India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
✒ 1728: ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளை கண்டுபிடித்த ஜேம்ஸ் குக் பிறந்த நாள்
✒ 1920: முன்னாள் குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணன் பிறந்த நாள்
✒ 1941: நடிகர் சிவகுமார் பிறந்தநாள்.
✒ 1947: இந்திய மண்ணில் பாகிஸ்தான் ராணுவம் முதல் தாக்குதலை நடத்தியது.
✒ 1977: இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் சங்ககாரா பிறந்தநாள்
✒ 1984: இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் இர்பான் பதான் பிறந்தநாள்
ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். இப்படத்தில் நடித்தபோது நயன்தாரா மீது உங்களுக்கு காதல் வந்ததா? என ரசிகர் ஒருவர் சமூகவலைதளத்தில் கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு ஷாருக்கான் ” வாயை மூடுங்கள். அவர் இப்போது 2 குழந்தைகளுக்கு தாய் ” என்று கோபத்துடன் பதில் அளித்துள்ளார். தாய்மையை போற்றும் ஷாருக்கின் இந்த பதிலை பலரும் பாராட்டி வருகின்றனர். உங்கள் கருத்தை கீழே பதிவிடுங்க
இன்று (அக். 27) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியிருப்பதற்கு நியூசி. அணிக்கு சச்சின் வாழ்த்து தெரிவித்துள்ளார். எக்ஸ் பக்க பதிவில் அவர், இந்தியா வரும் ஒவ்வொரு அணிக்கும் டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டும் என்பது ஒரு கனவாக இருக்கும் என்றும், ஆனால் நியூசி. அணி சிறப்பாக விளையாடி அதை சாத்தியம் ஆக்கியுள்ளது என்றும் கூறியுள்ளார். 13 விக்கெட்டுகளை சாய்த்த நியூசி. வீரர் சான்ட்னருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
RSS பாஷையில் பீகாரை ஆளும் ஜேடியூ கட்சி பேசுவதாக ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் விமர்சித்துள்ளார். கலவரத்தை தூண்டவும், பிரிவினையை ஏற்படுத்தவும், 2 சமூகத்தினர் இடையே மோதலை உண்டாக்கவும் RSS , ஜேடியூ விரும்புவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். வேலைவாய்ப்பு, கல்வி, விவசாயம் குறித்து தாங்கள் பேசுவதாகவும், ஆனால் பாஜகவோ ஹிந்து-முஸ்லிம், பாக்- காஷ்மீர் குறித்தே பேசுவதாகவும் அவர் சாடியுள்ளார்.
சண்டை நிறுத்தத்திற்கு எப்போதும் தயாராக இருப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ருவான் அஜார், இஸ்ரேலில் தாக்குதல் நடத்தினால் அதற்கு விலை காெடுத்துதான் ஆக வேண்டும் என்று குறிப்பிட்டார். பிணைக் கைதிகளை விடுவித்து ஆயுதத்தை ஹமாஸ் கீழே போட்டால் சண்டை நிறுத்தத்திற்கு இஸ்ரேல் தயார் என்றும் கூறினார்.
இன்று (அக்.27) காலை 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் பட்டியலை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, புதுக்கோட்டை, தஞ்சை, அரியலூர், திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் காலை 4 மணி வரை இடி-மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. தேனி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கணித்துள்ளது. SHARE IT.
இன்று (அக். 27) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
இஸ்ரேல் தாக்குதல் குறித்து ஈரானுக்கு ரஷ்யா முன்கூட்டியே எச்சரித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இஸ்ரேல் மீது ஈரான் அக்.1இல் 100க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசியது. இதற்கு பதிலடியாக ஈரானில் இஸ்ரேல் நேற்று தாக்குதல் நடத்தியது. இதில் 4 வீரர்கள் இறந்ததாக ஈரான் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் நடப்பதற்கு சிலமணி நேரத்துக்கு முன்பு, தனக்கு கிடைத்த உளவு தகவலை ஈரானிடம் ரஷ்யா பகிர்ந்ததாக கூறப்படுகிறது.
அமேசான் பிரைமில் Leonardo Dicaprio சிறந்த படங்கள் உள்ளன. அவருக்கு ஆஸ்கர் வாங்கி கொடுத்த ‘The Revenant’ மிஸ் பண்ணக்கூடாத சர்வைவல் படம். உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டது J.Edgar. The Aviator பயோபிக் திரைப்படமாகும். கிரைம் படமான Catch Me If You Can ஜியோ சினிமாவிலும் காணலாம். The Basketball Diaries மற்றுமொரு கிரைம் திரைப்படம். பிசினஸ் செய்பவர்கள் தவற விடக்கூடாத படம் The Wolf of Wall Street.
Sorry, no posts matched your criteria.