (49A) என்பதை அழுத்தி கிளிக் செய்தால் வரும் பக்கத்தில் கேட்கப்படும் விவரங்களை பூர்த்தி செய்து, ரூ.107 செலுத்தினால் வீட்டுக்கே புதிய PANCARD தபாலில் அனுப்பப்படும். SHARE IT.

News December 4, 2024

புயல் பாதிப்பில் இருந்து மீண்டு வருவோம்

image

ஃபெஞ்சல் புயலால் தமிழகத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வானிலை கணிப்பை தாண்டி அதிகளவு மழை கொட்டித்தீர்த்தது. இருப்பினும் அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் உயிரிழப்பு குறைந்துள்ளது என்றார். புயல் பாதிப்புகளில் இருந்து விரைவில் மீண்டும் வருவோம் என நம்பிக்கை தெரிவித்த அவர், அவதூறு பரப்பி ஆதாயம் தேடலாம் என சிலர் மலிவான அரசியலில் செய்வதாக விமர்சித்தார்.

News December 4, 2024

அழிக்க முடியாத வடுவான “36”

image

2020இல் அடிலெய்டில் நடந்த பகலிரவு டெஸ்டில் கோலி தலைமையிலான அப்போதைய இந்திய அணி 2ஆவது இன்னிங்சில் 36 ரன்களில் சுருண்டது. இதனால் அப்போட்டியில் ஆஸி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது. இதுவரை விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் இந்தியா எடுத்த மிகக்குறைந்த ஸ்கோர் இந்த 36 ரன்கள்தான். ஆஸிக்கு எதிராக பல வெற்றியை பதிவு செய்தபோதும் இந்த வடு மட்டும் அழிக்க முடியாததாகவே உள்ளது.

News December 4, 2024

முதல் மாவட்டமாக விடுமுறை அறிவிப்பு

image

விழுப்புரம் மாவட்டத்திற்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும் வெள்ளத்தால், வீடு, உடைமைகளை இழந்து மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மழை பாதிப்புகளை சீர்செய்யும் பணி நடப்பதாலும், மாணவர்களின் பாதுகாப்பு கருதியும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மற்ற மாவட்டங்களுக்கு லீவ் அளிக்கப்பட வாய்ப்புள்ளது.

News December 4, 2024

இப்போதும் சச்சின் தான் நம்.1

image

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓராண்டில் அதிக ரன் குவித்த இந்திய வீரர்களில் சச்சின் முதல் இடத்தில் நீடிக்கிறார். முழுப் பட்டியல்: *சச்சின் 1,562 ரன் -2010 *வீரேந்திர சேவாக் -1,462 (2008) * சேவாக் -1,422 (2010) *கவாஸ்கர் -1,407 (1979) *சச்சின் -1392 (2002) *குண்டப்பா விஸ்வநாத் -1388 (1979) *ராகுல் டிராவிட் -1357 (2002) *விராட் கோலி – 1322 (2018) *சுனில் கவாஸ்கர் -1310 (1983) *ஜெய்ஸ்வால் -1280 (2024).

News December 4, 2024

இரட்டை வேடம் போடுவதில் திமுக கில்லி: ஓபிஎஸ்

image

புயல் நிவாரண நிதியை 4 மடங்கு உயர்த்தி வழங்க வேண்டும் என ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். ஃபெஞ்சல் புயலை திமுக சரியாக எதிர்கொள்ளவில்லை என்றும், அரசின் நிர்வாகத் திறமையின்மையால் பல கிராமங்கள் இன்னமும் வெள்ளநீரில் தத்தளிப்பதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார். மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதாகவும், இரட்டை வேடம் போடுவதில் திமுகவுக்கு நிகர் திமுகதான் எனவும் அவர் சாடியுள்ளார்.

News December 4, 2024

புயல் நிவாரணம்: ரூ.10 லட்சம் அளித்தார் சிவகார்த்திகேயன்

image

ஃபெஞ்சல் புயல், வெள்ள நிவாரணத்துக்காக தமிழக அரசிடம் நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.10 லட்சம் அளித்துள்ளார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து அவர் இதற்கான காசோலையை வழங்கியுள்ளார். முன்னதாக, விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் புயல், வெள்ளத்தால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை டி.பி. சத்திரத்தில் மழையால் பாதித்தோருக்கு விஜய் நிவாரணப் பொருள் வழங்கினார்.

News December 4, 2024

ரயில்வேயை தனியார்மயம் ஆக்காதீங்க: எதிர்க்கட்சிகள்

image

ரயில்வேயை மத்திய அரசு தனியார்மயமாக்க திட்டமிட்டு வருவதாக அவ்வப்போது செய்திகள் வெளியானபடி உள்ளன. இதனை மக்களவையில் இன்று எதிர்க்கட்சிகள் எழுப்பின. சமாஜ்வாதி எம்பி நீரஜ் மவுரியா பேசியபோது, ரயில்வேயை தனியாரிடம் ஒப்படைத்தால், ஏழைமக்கள் பாதிக்கப்படுவர் என்று கூறினார். TMC எம்பி பாபி ஹல்தார் பேசியபோது, மூத்த குடிமக்களுக்கு மீண்டும் கட்டணச் சலுகை அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

error: Content is protected !!