news

News December 4, 2024

இந்திய அணி வீரர்கள் சூப்பர் ஸ்டார்கள்: நாதன் லியோன்

image

இந்திய அணியை சூப்பர் ஸ்டார்கள் நிறைந்த குழுவாகப் பார்ப்பதாக ஆஸி.வீரர் நாதன் லியோன் புகழ்ந்துள்ளார். கிரிக்கெட் ஒரு குழு விளையாட்டு என்ற அவர், இந்திய அணியில் அது சிறப்பாக இருப்பதாகவும் கூறியுள்ளார். 2ஆவது டெஸ்டில் எந்த ஒரு தனிப்பட்ட வீரர் மீதும் கவனம் செலுத்தாமல், இந்திய அணியை வெல்ல வேண்டும் என்ற இலக்கோடு விளையாட உள்ளதாகவும், நிச்சயம் தாங்கள் வெற்றி பெறும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

News December 4, 2024

நாக சைதன்யா – சோபிதா திருமண PHOTO

image

நாக சைதன்யா – சோபிதா துலிபாலா திருமணம் பிரமாண்டமாக இன்று நடந்து முடிந்தது. ஐதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டூடியோவில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு மண்டபத்தில் ANR-இன் சிலை முன் இருவருக்கும் திருமணம் நடந்தது. திருமண விழாவின் போது, மணமக்கள் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அவர்களுக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

News December 4, 2024

1983லேயே வாட்சில் டிவி பார்க்கும் வசதியா?

image

1983ல் வாட்சில் டிவி பார்க்கும் வசதி இருந்துள்ளது என்றால் நம்பமுடிகிறதா? SEIKO TV வாட்ச் அப்போதே Seiko T001 என்ற பெயரில் வாட்ச் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில், எங்கிருந்து வேண்டுமானாலும் டிவி பார்க்கலாம். இந்த வாட்ச் வெளியான போது உலகின் சிறிய டிவி என கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற்றது. அப்போது இதன் விலை $400. இந்த வாட்ச் 1983ல் வெளியான ஜேம்ஸ் பாண்ட் படமான Octopussy படத்தில் இடம் பெற்றது.

News December 4, 2024

கோடநாடு வழக்கில் புதிய உத்தரவு!

image

கோடநாடு கொலை சம்பவத்தில் தன்னை தொடர்புப்படுத்தி பேசிய பத்திரிகையாளர் மேத்யூவுக்கு எதிராக ₹ 1 கோடி மானநஷ்ட வழக்கை இபிஎஸ் தொடர்ந்திருந்தார். இதையடுத்து, மேத்யூ தாக்கல் செய்த பதில் மனுவிலும் இபிஎஸ்-க்கு எதிராக பல குற்றச்சாட்டுகள் கூறப்பட்டிருந்தன. இதற்கு இபிஎஸ் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மேத்யூ தனது பதில் மனுவில் கூறிய கருத்துகளை திரும்ப பெறுவாரா என ஐகோர்ட் விளக்கம் கேட்டுள்ளது.

News December 4, 2024

சச்சின் சாதனையை முறியடிப்பாரா ஜெய்ஸ்வால்?

image

சச்சின் 2010இல் 14 டெஸ்டுகளில் 1,562 ரன்கள் சேர்த்துள்ளார். இதுவே இந்திய அணி வீரர் ஓராண்டில் டெஸ்டுகளில் குவித்த அதிகபட்ச ரன் ஆகும். அண்மைக்காலமாக டெஸ்ட் போட்டிகளில் கலக்கி வரும் ஜெய்ஸ்வால் இந்தாண்டில் 12 டெஸ்டுகளில் 1,280 ரன்கள் எடுத்துள்ளார். ஆஸி தொடரில் அவர் மேலும் 283 ரன் சேர்த்தால், சச்சின் சாதனையை தகர்க்க முடியும். அவர் சச்சின் சாதனையை முறியடிப்பாரா? உங்கள் கமெண்ட்சை கீழே பதிவிடுங்க.

News December 4, 2024

தி.மலை, சென்னையில் மழை

image

தி.மலை மாவட்டம் ஆரணி உள்ளிட்ட பகுதிகளில் கனமழையும், சென்னையின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழையும் பெய்து வருகிறது. இதற்கிடையில், விழுப்புரம், கடலூர், காஞ்சி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி, விருதுநகர், மதுரை, தென்காசி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 23 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது.

News December 4, 2024

கடலூருக்கு லீவ் கிடையாது

image

விழுப்புரம் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், வெள்ளம் பாதித்த மற்ற மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் நாளை (டிச.05) செயல்படும். மாணவர்கள், ஆசிரியர்கள் வழக்கம்போல் கல்வி நிலையங்களுக்கு வர வேண்டும் என அறிவுத்தப்பட்டுள்ளது.

News December 4, 2024

புஷ்பா-2 ஓபனிங்கே ரெக்கார்ட் பிரேக்!

image

அல்லு அர்ஜுன், ரஷ்மிகா மந்தனா நடிப்பில் நாளை வெளியாகும் புஷ்பா- 2 படத்துக்கான எதிர்பார்ப்பு கட்டுக்கடங்காம எகிறுது. இந்த படத்துக்கான முன்பதிவு தமிழ்நாட்டில் மட்டும் ரூ.5 கோடியை தொட்டுள்ளது. முதல் நாள் வசூல் ரூ.8 கோடி வரை செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ட்ரெண்ட் தொடர்ந்தால் முன்பதிவிலேயே ரூ.100 கோடி வசூலை அசால்ட்டாக தூக்கிவிடுமாம் புஷ்பா 2.

News December 4, 2024

மக்களே சொந்த ஊருக்கு செல்ல ரெடியா?

image

சனி, ஞாயிறு வார விடுமுறையையொட்டி, சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என TNSTC அறிவித்துள்ளது. தொடர் மழை காரணமாக, மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்தனர். தற்போது மழை நின்று விட்டதால், இந்த வாரம் சொந்த ஊருக்கு செல்ல ரெடியாக உள்ளனர். இதனை கருத்தில் கொண்டு சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து டிச.6-8 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பயணிகள் www.tnstc.in-இல் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

News December 4, 2024

மாணவர்களுக்கு நடத்தப்பட்ட ரகசிய சோதனை!

image

சென்னை ஐஐடி வளாகத்தில் ‘வனவானி’ என்ற தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இங்குள்ள மாணவர்களுக்கு அண்மையில் ஒரு ரகசிய சோதனை நடத்தப்பட்டது. எவ்வளவு நேரம் அவர்களால் ஓட முடிகிறது, வெளியேறும் வியர்வையின் அளவு போன்றவை சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த தாங்கு திறன் சோதனை குறித்து மாணவர்களின் பெற்றோர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் புகார் அளித்தனர். பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை நடந்து வருகிறது.

error: Content is protected !!