India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சர்கார் படத்தின் ஆடியோ லாஞ்ச்சில் பேசிய விஜய், தான் முதல்வரானால் நடிக்க மாட்டேன் என்றார். ‘எதிர்க்க ஆளே என்ற எண்ணமே ஜனநாயகத்தின் முதல் ஆபத்து” என படத்திலும் டயலாக் பேசினார். 2021 உள்ளாட்சித் தேர்தல் வெற்றிக்கு பின், “எதிர்க்கட்சியே இல்லாத ஆளுங்கட்சி என்று இறுமாப்பு கொள்ளும் எண்ணம் எனக்கு இல்லை” என CM ஸ்டாலின் கூறினார். விஜய்யின் வசனத்தை வைத்தே முதல்வர் இவ்வாறு சொன்னதாக த.வெ.கவினர் கூறுகின்றனர்.
விஜய்யின் தவெக மாநாட்டில் 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தி திணிப்பு, ஒரே நாடு ஒரே தேர்தல், நீட் தேர்வுக்கு எதிர்ப்பு, மின் கட்டணம், சட்டம் ஒழுங்கு பிரச்னை, மகளிர் பாதுகாப்பு, தமிழ் மொழியில் பயின்ற மாணவர்களுக்கு வேலைவாய்ப்பில் முக்கியத்துவம், மகளிர் – குழந்தைகள் பாதுகாப்புக்கு தனிச் சட்டம் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளன.
தவெக மாநாட்டுக்கு சென்றவர்களில் 3 பேர் இதுவரை விபத்தில் உயிரிழந்திருக்கிறார்கள். பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்த பாஜக நிர்வாகி வினோஜ் பி. செல்வம், “மாநாட்டுக்கு செல்லும் வழியில் உயிரிழந்தவர்களுக்கு விஜய் இழப்பீடு வழங்க வேண்டும். விஜய்யும், விஜய் ரசிகர்களும் இது ரீல் இல்லை ரியல் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
தவெக மாநாடு தொடங்கிய நிலையில், மாநாட்டு மேடைக்கு விஜய் இன்னும் சில நிமிடங்களில் வர இருக்கிறார். தொண்டர்கள் வருகையால் மாநாட்டு திடல் முழுவதும் நிரம்பியுள்ளது. தொண்டர்கள் பல மணி நேரமாக கடும் வெயிலில் அமர்ந்துள்ளதால் விஜய் முன்கூட்டியே உரையாற்ற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 4 மணிக்குள்ளாகவே விஜய் தனது உரையை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெயரிலேயே வி வைத்திருக்கும் விஜய் திரையில் அறிமுகமானது வெற்றி படத்தில். அடுத்து அரசியலில் கால்பதிக்க முடிவெடுத்து, தொடங்கிய கட்சிப் பெயரிலும் வி உள்ளது. அதேபோல, முதல் மாநாடு நடைபெறும் இடம் வி சாலை, விக்கிரவாண்டி, விழுப்புரம். இதிலும் 3 வி உள்ளது. எழுதிய கடிதத்திலும் வி சாலை என்னும் வெற்றிச் சாலையில் விரைவில் சந்திப்போம் என்கிறார். விஜய்க்கு அப்படி என்ன வி சென்டிமென்ட் இருக்கிறதோ?
லைகா நிறுவனம் தயாரித்த ‘கத்தி’ படம், பெரும் நெருக்கடிக்கு பின்பே வெளியானது. ஆடியோ லாஞ்சில் பேசிய விஜய், “தமிழ்நாடு – தமிழன்… நான் தியாகியும் இல்ல, துரோகியும் இல்ல” என்றார். பட வெற்றிக்கு பின், “நாம என்ன ஆயுதத்தை எடுக்க வேண்டுமென எதிரிதான் தீர்மானிக்கிறான். அன்பா பேசுனா அன்பு. வேற மாதிரி பேசுனா வேற மாதிரிதான் பேசவேண்டும்” என்றார். அதிலிருந்து பட நிகழ்ச்சிகளில் அரசியல் பேசி வருகிறார் விஜய்.
➤வாழைப்பழத்தின் காம்புப் பகுதியை சில்வர் ஃபாயில் பேப்பரில் சுற்றி வைத்தால், 4 நாள்கள் வரை கருக்காமல் அப்படியே இருக்கும். ➤உப்பு கலந்த நீரில் ஊற வைத்துவிட்டு வேக வைத்தால் கிழங்குகள் சீக்கிரம் வெந்துவிடும். ➤இட்லி சுடும்போது மாவில் சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி, இட்லி சுட்டால் மிருதுவாக இருக்கும். ➤முட்டைகோஸில் உள்ள தண்டை வீணாக்காமல், சாம்பாரில் போட்டு சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.
2011-ம் தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவை அளித்திருந்தார் விஜய். ஆனால், ‘தலைவா’ படத்தில் இருந்த ‘Time to lead’ என்ற டேக் லைன் அதிமுகவில் இருந்து நெருக்கடியை கொடுத்தது. பிற மாநிலங்களில் படம் வெளியான போதிலும், தமிழகத்தில் வெளிவர தாமதமானது. அப்போது முதல்வர் ஜெயலலிதாவின் உதவியை நாடி விஜய் பேசிய வீடியோ இன்றளவும் வைரல். இதுவே விஜய்யை அரசியல் நோக்கி பயணிக்க வைத்தது என்று சொல்லலாம்.
தர்மசங்கடமான விஷயத்தை வெளிப்படுத்த கடுமையான வார்த்தையை பயன்படுத்தாமல் மென்மையாக எடுத்தியம்புவதை Euphemism என அழைக்கின்றனர். கிரேக்க மொழியில் இருந்து Euphemia என்ற சொல்லில் இருந்து இந்த சொல் உருவானதாக சொற்பிறப்பியல் அகராதி கூறுகிறது. எடுத்துக்காட்டாக நிறுவனத்தில் பலரை Dismiss செய்து வீட்டுக்கு அனுப்பப் போவதை Downsizing என்று நாசூக்காகக் குறிப்பிடுவதை Euphemism எனலாம்.
பிரபாகரனை தான் வைத்திருப்பதால் விஜய் வைக்கவில்லை என சீமான் தெரிவித்துள்ளார். தவெக மாநாட்டில் உள்ள கட் அவுட்கள் அரசியல் எனக் கூறிய அவர், தவெக மாநாடு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்றார். மேலும், அம்பேத்கரின் கட் அவுட் வைப்பது பெரிதல்ல எனவும், அவரின் கருத்துக்களை எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் தெரிவித்தார். தவெக மாநாட்டில் பெரியார், காமராஜர், அம்பேத்கர் உள்ளிட்டோரின் கட் அவுட்கள் இடம்பெற்றுள்ளன.
Sorry, no posts matched your criteria.