India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
NZ-க்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில், 103 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்து இந்திய அணி தடுமாறி வருகிறது. ரோஹித் 0, கோலி 1, பண்ட் 18, சர்ஃபராஸ் 11, ஜெய்ஸ்வாலும், ஷுப்மன் கில்லும் 30 ரன்கள் என சொற்ப ரன்களில் முன்கள வீரர்கள் வெளியேறினர். ஜடேஜாவும், சுந்தரும் களத்தில் உள்ளனர். IND அணி 164 ரன்கள் பின் தங்கியுள்ளது. முதல் போட்டியில் IND மோசமாக தோற்ற நிலையில், 2ஆவது போட்டியிலும் சொதப்பி வருகிறது.
தவெக மாநாடு தொடர்பாக விஜய் வெளியிட்டுள்ள அறிக்கைகளில் வி.சாலை கவனம் பெற்றுள்ளது. இது தொடர்பாக அக்.4 ஆம் தேதி அவர் வெளியிட்ட அறிக்கையில் வி.சாலை எனும் வெற்றிச்சாலை எனக் குறிப்பிட்டிருந்தார். அக். 20ஆம் தேதி வெளியான அறிக்கையில், வி.சாலை எனும் விவேக சாலை எனவும், இன்று வெளியான அறிக்கையில் வி.சாலை எனும் வியூகச் சாலை என்றும் அவர் தெரிவித்துள்ளார். தவெக முதல் மாநில மாநாடு நாளை மறுநாள் நடைபெறவுள்ளது.
திருமணம், பெயர் சூட்டுதல், காதணி விழா உள்ளிட்ட மங்கள நிகழ்வுகளின்போது, மஞ்சள் அரிசியை அட்சதையாக தூவும் வழக்கம் இன்றும் தமிழ்நாட்டில் உள்ளது. இது சங்ககாலம் தொட்டு தொடரும் பண்பாட்டு எச்சமாகும். அறிவியல்படி பார்த்தால், மண்ணில் தூவினால் முளைக்கும் நெல்மணிக்கு உயிருண்டு. அரிசிக்கு உயிரில்லை. இதன் காரணமாகவே, தமிழ் மூத்தோர் வாழ்த்துவதற்கு நெல்லை பயன்படுத்தினர். அது பின்னாளில் அரிசியாக மருவியது.
தங்கத்திற்கு போட்டியாக உயர்ந்து வந்த வெள்ளி விலை நேற்று ₹2 குறைந்த நிலையில், இன்றும் சற்று குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் சில்லறை விற்பனையில் வெள்ளி கிராமுக்கு ₹3 குறைந்து ஒரு கிராம் ₹107க்கும், கிலோவுக்கு ₹3,000 குறைந்து ஒரு கிலோ ₹1,07,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மாதம் வெள்ளி விலை 1 கிராம் ₹98ஆக இருந்த நிலையில், தற்போது 107க்கு விற்பனையாகிறது.
‘பிளடி பெக்கர்’ படத்திற்கு U/A சான்றிதழ் கிடைத்துள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. அறிமுக இயக்குநர் சிவபாலன் இயக்கத்தில், கவின் நடிப்பில் உருவாகியுள்ள இப்படம், தீபாவளியை முன்னிட்டு அக். 31ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இப்படத்தை பிரபல இயக்குநர் நெல்சன் தயாரித்துள்ளார். அமரன், லக்கி பாஸ்கர், பிரதர், பிளடி பெக்கர் ஆகிய படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது. இதில் நீங்கள் பார்க்க விரும்பும் படம் எது?
TVK மாநாட்டில் பங்கேற்கவுள்ள தோழர்களுக்காக இதய வாசலைத் திறந்து வைத்துக் காத்திருப்பேன் என விஜய் தெரிவித்துள்ளார். உச்சபட்ச அரசியல் ஒழுங்கோடு உலகமே உற்று நோக்கிப் போற்றும் விதமாக மாநாட்டை கொண்டாடுவோம் என்றும் TVK கொடியை கைகளில் ஏந்திவருமாறும் கேட்டுக்கொண்டுள்ளார். தங்கள் வருகைக்காக தன் இரு கரங்களையும் விரித்தபடி காத்திருப்பதாகவும், வி.சாலை என்னும் வியூகச் சாலையில் சந்திப்போம் என்றும் கூறியுள்ளார்.
வார்னருக்கு விதிக்கப்பட்டிருந்த வாழ்நாள் தடையை AUS கிரிக்கெட் வாரியம் நீக்கியுள்ளது. 2018ல் பந்தை சேதப்படுத்தியதாக, ஓராண்டு விளையாடத் தடையும், அனைத்து விதப் போட்டிகளிலும் கேப்டனாக பொறுப்பேற்க வாழ்நாள் தடையும் விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், வார்னர் வருத்தம் தெரிவித்ததை அடுத்து தடை நீக்கப்பட்டுள்ளது. சர்வதேச போட்டிகளில் அவர் ஓய்வு பெற்றாலும், BBL தொடரில் கேப்டனாக வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் இனி தனித்து நின்று வெற்றி பெற முடியாது என தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், 2026இல் நிச்சயம் கூட்டணி ஆட்சிதான் அமையும் என்றார். மேலும், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைத்தாலும் ஆட்சியில் பங்கு கேட்போம் எனவும், திமுகவுக்கு எதிராக பலமான கூட்டணி அமையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
1) உலகில் மொத்தம் எத்தனை வானிலை ஆராய்ச்சி மையங்கள் உள்ளன? 2) தையல் இயந்திரத்தை கண்டுபிடித்தவர் யார்? 3) கன்னட மொழியின் முதல் நாவல் எது? 4) சேது சமுத்திரம் கால்வாய் பற்றி கண்டறிய அமைக்கப்பட்ட குழு எது? 5) பாலைவனம் இல்லாத கண்டம் எது? 6) EPS என்பதன் விரிவாக்கம் என்ன? 7) மாவீரர் பூ (அ) கார்த்திகைப் பூ என அழைக்கப்படும் மலர் எது? விடைகளை கமெண்ட்டில் சொல்லுங்க. சரியான விடையை 2 மணிக்கு பாருங்க.
நாளுக்கு நாள் புதிய உச்சம் தொட்டு வந்த தங்கம் விலை நேற்று சவரனுக்கு ₹440 குறைந்த நிலையில், இன்று மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹80 உயர்ந்து ஒரு சவரன் ₹58,360க்கும், கிராமுக்கு ₹10 உயர்ந்து ஒரு கிராம் ₹7,295க்கும் விற்கப்படுகிறது. பண்டிகை காலம், சுப முகூர்த்த காலங்கள் என்பதால் தங்கம் விலை குறையும் என காத்திருந்த மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.