India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நியூசி.க்கு எதிரான தோல்விக்கு எந்த ஒரு தனி நபரும் காரணம் அல்ல என கேப்டன் ரோஹித் ஷர்மா கூறியுள்ளார். இந்திய அணியில் பேட்டர்கள் சிறப்பாக செயல்படாததே தோல்விக்கு முக்கிய காரணம் என்றும், அதற்கு தனிப்பட்ட எந்த வீரரையும் பலிகடாவாக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார். இது ஒரு கூட்டுத்தோல்வி என்ற அவர், குறைகளை களைந்து அடுத்த போட்டியில் இந்திய அணி வெல்லும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
பிரான்ஸில் நடைபெற்று வரும் உலக டேபிள் டென்னிஸ் (WTT) தொடரில் இந்திய வீராங்கனை மனிகா பத்ரா காலிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளார். இதன்மூலம் WTT தொடரில் காலிறுதிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். தரவரிசையில் 30ஆவது இடத்தில் உள்ள அவர், 14ஆவது இடத்தில் உள்ள ருமேனியாவின் பெர்னாடெட் ஸ்ஸாக்ஸை 11-9, 6-11, 13-11, 11-9 என வீழ்த்தினார்.
எதிர்க்கட்சித் தலைவர் EPS-க்கு தேர்தல் காய்ச்சல் வந்து விட்டதால் உளறுகிறாரென சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் விமர்சித்துள்ளார். சேலத்தில் பேசிய அவர், “தேர்தல் நேரத்தில் முதல்வரால் பெறப்பட்ட மனுக்களில் 90% மனுக்கள் தீர்வு காணப்பட்டுவிட்டது. பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் முதல்வர் ஸ்டாலின் மக்கள் சந்திப்பு திட்ட முகாமை நடத்தி மக்களோடு நின்று இருந்து பணியாற்றி வருகிறார்” என்றார்.
IND-NZ இரண்டாவது டெஸ்டில் 3 நாளில் இரு அணிகளும் சேர்ந்து 40 விக்கெட்டுகளை இழந்தன. இதில் இந்தியா சார்பில் 20 விக்கெட்டுகளையும் ஸ்பின்னர்களே வீழ்த்தினர். அஸ்வின் 5, ஜடேஜா 3, வாஷிங்டன் சுந்தர் 11 விக்கெட்டுகளை வீழ்த்தினர். பும்ரா 14, ஆகாஷ் தீப் 6 ஓவர்கள் வீசி ஒரு விக்கெட்டைக் கூட கைப்பற்றவில்லை. நியூசி., தரப்பிலும் வேகப்பந்து வீச்சு பெரிதாக எடுபடவில்லை. ஸ்பின்னர்களே ஆதிக்கம் செலுத்தினர்.
தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழையும், கடலூர், பெரம்பலூர், நாமக்கல், தேனி, திண்டுக்கல், கோவை, விருதுநகர், மதுரை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்று கணித்துள்ளது.
*நெஞ்சு சளி: தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆற வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.
*தலைவலி: ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம் சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.
*தொண்டை கரகரப்பு: சுக்கு, பால், மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.
தவெக மாநாட்டுக்கு வரும் விஜய், ரோடு ஷோவை தவிர்க்க வேண்டும் என காவல்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாளை விக்கிரவாண்டியில் தவெக மாநாடு நடைபெற உள்ள நிலையில், அதற்கான இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. விஜய் புதுவை வழியாக மாநாட்டுத் திடலுக்கு வர திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ரோடு ஷோவில் ஈடுபட வேண்டாம் என போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
‘Thug Life’ படத்தின் ஷூட்டிங் முடிந்து விட்டதாக சமீபத்தில் படக்குழு அறிவித்தது. ஆனால், சிம்பு – த்ரிஷா இடையிலான ரொமாண்டிக் பாடலை படமாக்க வேண்டியது இன்னும் பாக்கி இருப்பது தெரியவந்துள்ளது. நவம்பர் முதல் வாரத்தில் இயக்குநர் மணிரத்னம், அப்பாடலை படமாக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தில் இருவருக்கும் இடையிலான கெமிஸ்ட்ரி அனைவராலும் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்டில் தோல்வியடைந்த இந்திய அணி, டெஸ்ட் தொடரை 2 – 0 என்ற கணக்கில் இழந்துள்ளது. இதனால், 12 ஆண்டுகளுக்குப் பின் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை தவற விட்டுள்ளது. முன்னதாக கடந்த 2012ல் இந்தியாவில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்தது. இங்கிலாந்துக்கு எதிராக 1 டெஸ்ட் உட்பட இந்த ஆண்டு மட்டும் இந்திய அணி சொந்த மண்ணில் 3 தோல்விகளை பதிவு செய்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து கூட்டுறவு விற்பனை பண்டக சாலைகளில் வரும் 28ஆம் தேதி முதல் தீபாவளி சிறப்பு மளிகைப்பொருள் தொகுப்பு விற்பனை செய்யப்படுகிறது. வெளிச்சந்தையில் கிடைப்பதை விட, மிக குறைந்த விலையில் பிரீமியம் ₹199 மற்றும் எலைட் ₹299 என இரண்டு வகையாக விற்கப்படும். இந்த மளிகை தொகுப்புகள், ஏழை எளிய மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.