news

News October 25, 2024

ED நடத்திய சோதனையில் ரூ.46 லட்சம் பறிமுதல்

image

9 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.46 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. டெல்லி, மானேசர், குருகிராம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற இந்த சோதனையில் சொகுசு கார்கள், வங்கி லாக்கர்கள், டீமேட் கணக்குகள் தொடர்பான ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். நிதி மோசடி தொடர்பான ஆதாரங்கள் மற்றும் மின்னணு சாதனங்களையும் சோதனைக்காக எடுத்து சென்றுள்ளனர்.

News October 25, 2024

Apply Now: ₹1.08 லட்சம் சம்பளம்… மத்திய அரசில் வேலை!

image

மத்திய அரசின் POWERGRID நிறுவனத்தில் காலியாகவுள்ள 70 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பயிற்சி மேற்பார்வையாளராக பணியாற்ற விரும்புவோர் இன்றே விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு: 18-27. சம்பளம்: ₹21,500 – ₹1,08,000. கல்வித்தகுதி: Diploma With 70%. ஓராண்டுப் பின் Sub Jr. Engineer பதவி உயர்வளிக்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள்: நவ.6. கூடுதல் விவரங்களுக்கு <>இந்த<<>> லிங்க்கை கிளிக் செய்யவும்.

News October 25, 2024

இந்த மாவட்டங்களில் மழை வெளுக்கும்

image

தமிழகத்தில் 25 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை கனமழை வெளுத்து வாங்கப் போவதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. குமரி, கரூர், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சை மாவட்டங்களில் மிக கனமழையும், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, சிவகங்கை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என அலர்ட் கொடுத்துள்ளது.

News October 25, 2024

Recipe: சம்பா கோதுமை அல்வா செய்வது எப்படி?

image

சம்பா கோதுமையை கழுவி, 8 மணி நேரம் நீரில் ஊற வைக்கவும். பின் கிரைண்டரில் போட்டு அரைத்து, பின் அதை பிழிந்து பாலெடுக்கவும். அதிலிருந்து கிடைக்கும் கெட்டியான பாலை எடுத்து, அடிகனமான பாத்திரத்தில் ஊற்றி காய்ச்சவும். கொதி வந்ததும், அதில் நாட்டுச் சர்க்கரையை சேர்க்கவும். அத்துடன், சிறுக சிறுக நெய் சேர்த்து இடைவிடாது கிளறவும். பதம் வந்ததும் ஏலக்காய் தூள், முந்திரி போட்டு இறக்கி ஆறவைத்தால் அல்வா ரெடி.

News October 25, 2024

ஒரு சிக்சர் கூட அடிக்க முடியவில்லை: மேக்ஸ்வெல்

image

IPL 2020ல் தன்னால் ஒரு சிக்சர் கூட அடிக்க முடியவில்லை என்று ஆஸ்திரேலியா வீரர் கிளென் மேக்ஸ்வெல் வருத்தம் தெரிவித்துள்ளார். அப்போது தான் மிகுந்த அழுத்தத்தில் இருந்ததாக அவர் தனது ‘தி ஷோமேன்’ புத்தகத்தில் தெரிவித்துள்ளார். IPL முடிந்ததும் ஆஸ்திரேலியாவிற்காக ஆடியபோது முதல் சிக்ஸர் அடித்ததாக கூறியுள்ளார். இதையடுத்து PBKS கேப்டனாக இருந்த KL ராகுலிடம் போனில் வருத்தம் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.

News October 25, 2024

ஆளுநருக்கு சர்ச்சையானது.. உதயநிதிக்கு?

image

துணை முதல்வர் நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியதில் நிகழ்ந்த பிழையை அரசியலாக்க வேண்டாம் என அன்புமணி கேட்டுக்கொண்டார். ஆளுநர் மற்றும் உதயநிதி நிகழ்ச்சிகளில் நடந்த பிழைகள் மனித பிழைகள்தான். ஆனால் ஆளுநர் விவகாரத்திற்கு மட்டும் சிலர் உள்நோக்கம் கற்பித்ததாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், DD தமிழ் சேனல் மன்னிப்பு கேட்டதை போல், அரசு துறையும் மன்னிப்பு கேட்க வலியுறுத்தியுள்ளார்.

News October 25, 2024

தீபாவளிக்கு முதல் நாள் இந்த மாவட்டத்தில் விடுமுறை

image

தீபாவளிக்கு முந்தைய நாளான அக்.30ஆம் தேதி முத்துராமலிங்க தேவரின் குருபூஜை வருகிறது. தென் மாவட்டங்களில் முக்கிய நிகழ்வான அன்று சிவகங்கை மாவட்டத்தில் ( சிவகங்கை, மானாமதுரை, இளையான்குடி, திருப்புவனம், காளையார்கோவில்) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் விரைவில் விடுமுறை அறிவிப்பு வெளியாகவுள்ளது.

News October 25, 2024

Apply Now: NLC நிறுவனத்தில் 1,013 பணியிடங்கள்

image

NLC நிறுவனத்தில் காலியாகவுள்ள 1,013 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Trade Apprentice, Technician Apprentice, Degree Apprentice உள்ளிட்ட பிரிவுகளில் பணியாற்ற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி: ITI, Diploma, D.Pharm & Any UG Degree. வயது வரம்பு: 18-27. உதவித்தொகை: ₹8,766 – ₹12,524. விண்ணப்பிக்க கடைசி நாள்: நவ.6. கூடுதல் விவரங்களுக்கு <>இந்த <<>>லிங்க்கை கிளிக் செய்யவும்.

News October 25, 2024

தலை துண்டாகியும் 2 ஆண்டு உயிருடன் இருந்த கோழி

image

தலை வெட்டப்பட்ட கோழி, 2 ஆண்டு உயிருடன் இருந்த சுவாரஸ்ய நிகழ்வு உங்களுக்கு தெரியுமா? USA விவசாயி லாயிட் ஒல்சன், 1945இல் ஒரு கோழியின் கழுத்தை வெட்டியுள்ளார். ஆனாலும், அது உயிருடன் இருக்க, ஒரு பெட்டியில் போட்டு கண் சொட்டு மருந்து போன்றவற்றை உணவாக வழங்கியுள்ளார். பிறகு 1947இல் அந்தக் கோழி உயிரிழந்தது. கோழிகளின் மூளை, தலையின் பின்பகுதியில் உள்ளதால், கழுத்து வெட்டப்பட்டும் கோழி உயிருடன் இருந்துள்ளது.

News October 25, 2024

இபிஎஸ்-க்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

image

ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு திமுக தொடர்ந்த அவதூறு வழக்கில் பதிலளிக்க இபிஎஸ்-க்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக்குடன் திமுகவுக்கு தொடர்பு உள்ளதாக இபிஎஸ் குற்றஞ்சாட்டியிருந்தார். இதை எதிர்த்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இது குறித்து விளக்கமளிக்கும்படி இபிஎஸ்-க்கு உத்தரவிட்டுள்ளது.

error: Content is protected !!