India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கர்நாடகாவில் 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்று கொலை செய்த கொடூரனை என்கவுண்டர் செய்தவர்தான் SI அன்னப்பூர்ணா. ஹாஸ்பிடலில் சிறுமி இறந்து கிடந்ததைப் பார்த்து மனம் தாங்காமல் கதறி அழுதவர். போலீசார் சுற்றி வளைத்ததும் கற்களை கொண்டு தாக்க முயன்ற குற்றவாளியை நோக்கி துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். அன்னப்பூர்ணாவை லேடி சிங்கம் என பலரும் புகழ்ந்து வருகின்றனர்.
இரவு 7 மணி வரை 10 மாவட்டங்களில் இடி- மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக IMD தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல்லில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் எனக் கூறியுள்ளது. தென்காசி, விருதுநகர், நெல்லை, குமரி, தூத்துக்குடியிலும் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக IMD கணித்துள்ளது. உங்கள் ஊரில் மழை பெய்கிறதா? கீழே கமெண்ட் பண்ணுங்க.
நடப்பு IPL சீசனில் தொடர் தோல்விகளை கண்டு வரும் CSK அணி, இன்று LSG அணியை எதிர்கொள்கிறது. முன்னாள் கேப்டன் ருதுராஜ், காயம் காரணமாக விலகிவிட்டதால், CSK ரசிகர்கள் தோனியை மட்டுமே கடவுள் போல நம்பியுள்ளனர். இனி வரும் போட்டிகளில் தோனி தனது கேப்டன் திறமையை காட்டி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்வார் என்று ரசிகர்கள் மலை போல நம்பியுள்ளனர். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கமெண்ட்டில் சொல்லுங்க.
EMMY விருது வென்ற பிரிட்டன் நடிகை ஜீன் மார்ஸ் (90) காலமானார். 1970களில் வெளியான அப்ஸ்டேர்ஸ், டவுன்ஸ்டேர்ஸ் சீரிஸ் மூலம் பிரபலமானவர் ஜீன்ஸ் மார்ஸ். லண்டனில் வசித்த அவர் ஞாபக மறதி நோயால் ஏற்பட்ட பின்விளைவுகளால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் அவர் மரணமடைந்துள்ளார். ஈகிள் ஹேஸ் லேண்டட், ஹவுஸ் ஆப் எலியட் உள்ளிட்ட பல சீரிஸ்களில் நடித்துள்ள அவருக்கு, 1975இல் EMMY விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
டோல்கேட் வசூலில் மத்திய அரசு புதிய டெக்னாலஜியை நடைமுறைப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, டோல்கேட்டோ FASTag முறையோ இனி இருக்காதாம். அனைவரும் ஜிபிஎஸ் பொருத்திய வாகனங்களுக்கு தயாராகிக் கொள்ள வேண்டும். பயணிக்கும் தூரத்திற்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்படுமாம். இதனால், அதிக கட்டணத்தை தவிர்க்கலாம். டோல்கேட்டில் காத்திருக்கும் சூழல் இருக்காது. சூப்பர்ல!
NMMSS தேர்வு மூலம் 1 லட்சம் 8-ம் வகுப்பு மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, 9 முதல் 12-ம் வகுப்பு வரை மத்திய அரசு ரூ.1,000 உதவித் தொகை வழங்கி வருகிறது. இந்தத் தேர்வில் இதுவரை தமிழகத்தில் இருந்து 5,890 மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்பட்டது. தற்போது இந்த எண்ணிக்கையை 6, 695ஆக மத்திய அரசு அதிகரித்துள்ளது. இந்தத் தேர்வுக்கான ரிசல்ட் ஏற்கெனவே வெளியாகிவிட்டது. செக் பண்ணிக்கோங்க.
பாமகவில் அன்புமணிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்த பொருளாளர் திலகபாமாவுக்கு எதிராக பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், திலகபாமா கட்சிக்கு நேற்று வந்தவர் என்றும், கட்சியில் கொள்கை கோட்பாடுகள் குறித்து ஏதும் அறியாதவர் என்றும் விமர்சித்துள்ளார். அரசியல் என்றால் என்னவென்றே தெரியாத அரைவேக்காடு திலகபாமா என்றும் அவர் காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார்.
பாமகவில் ராமதாஸ், அன்புமணி இடையே ஏற்பட்டிருக்கும் மோதலால், நிர்வாகிகள் இரு அணியாக பிரியத் தொடங்கியுள்ளனர். அதன் உச்சமாக, பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. அன்புமணிக்கு ஆதரவாக திலகபாமா கருத்து தெரிவித்திருந்த நிலையில், அவர் கட்சியில் இருந்து விலக வேண்டும் என்று வலியுறுத்தி வடிவேல் ராவணன் தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பிஹார் தேர்தலுக்கு முன்பு மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படலாம் என்றும், அப்பாேது பிஹார் மாநிலத்தை சேர்ந்த சிலருக்கு மத்திய அமைச்சரவையில் இடமளிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது. அதேபோல், 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் வைத்து, அண்ணாமலை, அன்புமணி, சி.வி. சண்முகம், ஜி.கே. வாசன் ஆகியோருக்கும் மத்திய அமைச்சரவையில் இடமளிக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
மாலை 4 மணி வரை 11 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என IMD தெரிவித்துள்ளது. மாநிலத்தின் பல பகுதிகளில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. அதேநேரத்தில் சில பகுதிகளில் மழையும் பெய்கிறது. இந்நிலையில், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, மதுரை, தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழை பெய்யக்கூடும் என IMD கூறியுள்ளது.
Sorry, no posts matched your criteria.