news

News October 26, 2024

விடியா அரசு.. விஜய் மாநாட்டில் அலறவிடும் போஸ்டர்கள்!

image

விஜய் மாநாட்டை முன்னிட்டு, திமுகவை விமர்சிக்கும் வகையில் விக்கிரவாண்டியில் போஸ்டர்கள் ஒட்டப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, “அக்., 27ல் மன்னராட்சிக்கு முடிவு”; தளபதியால் மக்கள் ஆட்சிக்கு விடிவு”. “நீங்கள் மட்டுமே நடமாடும் முதல்வர், விடியா அரசை வீழ்த்த விக்கிரவாண்டிக்கு அழைக்கிறார்” என்ற வாசகங்கள் கொண்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன. இதனை பார்த்த உடன்பிறப்புகள் டென்ஷனில் உள்ளனர்.

News October 26, 2024

Recipe: வரகரிசி உப்புமா செய்வது எப்படி?

image

கடாயில் நெய் விட்டு சூடானதும் கடுகு, கடலை, உளுந்து போட்டு தாளிக்கவும். பின் நறுக்கிய வெங்காயம், பச்சைப் பட்டாணி, கேரட், பீன்ஸ், ப.மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும். இதில், ஒரு கப் வரகரிசி போட்டு இரு கப் நீர் ஊற்றவும். நன்றாக கொதித்ததும் உப்பு, கறிவேப்பிலை, மல்லி, மஞ்சள் & பெருங்காயம் சேர்த்து பாத்திரத்தை மூடி, அடுப்பை சிம்மில் வைக்கவும். 10 நிமிடம் கழித்து இறக்கினால் சுவையான வரகரிசி உப்புமா ரெடி.

News October 26, 2024

கவர்னராக ரவியே தொடர வேண்டும்: எச். ராஜா அடம்

image

தமிழக கவர்னர் ஆர்.என். ரவியின் பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில், அடுத்த கவர்னராக வி.கே. சிங் நியமிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்த எச். ராஜா, “அனைவரும் ஒரு விஷயத்தை புரிஞ்சிக்கணும். பஞ்சாபை போல தமிழகமும் நாட்டின் எல்லையை ஒட்டியுள்ள மாநிலம். இங்கு பிரிவினைவாத சக்திகள் அதிகம். இதை அடக்குவதற்கு, ரவி போன்ற ஒரு கவர்னர்தான் இருக்க வேண்டும்” எனக் கூறினார்.

News October 26, 2024

இருமுடி பைகளை விமானத்தில் எடுத்துச் செல்லலாம்!

image

சபரிமலை செல்லும் பக்தர்கள் விமானத்தில் செல்லும்போது நெய், தேங்காய் அடங்கிய இருமுடி பைகளைக் கொண்டு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இருமுடி பைகளை 2025 ஜன. 20ஆம் தேதி வரை எடுத்துச் செல்ல சிவில் விமான பாதுகாப்பு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. அதே நேரம், எக்ஸ்ரே, இடிடி மூலம் இருமுடி தேங்காய் பைகள் ஆய்வுக்கு உட்படுத்திய பிறகே பக்தர்கள் எடுத்து செல்ல முடியும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News October 26, 2024

30 நொடிகளில் உலகைச் சுற்றி…

image

➤ரஷ்யா மீது செர்பியா பொருளாதார தடைகளை விதிக்காது என்று அந்நாட்டு அதிபர் வூசிக் தெரிவித்தார். ➤பாகிஸ்தானில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். ➤கமோரா போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் லூய்கி கொலம்பியாவில் கைதானார். ➤ஜப்பானில் தொடர்ந்து 153ஆவது நாளாக வெயில் 25°C-ஐ தாண்டியது. ➤ஈரான் ராணுவ நிலைகளைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளது.

News October 26, 2024

ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் கொய்யா தேநீர்

image

நீரிழிவு நோய்க்கு மூலக்காரணமான ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த ஆற்றலைக் கொண்ட பானமாக ஜப்பான் சுகாதாரத்துறையால் அங்கீகரிக்கப்பட்டது கொய்யா இலை தேநீர். கொய்யா இலைகள், மஞ்சள், சுக்கு, ஏலக்காய் (சிட்டிகை) ஆகியவற்றை நீரில் கலந்து, 10 நிமிடங்கள்
கொதிக்க வைத்து வடிகட்டி, தேன் சேர்த்தால் மணமிக்க சுவையான கொய்யா இலை தேநீர் ரெடி. இந்த டீயை பருகுவதால் LDL கொலஸ்ட்ரால் அளவும் குறையும் எனக் கூறுகின்றனர்.

News October 26, 2024

யாரெல்லாம் நட்ஸ் சாப்பிடலாம், யாரு சாப்பிடக் கூடாது?

image

உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் இருப்பவர்களும், இதய அறுவை சிகிச்சை செய்தவர்களும், இதய பிரச்னை உள்ளவர்களும் நட்ஸ் சாப்பிட வேண்டாமென மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். உடலில் கொழுப்பின் அளவு 300க்கு மேல் இருந்தால், அவர்கள் நட்ஸ் சாப்பிட வேண்டாம். மற்றவர்கள் காலை எழுந்தவுடன் நட்ஸை எடுத்துக் கொண்டால் உடலுக்கு புரதச்சத்து, நார்ச்சத்து கிடைப்பதோடு, செரிமானம் சுலபமாக இருக்கும் என்கிறார்கள்.

News October 26, 2024

விளையாட்டு துளிகள்

image

➤உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: U-23 மகளிர் ‘பிரீஸ்டைல்’ 53 Kg பிரிவில் இந்திய வீராங்கனை அஞ்லி, வெள்ளிப்பதக்கம் வென்றார். ➤உலக செஸ் தரவரிசையில் இந்திய வீரர் அர்ஜுன் 2802.1 புள்ளிகளுடன் 3ஆம் இடத்தைப் பிடித்தார். ➤ஜோகர் கோப்பை: இந்தியா, நியூசிலாந்து ஹாக்கி (U 21) அணிகள் மோதிய கடைசி லீக் போட்டி 3-3 என ‘டிரா’ ஆனது. ➤AUS டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் ரோஹித் ஷர்மா தலைமையிலான IND அணி அறிவிக்கப்பட்டது.

News October 26, 2024

இஸ்ரேலுக்கு அமெரிக்கா திடீர் எச்சரிக்கை..!

image

இஸ்ரேலுக்கு அதன் நெருங்கிய கூட்டாளியான அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் தாக்குதலுக்கு பதிலடியாக அந்நாட்டின் மீது இஸ்ரேல், இன்று அதிகாலை முதலாக கொடூரத் தாக்குதலை நடத்தி வருகிறது. ஈரானின் எண்ணெய் கிணறுகள் சிதறடிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஈரானில் உள்ள அணு உலைகள் மீது எக்காரணம் கொண்டும் தாக்குதல் நடத்தக் கூடாது என இஸ்ரேலை அமெரிக்கா எச்சரித்துள்ளது.

News October 26, 2024

FLASH: நாளை ரேஷன் கடைகள் திறந்திருக்கும்

image

ரேஷன் கடைகள் நாளை (ஞாயிறு) திறந்திருக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. வருகிற 31ஆம் தேதி தீபாவளி ஆகும். அதனை முன்னிட்டு அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருள்களை தங்குதடையின்றி மக்கள் வாங்க ரேஷன் கடைகள் நாளை திறந்திருக்கும் என்றும், அதற்கு பதிலாக நவம்பர் 16இல் அக்கடைகளுக்கு விடுமுறை நாள் என்றும் அரசு தெரிவித்துள்ளது. இந்தத் தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.

error: Content is protected !!