news

News December 5, 2024

இன்னும் போன்பூத்கள் பயன்பாட்டில் இருக்கிறதா?

image

கடைசியாக எப்போது டெலிபோன் பூத்தை பார்த்தீங்க. கடந்த 3 வருடத்தில் 44,922 டெலிபோன் பூத்கள் மூடப்பட்டுவிட்டது. தற்போது 17,000 பூத்கள் பயன்பாட்டில் உள்ளது என நாடாளுமன்றத்தில் மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் பெம்மாசானி சந்திரசேகர் கூறினார். தமிழகத்தில் நகரங்களில் 2,809 PCOக்களும், கிராமங்களில் 305 PCOக்களும் இருக்கிறதாம். நீங்க கடைசியா போன் பூத்’ல பேசுனா விஷயம் நியாபகம் இருக்கா?

News December 5, 2024

2 மாதம் ரேஷன் பொருள்கள் இலவசம்

image

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ₹2,000 நிவாரண தொகையை அரசு அறிவித்துள்ளது. இதனை உயர்த்தி வழங்குமாறு எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. இந்நிலையில் 2 மாதம் ரேஷன் பொருள்களை இலவசமாக வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News December 5, 2024

இனி வீட்டு கடனை கூட்டுறவு வங்கிக்கு மாற்றிக் கொள்ளலாம்!

image

பொதுத்துறை & தனியார் வங்கிகளில் வாங்கிய வீட்டு கடனை, தமிழக அரசின் கூட்டுறவு வங்கிக்கு மாற்றிக் கொள்ளும் வசதி தொடங்கப்பட்டு உள்ளது. இது தவிர, ஏற்கெனவே வாங்கிய தொகையை விட, கூடுதலாக கடன் வாங்கும் ‘Top up’ வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கியில் EMI முறைக்கு பதில், அசல் தொகை செலுத்துவதற்கு ஏற்ப வட்டி குறையும். ₹75 லட்சம் வரை கடன் வழங்கப்படுவதால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

News December 5, 2024

காலை 10 மணி வரை 9 மாவட்டங்களில் மழை

image

இன்று (டிச.5) காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் விவரங்களை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. அதில், கிருஷ்ணகிரி, தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கரூர், விருதுநகர் மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் கணித்துள்ளது.

News December 5, 2024

இன்று பதவியேற்கிறார் ஃபட்னவிஸ்

image

மகாராஷ்டிராவின் புதிய முதல்வராக தேவேந்திர ஃபட்னவிஸ் இன்று பதவியேற்கிறார். CM பதவி யாருக்கு என்பதில், 10 நாள்களுக்கு மேலாக நீடித்த இழுபறி முடிவுக்கு வந்துள்ளது. ஃபட்னவிஸ் CM ஆக பதவியேற்பது இது மூன்றாவது முறையாகும். உடன் அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்கிறார். ஷிண்டேவும் துணை முதல்வராக பதவியேற்பாரா என்பது தெரியவில்லை. பதவியேற்பு விழாவில், PM மோடி, மத்திய அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.

News December 5, 2024

இன்று விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி ராக்கெட்

image

ஆந்திரா ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது. பிஎஸ்எல்வி-சி59 ராக்கெட் இன்று மாலை 4.04 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது. ராக்கெட் நேற்று விண்ணில் ஏவப்பட இருந்த நிலையில், ப்ரோபா 3 செயற்கைக்கோளில் கண்டறியப்பட்ட தொழில் நுட்பக் கோளாறு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. சூரியனின் மேற்புற வளிமண்டலமான கரோனாவை ஆய்வு செய்ய செயற்கைக்கோள் அனுப்பப்படுகிறது.

News December 5, 2024

பிரான்ஸ் அரசு கவிழ்ந்த‌து

image

அரசியல் நெருக்கடி காரணமாக, பிரான்ஸ் அரசு கவிழ்ந்தது. பட்ஜெட் பற்றாக்குறை சர்ச்சை காரணமாக பிரான்ஸ் PM மைக்கேல் பார்னியர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி அடைந்ததால், ஆட்சி கவிழ்ந்துள்ளது. அதிபர் இம்மானுவேல் மேக்ரானும் பதவி விலகக்கோரி எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. 60 ஆண்டுகளில் முதல்முறையாக பிரான்ஸ் அரசு நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வி அடைந்துள்ளது.

News December 5, 2024

50 ஆண்டுகளில் இல்லாத பலத்த நிலநடுக்கம்: புதுத் தகவல்

image

தெலுங்கானாவில் நேற்று காலை ரிக்டர் அளவுகோலில் 5.3 என்ற சக்திவாய்ந்த நிலநடுக்கம் நேரிட்டது. இது ஆந்திரா, மகாராஷ்டிராவிலும் உணரப்பட்டது. சுமார் 10 வினாடிகள் வரை நீடித்த அதிர்வுகளால், மக்கள் பீதியடைந்து வெட்ட வெளியில் தஞ்சமடைந்தனர். நிலநடுக்கத்தில் சேதம், உயிரிழப்பு ஏற்பட்டதாக தகவல் இல்லை. எனினும், தெலுங்கானாவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத சக்திவாய்ந்த நிலநடுக்கமாக இது கூறப்படுகிறது.

News December 5, 2024

ஜெ. ஜெயலலிதா என்னும் ஆளுமை…!!

image

அம்மா என்ற அதிமுகவினரால் மரியாதையாக அழைக்கப்படும் ஜெயலலிதா மறைந்து 8 ஆண்டுகள் ஆகியும், அவரின் மக்கள் பணிகள் தமிழகத்தின் முக்கிய தலைவராக நிற்கவைக்கிறது. மாணாக்கருக்கு இலவச லேப்டாப், அம்மா உணவகம், லாட்டரி சீட்டு ஒழிப்பு, தாலிக்கு தங்கம், மகளிர் காவல் நிலையம் என அவரால் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் ஏராளம். அவர் திட்டங்களால் பயன்பெற்ற ஒரு சம்பவத்தை நீங்கள் கீழே பதிவிடுங்கள்.

News December 5, 2024

ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர் கைது

image

எல்லைத் தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி, 15 ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. ராமேஸ்வரம் மீனவர்கள் 2 படகுகளில் கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படை, அவர்களை கைது செய்ததோடு, படகுகளையும் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றது. ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டதாகவும், வலைகள், ஜிபிஎஸ் சேதப்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

error: Content is protected !!