news

News December 5, 2024

அரையாண்டு தேர்வு மற்றும் விடுமுறை.. முக்கிய தகவல்

image

மழை பாதிப்பால் அரையாண்டு தேர்வு அட்டவணையில் எந்தவித மாற்றமும் இல்லை என்று அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மழையால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மட்டும் அரையாண்டு தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு ஜனவரி முதல் வாரத்தில் தேர்வு நடத்தப்படும். மற்ற மாவட்டங்களில் திட்டமிட்டபடி டிச.9 முதல் 23 வரை அரையாண்டுத் தேர்வு நடைபெறும். 24ஆம் தேதி முதல் அரையாண்டு விடுமுறை அளிக்கப்படும் என அறிவித்துள்ளார்.

News December 5, 2024

குழந்தைகளுக்காக UK அரசு சூப்பர் முடிவு..!

image

சிறுவயதிலேயே உடல் பருமன் உள்ளிட்ட பல நோய்களை கொண்டு வரும் JUNK FOOD சார்ந்த விளம்பரங்களை பகல் நேரங்களில் ஒளிபரப்ப UK அரசு தடை விதித்துள்ளது. 2025 அக்டோபரில் இந்த தடை அமலுக்கு வர உள்ளது. குழந்தைகளை குறிவைத்து மார்க்கெட் செய்யப்படும் Pan Cakes, Waffles, Muffins, Pastry உள்பட பலவற்றின் விளம்பரங்களை இரவு 9 மணிக்கு மேல் மட்டுமே ஒளிபரப்ப அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் இது கொண்டுவரப்படுமா?

News December 5, 2024

‘புஷ்பா 2’ BGM-ல் சாம் சிஎஸ் போட்டது எவ்வளவு?

image

‘புஷ்பா 2’ படத்தில் வரும் பின்னணி இசையில் 90% தன்னுடையது என சாம் சிஎஸ் தெரிவித்துள்ளார். ஸ்க்ரிப்ட்டை படிக்காமல் முழு படத்திற்கும் இசையமைத்த முதல் படம் இதுதான் எனவும், ரிலீஸ் தேதி நெருங்கியதால் எடிட்டிங் முடிந்ததும் விரைவாக இசையமைக்கச் சொல்லி தயாரிப்புத் தரப்பு தன்னை அணுகியதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், ஒரு சில சீன்களில் DSP-யின் இசை பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

News December 5, 2024

மீண்டும் ஒரு புயல் உருவாகுமா? .. வானிலை மையம் விளக்கம்

image

தெற்கு மத்திய வங்கக் கடலில் நாளை மறுநாள் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பிருப்பதால், மீண்டும் புயல் வருமா என மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதுகுறித்து வானிலை மையம், காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு – வட மேற்கு திசையில் நகர்ந்து தமிழக – இலங்கை கடலோரப் பகுதிகளை நோக்கி வரும். ஆனால், தமிழகத்திற்கு எந்த ஆபத்தும் ஏற்பட வாய்ப்பில்லை. ஒரு வாரத்தில் புயலுக்கு வாய்ப்பில்லை என கூறியுள்ளது.

News December 5, 2024

ஓபிஎஸ்-க்கு பதிலடி கொடுத்த செல்லூர் ராஜூ

image

ஜெ., ஆட்சியை தமிழகத்தில் மீண்டும் அமைப்போம் என்று சொல்ல தகுதியானவர்கள் நாங்கள்தான் என்று செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மக்கள் மனநிலை தற்போது தமிழக அரசுக்கு எதிராக மாறியுள்ளது. DMK அரசின் அலங்கோல நிலையை கண்டிக்க அவர்களது கூட்டணி கட்சிகள் யாரும் தயாராக இல்லை. ஜெ., ஆட்சியை அமைக்கும் தகுதி EPSக்கு தான் உள்ளது என்றும் OPSக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

News December 5, 2024

அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை

image

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெளுத்து வாங்கிய கனமழைக்கு வானிலை பிரேக் விட்டாலும், ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி, 8 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அலர்ட் கொடுத்துள்ளது. நாமக்கல், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம், கரூர், திருச்சி, மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணித்துள்ளது.

News December 5, 2024

PROBA-3 செயற்கைக்கோள்கள் என்ன செய்யும்?

image

சூரியனின் வெளிப்புற Corona பகுதியை ஆய்வு செய்ய அனுப்பப்பட்டுள்ள PROBA-3 Satellite துல்லியமான இலக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இதில் இரண்டு பகுதிகள் உள்ளன. Coronagraph, Occulter. 150மீ இடைவெளியில், மெய்நிகர் செயற்கைக்கோளை போல இவை இரண்டும் வலம்வரும். செயற்கை சூரியக்கிரகணம் போல, Occulter சூரியனை மறைக்கும். இதனால் Coronagraph-க்கு சூரியனின் மேற்புறம் தெளிவாக தெரியும், படமும் துல்லியமாக கிடைக்கும்.

News December 5, 2024

2026இல் மீண்டும் அம்மா ஆட்சி: சசிகலா

image

2026இல் அம்மாவின் (ஜெயலலிதா) ஆட்சியை தமிழகத்தில் மீண்டும் அமைப்பேன் என வி.கே.சசிகலா சூளுரைத்துள்ளார். விழுப்புரத்தில் பேசிய அவர், வரும் சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி அதிகாரத்தில் இருந்து திமுக துடைத்தெறியப்படும் என்றார். அதிமுகவில் நிலவும் அனைத்து மனக்கசப்புகளும் நீங்கி அனைவரும் ஒன்றிணைவார்கள் என்று குறிப்பிட்ட அவர், 2026இல் அதிமுகவின் புதிய வரலாறு எழுதப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

News December 5, 2024

வாடகைக்கு BOY FRIENDS.. வேகமாக பரவும் கலாச்சாரம்!

image

வியட்நாமில் BOY FRIENDS-களை வாடகைக்கு விடும் தொழில் தற்போது கொடிகட்டி பறக்கிறது. உருவம், தோற்றத்துக்கு ஏற்ப, அவர்களின் வாடகைத் தொகை இருக்கும். “எப்போ கல்யாணம்” என நச்சரிக்கும் தங்கள் பெற்றோரை சமாளிப்பதற்காகவே பாய் ஃப்ரண்டுகளை பெண்கள் வாடகைக்கு எடுக்கிறார்கள். கல்யாண பேச்சு எழுந்தால், வாடகை பாய் ஃப்ரண்டுகளை காட்டி, தாங்கள் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக கூறி பெண்கள் சமாளித்து விடுகிறார்களாம்.

News December 5, 2024

அந்த பையனுக்கு பயம் இல்ல: ஸ்டார்க்

image

ஜெய்ஸ்வால் இன்றைய தலைமுறையின் பயமறியாத முக்கிய இளம் வீரர்களில் ஒருவர் என ஆஸி. பவுலர் மிட்செல் ஸ்டார்க் புகழ்ந்துள்ளார். ஜெய்ஸ்வால் இந்தியாவிற்காக நீண்ட காலம் விளையாடுவார் என்றும், சூழலுக்கு ஏற்றவாறு தன்னை தகவமைத்து கொள்ளும் திறன் அவரிடம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தன்னுடைய பவுலிங் மெதுவாக வருவதாக ஜெய்ஸ்வால் கூறியது, உண்மையிலேயே தனக்கு கேட்கவில்லை எனவும் கூறியுள்ளார்.

error: Content is protected !!