India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரசமைப்பை ஒரு கையிலும், பகவத் கீதையை இன்னொரு கையிலும் விஜய் வைத்திருப்பதாக விசிக கடுமையாக விமர்சித்துள்ளது. விசிக துணை பொதுச் செயலாளர் வன்னியரசு பேசியபோது, அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவுக்கு வர முடியாது என திருமாவளவன் கூறவில்லை. அம்பேத்கர் குறித்த புரிதல் இல்லாத விஜய்யுடன் மேடையை பகிர முடியாது என்றே தெரிவித்தார் என்றார். சமரச பாயாசம் கிண்டுபவர் விஜய் என்றும் அவர் விமர்சித்தார்.
மத்திய இணை அமைச்சர் எல்.முருகனுக்கு எதிரான கிரிமினல் அவதூறு வழக்கு விசாரணைகளை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. முரசொலி அறக்கட்டளை பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டு இருப்பதாக 2019ஆம் ஆண்டு அவர் பேசியிருந்தார். இதுதொடர்பாக திமுக தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி அவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு (பிங்க் பால்) வேகப்பந்து வீச்சாளர் ஸ்காட் போலண்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கேப்டன் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். முதல் டெஸ்டில் காயம் அடைந்த ஹேசில்வுட்க்கு பதிலாக ஸ்காட் போலண்ட் சேர்க்கப்பட்டுள்ளார். AUS அணி: கவாஜா, மெக்ஸ்வீனி, லாபுஷேன், ஸ்மித், ஹெட், மார்ஷ், அலெக்ஸ் கேரி, கம்மின்ஸ்(C), ஸ்டார்க், லியான், போலண்ட்.
என்னது தவளையை பாலில் போட்டு குடித்தார்களா? ஆம், விநோதமாக இருந்தாலும் அது உண்மை தான். Fridge கண்டுபிடிக்காத காலத்தில் பால் கெட்டுப்போகாமல் இருக்க, ரஷ்யாவில் இதை செய்துள்ளனர். Russian brown என்ற தவளையின் தோலில் சுரக்கும் திரவத்தில் பாக்டீரியா, பூஞ்சை எதிர்ப்பு தன்மை இருந்ததால், அது பாலை கெட்டுப்போகாமல் வைத்ததாம். இந்த அறிவியல் உண்மை பின்னாளில் தெரிய வந்தது. நல்லவேளை இப்போ Fridge இருக்கு.
தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்தினால், அண்டை மாநிலங்களில் இருந்து கள்ளச்சந்தையில் மது உள்ளே வரும் என்கிறார் அமைச்சர் ரகுபதி. இதை தடுக்க மத்திய அரசு நாடு முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்திய அவர், மது விற்பனை வருமானத்தை நம்பி தமிழக அரசு இல்லை என்றார். மேலும், மதுவிலக்கை கொண்டு வருவோம் என வாக்குறுதி கொடுத்ததாலேயே 2016-ல் ஆட்சியை இழந்ததாகவும் கூறினார். உங்க கருத்து?
ஃபெஞ்சல் புயல் தாக்கத்தால் ஏற்பட்ட பெருமழையால் வட மாவட்டங்கள் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ள நிலையில் CM ஸ்டாலின் தனது ஒரு மாத சம்பளத்தை நிவாரணத்திற்கு வழங்கியுள்ளார். தலைமைச் செயலாளர் முருகானந்தத்திடம் இதற்கான காசோலையை அவர் வழங்கினார். தமிழ்நாட்டில் MLAக்களுக்கு மாதம் ₹1,05,000மும், முதல்வருக்கு ₹2,05,000மும் ஊதியமாக வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
திருச்சி SP வருண்குமார், நாதகவை பிரிவினைவாத இயக்கம் என அண்மையில் பேசியிருந்தார். ஏற்கெனவே சீமானுக்கும், அவருக்கும் கருத்து வேறுபாடு நிலவி பிறகு தணிந்திருந்தது. இந்த நிலையில், இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பேசிய சீமான், வருண்குமாருடன் தாம் மோத தயாராக இருப்பதாகக் கூறினார். மேலும், நேருக்கு நேர் மோதுவோம் வா என்றும் வருண்குமாருக்கு சீமான் அழைப்பு விடுத்தார்.
புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சேர்ந்த ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2,000 நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்நிலையில், அந்த நிவாரணத் தொகையை பெறுவதற்கான டோக்கன் விநியோகம் இன்று தொடங்கப்பட்டு இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது. ரேஷன் கடைகள் மூலம் டோக்கன் விநியோகம் நடப்பதாகவும் அரசு கூறியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் நர்சிங் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளை பெண்கள் பயில தலிபான் அரசு தடை விதித்ததற்கு வருத்தம் தெரிவித்து அதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ஆப்கன் கிரிக்கெட் வீரர் ரஷீத் கான் வலியுறுத்தியுள்ளார். கற்றலின் முக்கியத்துவத்தை குர்ஆன் வலியுறுத்துவதாகச் சுட்டிக்காட்டி, அனைவருக்குமே கல்வி வழங்குவது சமூக பொறுப்பல்ல, அது தார்மீக கடமை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
<<14794742>>சென்னை தாம்பரத்தில்<<>> கழிவுநீர் கலந்த குடிநீரை அருந்தியதில் 3 பேர் உயிரிழந்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிப்பதாக இபிஎஸ் தெரிவித்துள்ளார். புயல் கரையைக் கடந்ததும், குடிநீர், கழிவுநீர் குழாய்கள் கலப்பின்றி முறையாக வழங்கப்படுகிறதா என்பதை அரசு உறுதிசெய்திருக்க வேண்டும் என்றார். மெத்தனப் போக்குடன் அதை செய்யாமல் விடுத்து, சுகாதாரமற்ற குடிநீரால் மக்கள் உயிரோடு அரசு விளையாடியதாக கண்டனம் தெரிவித்துள்ளாா்.
Sorry, no posts matched your criteria.